Thursday, November 16, 2017

Spirit of Wipro








                                       விப்ரோவின் வழிமுறை 

                வாடிக்கையாளரின் வெற்றிக்கு உணர்வுபுர்வமாய் செயல்படுவோம்.
                ஒவ்வொருவரையும் மரியாதையுடன் நடத்துவோம்.
                உலகமயமான எண்ணத்தோடு பொறுப்புடன் திகழ்வோம்.
                சிறிதளவும் நேர்மை தவறாமல் நம் எல்லா பணிகளையாற்றுவோம்.
 
                                      Wiprovin vazhimurai
vadikaiyalarin vetrikku unarvupurvamai  seyalpaduvom.
ovvoruvaraiyum mariyathaiydan nadathuvom.
ulagamayamana ennathodu poruppudan thigazhvom.
sirithalavum nermai thavaramal nam panigalaiyatruvom.




         

Tuesday, February 28, 2017

அட்லாண்டா - பயணம் குறிப்பு

           
                       அட்லாண்டா  - பயணம் குறிப்பு   பெப்ரவரி  3 - 6

   கார்த்திக் ஒரேகோன் இருந்து அட்லாண்டா சென்ற பிறகு பல நாட்களாய் அங்கு வரும் படி தினமும் அழைத்து கொண்டிருந்தார்.நானும் இந்தியா செல்கிறேன் "கம்பெனிக்கு கட்டுப்படி" ஆகாது என்று தட்டிக்கழித்துக்கொண்டிருந்தேன் . ஆனால் நான் நினைப்பதும் இறைவன் நினைப்பதும் வேறு. என் சுயநலமும் ஒரு அன்பிற்கு உரிய நண்பி- ஸஹார்  மற்றும் குடிகார சகோதரனுக்கு என் தேவை இருப்பதாக நானே நினைத்துக்கொண்டு என் குடும்பத்தை கடவுளின் காலடியில் விட்டுவிட்டு இங்கு இருக்க நினைத்துவிட்டேன். இருப்பது என்றான பிறகு ஒரு பயணம் செல்ல மனம் ஏங்கியது. புது வருட மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் எங்கும் செல்லாததால் இந்த பயணம் தேவைப்பட்டது.
 பயணத்திற்கு  ஆயிரம் காரணங்கள் தேடலாம் ஆனால் பயணத்தை தவிர வாழ்வதற்கு வேறு காரணம் தேவையா?


ஒரு பனிவிழும் நாளாக எதிர்பார்க்க பட்ட அன்று  இரவில் மழையாக பொழிந்து இரவில் ஊரை கழுவி விட்டது போல சாலைகளும் மரங்களும் ஒரு புதிதாய் அன்று தான் யாரோ கொண்டுவந்து நட்டது போல புன்னகைத்தது! கோகுல் என்னை fair complex ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட்ட பிறகு அவனுக்கு  நான் விடை கொடுத்துவிட்டு trimet காத்திருந்த பொழுது பயண குதூகலம் மனதில் தொற்றிக்கொண்டது. ரயில் பயணத்தில் Things  fall  apart  படித்து கொண்டு விமான நிலையம் வந்து சேர்ந்து விமானத்தில்  ஏறிய பொழுது தான் மனதில் பழைய நினைவுகள் மெல்ல பின்னோக்கி செல்ல தொடங்கியது.

 டல்லாஸ் இருதயன் பிறந்த ஊர் நானும் ரோஜாவும் சுமார் இரண்டு வருடங்கள் வாழ்ந்த இடம் , ஒரு இனிய மழைநாளில் வசந்த காலத்தில்  இருதயன் பிறந்தான்.  அந்த  forest park சிறுவர்  மருத்துவமனை மாடியில் இருந்து அவனை கையில் வைத்துக்கொண்டு மழை மேகங்களை கண்ட நினைவு மனதில் இன்றும் பதிந்துள்ளது. அன்று அமெரிக்காவில் வாழ்ந்த ஆனந்துக்கும் இன்று இருக்கும் ஆனந்த் நிறைய வேறுபாடுகள் . வாழ்க்கை தலை மயிரையும் மட்டும் வெளுப்பதில்லை மனதையும் சற்றே துவைத்து காயவைத்து வெண்மை அடைய செய்கிறது.
பின்பு L1B விசா முடிந்து  10 மாத குழந்தையுடன் இந்தியா திரும்பிய பொழுது அமெரிக்காவிற்கு திரும்பி வருவேன் என்ற எண்ணம் இருந்தது ஆனால் அதில் நம்பிக்கை இல்லை. இன்று காலம் புரட்டிப்போட்டு என்னை இன்று போர்ட்லேண்ட் வாழ வைக்கிறது.இன்று இருக்கும் எண்ணங்கள் அன்று இருந்திருந்தால் வாழ்க்கை அமெரிக்காவில் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.ஆனால் இது தான் உன் பயணம் என வகுத்த பிறகு அதை மாற்றும்  வல்லமை உன்னிடம் இல்லை என்பதே உண்மை.

டல்லாஸ் இருந்து அட்லாண்டா பயணம் தொடர்ந்தது அதனுடே எண்ணங்களும் திருமணம் ஆனா  புதிதில் சேகர் பார்க்க அட்லாண்டா  வந்ததும் ஆனால் அதன் பயணங்களில் ராக்கி மலைத்தொடர் சென்றதும் மற்றும் அட்லாண்டா நகரில் உள் விளையாட்டு அரங்கில் ரோஜா மலை ஏறியதும் சேகருடன் பாருக்கு சென்று குடித்தது தான் ஞாபகம் உள்ளது.


விமானம் அட்லாண்டாவில் தரை இறங்கிய பொழுது  இரவு ஒன்பது இருக்கும் ஜாக்கெட் அணியாமல் வெளியே சென்று அந்த தென் திசையின் இளம் குளிர் உடலை தழுவியது. கார்த்திக்கின் அந்த Honda  accord  வந்து நின்ற பொழுது மனதில் பயணத்தின் களைப்பு எங்கோ தொலைந்து  மனதில் ஒரு புத்துணர்ச்சி தொத்திக்கொண்டது.

காரில் எரிய பொழுது இரவில் வழியின் ஊடாக மரங்களின் வரிசையின் உணர முடிந்தது,காரின் விளக்கின் நிழலில் அவை எதோ ஒரு நிழலின் நடனம் போன்று ஆடிக்கொண்டு ஒரு சிறிய பயத்தை உணர செய்தது.
பின்பு பேச்சு தொடர்ந்து பல விடயங்கள் ஊடாக சென்ற கொண்டிருந்தது,
பின்பு கார்த்திக் தான் தந்தை ஆகா போவதை சொல்லிய பொழுது மனதார வாழ்த்திய பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி.அவரின்  முருக பெருமானின் வேண்டுதலும் கடவுள் மீது தான் இருந்த விரதங்கள் பயன் என்று தான் இப்பொழுது தோன்றுகிறது.
கடவுள்  இருக்கிறாரா இல்லையா என்ற என் மனதின் போராட்டங்களின் விடை கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் ஒரு இறை வழிபாடு மனதில் ஒரு நம்பிக்கையை தருகிறது என்பது உண்மை.


இரவு விடு சேர்த்து உறங்கி காலை தயாராகி  Tybee island  என்ற தீவிற்கும் மற்றும் Savannah பயணித்தோம்  பல போர்களையும் போராட்டங்களின் வரலாற்றை பறைசாற்றும் நகரத்தை நோக்கிய பயணம்.இரவில் நிழலை போல காட்சி படுத்திய மரங்கள் இளங்காலை வெயிலில் பச்சை நிறம் கொண்டு மிளிர்ந்தது.peachtree நகரத்தில் இருந்து புறப்பட பொழுது வழியெங்கும் acorn மற்றும் pine பச்சை நிறத்துடன் மரங்கள் சாலை எங்கும் அணிவகுத்து கொண்டிருந்தது. இலைகள் உதிர்ந்த போர்ட்லேண்ட் நகரங்கள் பொழிவுயிழந்து இருக்கும் பொழுது இங்கு பச்சை நிறம் மனதை ஆட்கொண்டது.



வழியில் காலை உணவை Dunkins donuts அதனுடன் காபி  குடித்த பொழுதே கிழக்கு நகரத்திற்கு வந்த உணர்வு கிடைத்து  பிறகு வெட்டி பேச்சுகளுடன் பயணத்தில்  டயபீ தீவு அடைந்த பொழுது மதியம் ஒரு மணி இருக்கும்.


அங்கு 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் பார்த்தோம் . இந்த கலங்கரை விளக்கம்  ஸ்பானிய மற்றும் உள்நாட்டு போரின் அடையாளமாக நிற்கிறது. இந்த தீவு அட்லாண்டிக் கடலின் வழியாக  சவன்னா ஆற்றின் முகத்துவாரத்துடன்  அமெரிக்கா கண்டத்திற்கு  நுழைய முடியும் என்பதால் இந்த  நிலம் புவியியல் சிறப்பு பெற்றது.மற்றும் சதுப்பு நிலங்கள் நிறைந்த காடுகள் கொண்டதால் இந்த தீவும் அங்கு இருந்த  fort pulaski என்ற ராணுவ கோட்டை முக்கிய பங்கு பெற்றது.




1861 - 1865 வரை உள்நாட்டு போரில் இந்த தீவும் கோட்டையும் மிக முக்கிய பங்கு வகித்தது. இந்த கோட்டையில் தளபதி(General David Hunter ) தான் முதலில் கறுப்பின வீரர்களுக்கு சுதந்திரத்தை அறிவித்தார்(emancipation ) . ஆபிரகாம் லிங்கன் இதை விரிவாக அமெரிக்கா நாடு முழுக்க அறிவித்தார். ஒரு தளபதியின் தொடக்கம் ஒரு ஜனாதிபதியை அடைந்தது.அமெரிக்கா வரலாற்றில் emancipation deceleration   மிக முக்கிய மாற்றத்தின் நிகழ்வு.






கோட்டையை பார்த்துவிட்டு ஒரு  சவன்னாஹா நகரத்தில்  இந்திய உணவு சாப்பிட்டிவிட்டு நகரை சுற்றி பார்க்க சென்றோம். நகரம் ஒரு ஸ்பானிய கலை வடிவத்துடன் பழைய  ஐரோப்பிய கட்டிடங்களுடன் ஒரு  17 -18 ஆம் நூற்றாண்டிற்கு சென்ற அனுபவத்தை தந்தது. குறுகிய தெருக்களும், செங்கற்களை கொண்ட கட்டிடங்களும்,  உயர்ந்த  தேவாலயமும்கற்கள் பாவித்த  தெருக்களும் , குதிரை சார்ட் வண்டிகளும், சிலைகளும் நீரூற்றும் கொண்ட பூங்காக்களும்   எளிதில் ஒரு நூறு ஆண்டுகள் பின் அழைத்து சென்றது. சவன்னாஹா பார்த்த அமெரிக்கா வெள்ளையர்கள் நான் மேற்கு கடற்கரை நகரங்களில் பார்த்தவரைகளை விட சற்றே வித்யாசமாக நீண்ட தாடைகள், சற்றே பெரிய கண்களும், அடர் வெள்ளையாக இல்லாமல் சற்றே ஒரு துளி மாநிறம் கலந்த மக்களை  காண முடிந்தது.பெண்களின் சற்றே மெலிந்து நல்ல உயரத்துடன் நிண்ட தாடைகளும் பொன்னிற கூந்தலுடன் பூங்காக்களில் பார்க்க முடிந்தது.






பின்பு குளிர் நகரை ஆட்கொள்ள தொடங்கியபொழுது ஆறு மணியளவில் புறப்பட்டு  பீச்ட்ரீ நகரம் வந்தடைந்த பொழுது இரவி பத்தரை இருக்கும், கார்த்திக் கார் ஒட்டியதால் இரவு யோகித் பாடம் சொல்லி கொடுக்க முடிந்தது. மகன்களுடன் பேச இந்த பாடம் சொல்லித்தருவது ஒரூ வாய்ப்பாக அமைகிறது.பல நாள் இரண்டு மணி நேரம் தொடர்ந்து  கைபேசி வழியாக சொல்லித்தருவது தலைவலி மற்றும் உடல் சோர்வு தந்தாலும் இது பிள்ளைகளுடன்  உறவி நிலைநிறுத்த ஒரு பாலம் அமைக்கிறது.




பின்பு காலை கார்த்திக் அறை நண்பர் உதவவேண்டி இருந்ததால் வெளியே கிளம்ப தாமதம் ஆகும் என்று தெரிந்ததால் நான் ஒரு பெருநடை சென்றேன், அன்று அந்த  மழை நாளில் சற்றே சாரலுடன் பீச்ட்ரீ சாலையில் ஓடியதும் தார் ரொட்டின்  கருமையை விட கருமையாய் ஒரு சிறு பாம்பு இறந்தும் மழை நீரில் உயிர்ப்புடன் காட்சியளித்தது.


பின்பு காலை என் பயணத்தின் நோக்கமாக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் நினைவிடத்தையும் அவரின் பிறந்த வளர்ந்த வீட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
உலகில் பல தலைவர்கள் இருந்திருக்கலாம் இனிமேலும்  பிறக்கலாம் ஆனால் M L K அவர்களை போன்ற தலைவரை காண்பது அரிது. இந்தியாவிற்கு வந்து காந்தி அவர்களின் அஹிம்சை கொள்கைகளை அமெரிக்காவில் பின் பற்றி ஒரு சமுதாய மாற்றத்தை கொண்டு வந்தவர். மக்கள் குடியுரிமை போராட்டத்தை நடத்தி கறுப்பர்களின் நாநூறு ஆண்டுகள் அடிமைத்தனத்தின் சங்கலியை முறிக்க முயன்று பல வெற்றிகளை கண்டார். கறுப்பினரின் போராட்டத்தின் விளைவாக தான் 1868 உள்நாட்டு போருக்கு பிறகு 14 ஆவது சட்டத்திருத்தம் காரணமாக தான் அமெரிக்காவில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க படும் என்று அறிவிக்கப்பட்டது . அதன் விளைவாக  தான் என் மகன் இருதயன் குடியுரிமை கிடைத்தது. 1868 குடியுரிமை கிடைத்தாலும் 1965 தான் நிற  வேறுபாடுகளை விலக்கி  MLK அவர்களும் மற்ற போராட்டத்தின் விளைவாக சம உரிமை கிடைத்தது. அது மற்றும் இன்றி ஐரோப்பிய இருந்து மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற முடிந்தது. அதனால் ஒவ்வொரு இந்தியனும் கறுப்பின போராட்டத்தின் ரத்தம் சிந்தி உயிர் துறந்த மக்களுக்கு நன்றி கடன் பட்டவர்கள். அவர்களை திருடர்களாகவும், கொள்ளையர்களாகவும், ஏழைகளாகவும் பார்ப்பது எவ்வளவு பெரும் கொடுமை.

ஆப்பிரிக்காவினரை முட்டாளாகவும் காட்டுமிராண்டிகளாக பார்க்க நாம் பழக்க படுத்த பட்டுவிட்டோம்,   3000 ஆண்டுகளுக்கு முன்பே அப்பிரிக்காவில்  அரசாங்கம் அமைத்து ஆண்ட தொல்  குடி மக்கள் அவர்கள். பல வெள்ளையரிகள் ஐரோப்பா கண்டத்தில் நிர்வாணமாக திரிந்த காலத்தில் கோட்டைகளை கட்டி ஆண்டவர்கள் கறுப்பர்கள். ஆனால் அவர்களின் வேர்களை அறுத்து அமெரிக்காவிற்கு கப்பலில் கொண்டுவந்து  "உயிர்கள் அற்ற ஆன்மா " என்று அடிமை படுத்தினர். 

 பல போராட்டங்களை முன்னடத்தி "I have a dream" என்ற போராட்டம் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது அந்த மாற்றம்  civil rights  act சட்டத்தில் நிற பிரிவை நிறுத்த சட்டம் இயற்றப்பட்டது.இந்த அற போராட்டத்திற்கு மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பட்டது. முப்பத்தைந்து வயதில் இந்த பரிசை பெற்றார்.  பின்பு தன்  போராட்டத்தை  எல்லா ஏழை மக்களுக்கும் , வியட்நாம் போர் எதிர்ப்பாக போராட்டத்தை பெரிதாக்கிய பொழுது தன்னுடைய முப்பத்தி ஒன்பதாம் வயதில் கொலை செய்யப்பட்டார்.  அவரின் வீழ்ச்சி கறுப்பினரின் போராட்டத்தின் வீழ்ச்சியாக  தான் பார்க்க முடியும். பல வருடங்களாக தன்  உயிருக்கு ஆபத்து உண்டு என்று தெரிந்து பல போராட்டங்களை முன்னெடுத்தி சென்றவர். ஒரு சிலர் வீழ்வதில்லை விதையாய் விதைக்க படுகின்றனர். அந்த விதையில் முளைத்த ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி நாம் விளையாடுகிறோம்.


பின்பு அங்கிருந்து civil rights museum சென்று அமெரிக்கா மக்கள் உரிமை போராட்டத்தின் வரலாற்றின் கண்காட்சியை பார்த்தோம். அங்கு Jim crow என்பவரின் நிற வெறி கொள்கைகளும் அதை செயல் படுத்த அரசாங்கம் கொண்டிருந்த திட்டங்களும் மிக கொடுமையானவை. கறுப்பர்களுக்கு தனி பள்ளிக்கூடம் , பேருந்துகளில் தனி இருக்கை , அதே இருக்கைக்கு வெள்ளையன் வந்தால் எழுந்து இடம் தரவேண்டும். அவர்கள் படிக்கும்  கல்லுரிகள் அனுமதி இல்லை என எதிலும் ஒரு பிரிவினை இருந்த வந்தது.அதன் படங்களும் கொள்கைகளும் பார்க்கும் பொழுது 1965  வரை இவர்களை பிரிவினை கொண்டிருந்தார்கள் என்பது ஒரு பேர் அதிர்ச்சி அளித்தது, 350 ஆண்டுகள் ஒரு சுதந்திர நாடாக அமெரிக்கா இருந்தது என்று சொல்லிக்கொள்ள முடியுமா?. ஒரு ஆடியோ வழியாக எப்படி கறுப்பறைகளை திட்டி தகாத வார்த்தைகள் கொண்டு பேசி அந்த இடத்தை விட்டு விரட்டினர்.அந்த பேச்சை அதை கேட்கும் பொழுது மனம் பெரும் வலி கொண்டது.ஒரு இரண்டு வார்த்தை நம்மை தாழ்த்தி பேசினால் நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது . இத்தகைய அடிமைமுறையும் பேச்சும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த காலத்தில் நாம் பிறக்காமல் இருந்தது ஒரு அதிர்ஷ்டம் என்றே கொள்ளவேண்டும்.பிறகு அங்கிருந்து அருகில் CNN அலுவலகத்தில் இருந்த Dunkins donuts காபி மற்றும் ஒரு flat bread  முட்டை   ரொட்டியம் donut சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு intel பழகிய பழைய நண்பர்களை சந்திக்க புறப்பட்டோம்.






முதலில் Monty அவர் வீட்டில் சந்தித்தோம், உலகில் நல்லவர்களாகவும்வாழ முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். Hillsboro நகரில்  cricket  விளையாடிய பொழுதை கழிக்க உதவியது அவரால் தான். ஒரு காலத்தில் இருபது பேர் வரை விளையாடியது ஞாபகம் உள்ளது. பின்பு அங்கிருந்து கோகுல் அவரின் வீட்டிற்கு சென்றோம். அவர் நான் என் சொல்லாமல் வந்தேன் என்று கோவித்து கொண்டார் பிறகு அவர் வீட்டில் NFL 
Falcons மற்றும் patriots  இறுதி போட்டி, இந்திய விடு என்றால் கிரிக்கெட் அமெரிக்கா என்றால் ஃபுட்பால் . அன்று அவர்கள் வீட்டில்  கோழி கறியுடன் இட்லி மற்றும் தோசை பரிமாறினர் அதற்கு முன்பு  அவர் மகன் சுதர்ஷன் மற்றும் முகுந்தன் இருவருக்கும் பதப்படுத்தி வைக்கப்பட்ட (frozen )பரோட்டா உண்டனர்.. விருந்தினர்களுக்கு நல்ல உணவை உபசரிப்பது தான் இந்திய மற்றும் தமிழர் பண்பாடு என்பது அமெரிக்காவிலும் அதை  உணர முடிந்தது. இந்தியர்களை இருப்பதும் பிறப்பதும் ஒரு பேறு என்பதை உணராமல் வாழ நம்மை நாமே பழகி கொள்கிறோம். நம்மால் முடிந்த வரை நம் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு போராடி கொண்டு செல்வது ஒவ்வொரு தந்தையின் கடமை.பிறகு வழியில் அனூப் மற்றும் அவனின்  மனைவி சந்தித்துவிட்டு வீடு  வந்து சேர்ந்தோம்.

மறுநாள் கார்த்திக் அலுவலகம் செல்வதால் அன்று தனித்த பயணம்.அமெரிக்காவிற்கு வந்து கோவிலுக்கு செல்லும் பழக்கம் விட்டுவிட்டது. போர்ட்லேண்ட் இருக்கும் கோவில்கள் எல்லாம் ஒரு வியாபர இடங்களில் "நடத்தப்படுவதால்" அங்கு செல்லும் விருப்பம் இருந்தது இல்லை. முக்கியமாக இந்திய உணவு விடுதி மற்றும் கடைகளுக்கு அருகே "coming soon " என்ற விளம்பரத்துடன் அனுமார் கோவில் திறக்க  பட்டது.அதன் வாசலில் "open" என்று neon விளக்கு மின்னுகிறது. கோவில் வாசலில் வாயில் பைரவர்களையும் விநாயகரையும் பார்த்த எனக்கு  விற்கப்படும் கடவுள் தேவைப்படவில்லை என்ற திமிர்!!. ஆனால் ஊருக்கு செல்ல முடியாமல் குடும்பத்தை பிரிந்து வாழ்தலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் இருக்கும் எனக்கு கடவுளின் காலடியை தவிர வேறு கதி உள்ளதோ
அட்லாண்டாவில் இருக்கும் முருகன் மற்றும் பல தெய்வங்களை தரிசிக்க சென்றேன். வழியில் இருந்து அந்த வெண் கோபரங்களையம் கொடி மரமும் வாசலில் நந்தி தேவனை காணும் பொழுது மனதில் பரவசம் உண்டானது.உள்ளே சென்று முதலில் விநாயகர் மற்றும் முருகனை வழிபட்ட பொழுது மனதில் ஒரு  பேரமைதி வந்து குடிகொண்டது. பின்பு சிவன் மற்றும் பெருமாளை தரிசித்து விட்டு அங்கே அமர்ந்திருந்த பொழுது அன்று வார  நாள்  என்பதால் கூட்டம் இல்லை. ஒரு ஜீன்ஸ் பாண்ட் மற்றும் குளிர் ஜாக்கெட் அணிந்த ஒரு தாயும் அமெரிக்காவில் பிறந்த பூக்கள் போட வெள்ளை  பாவாடை அணிந்த பதிம வயதிற்கு அடி எடுத்து வைக்கும் மகளும் பூக்கூடையுடன் பிறந்த நாளுக்கு வழிபட கோவிலுக்கு வந்திருந்தனர். அந்த பெண் இங்கயே பிறந்து வளர்ந்தவால் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. அவளுக்கு விபூதியம் குங்கமும இட்டு ஒவ்வொரு கடவுளாக நின்று வணங்கியது பார்ப்பது ஒரு கடவுளின் தரிசனம்எ, அந்த தாயின் பக்தியும் அமெரிக்காவில் வளர்ந்த அந்த பெண்ணின் பயமும் பக்தியும், அன்று பிறந்த  கன்றுக்குட்டியை போன்ற மிரண்டு பார்வையுடன் புதிதாய் கோவிலுக்கு வந்த உணர்வுடன் கடவுளை தொழுதாள்.


பிறகு கோவிலில் இருந்து புறப்பட்டு Senoia என்ற சிறு நகரம் சென்றேன். இந்த ஊர் walking dead  என்ற ஒரு அமெரிக்கா டிவி தொடர் இங்கு அரங்கம் அமைக்கப்பட்டு படம் எடுக்க பட்டதால் இந்த ஊர் பிரபலம். இல்லை என்றார் 84 நெடுந்சாலையில் இந்த ஊர் வரும் என்பதே யாருக்கும் தெரிந்திருக்காது. இப்பொழுது படப்பிடிப்பு நடக்காத்ததால் ஊர் அந்த பழைய அமைதியாக காட்சி அளித்தது.அன்று கதிரவன் கதிர்கள் ஊரில் உள்ள குளிரை விரட்ட முயன்று கொண்டிருக்க நான் அந்த நகர மையத்தில் உள்ளே அரும்பழைய பொருட்கள் விற்கும் கடைகளை பார்த்தபடி சுற்றித்திரிந்து அங்கிருந்த ஒரு பெரியவவருடன் ஊர் கதைகளை கேட்டு கொண்டிருந்தேன்.அனால் வயதானவர்களின் உதறும் மொழியும் தெற்கத்திய உச்சரிப்பும் பிடிபடவில்லை.பின்பு செநொய்யா நகர postcard வாங்கி அங்கிருந்து தபால் நியாயத்தில் இருந்து என் குடும்பத்திற்கு அனுப்பினேன். அவர்களால் தான் நான் தனியாக பல ஊர்களை பயணிக்க முடிகிறது. அதற்கு முன்பு ஊர் தெருவில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து நூற்றுக்கணக்கான குருவிகள் கூச்சல்கள் கேட்பதும் அவை கும்பலாக ஒரு மரத்தில் இருந்து தொலைவில் உள்ள மரங்களுக்கு பறப்பதும் கண்டுகளித்தேன்.







 பிறகு அங்கிருந்து புறப்பட்டு பீச்சிட்டி சென்றேன் யாரும் இல்லாமல் தனியாக திரிவது சற்று கடினமாக இருந்தது மாலை  ஐந்து  மணிக்கு தான் விமானம் அதனால் தனியாக அங்கு இருந்த  குளங்களையும் பூங்காக்களையும் சுற்றி வந்தேன். ஒரு fireman sandwich கடையில் புத்தகம் படித்து கொண்டே உணவு உண்டேன். பிறகு புறப்பட்டு கார்த்திக் அலுவலகம் சென்று அவர் என்னை விமான நிலையத்தில் இறக்கி விட்டார். திரும்பி வரும் பொழுது விமானத்தில் ஒரு பெண்மணி இரண்டு புத்தகங்களை மாற்றி மாற்றி படித்தார் அப்பொழுது தான் தெரிந்தது இப்படியும் புத்தகங்ளை படிக்க முடியும் என்று.நான் எப்பொழுதும் ஒரு புத்தகத்தை படித்து விட்டு தான் மறு புத்தகத்தை படிப்பேன். அடுத்த முறை முயன்று பார்க்கவேண்டும் எனக்கு இந்த பழக்கம் ஒத்துவருமா என்று?




நான்கு நாள் பயணம் என்பதால் சிறு பயணமாக தான் இருந்தது அனால் அது ஒரு பெரும் விடுதலையை உணர்வை ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கையில்  இருந்து ஒரு மாற்றம் தந்தது. பயணங்கள் வாழ்வின் ஒரு  வரங்களாக தான் பார்க்கமுடிகிறது. அடுத்த பயணத்தை எதிர்பார்த்து வாழும் ஒரு ஆன்மாவின் உளறல்கள்  தான் இந்த குறிப்பு.





                                                                                           என்றும் அன்புடன்  
                                                                                                ஆனந்த்