Saturday, September 17, 2016

மஞ்சள்பாறை கேம்பிங் பயணம்


                                             

மஞ்சள்பாறை கேம்பிங் பயணம்(செப்டம்பர் 2- 5)

                 

 காட்டை நோக்கி  பயணம் 


இந்த உலகில் நாம் இயற்கை நிலங்கள்,கோவில் தளங்கள்  பயணம் செய்ய விரும்பலாம்  ஆனால் இயற்கை நம்மை அழைக்காமல் நாம் செல்ல முடியாது .திருப்பதி மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு வருடங்களாக தடைகள் வந்தவன்னம்  இருக்கும் அனுபங்களை இந்திய குடும்பங்கள் கதைக்கதைகளாக கூறும் . அந்த  இயற்கை நிலங்கள்  தான் நம்மை தேர்வு செய்து அழைக்கின்றன . என் வாழ்வின் கனவு  பயணமாக இருந்த நிலம் மஞ்சள்பாறை காடு.சிறுவயது முதலே அமெரிக்கா நிலங்கள் என்றால் நினைவுக்கு வருவது நயாகரா மற்றும் மஞ்சள்பாறை. அமெரிக்கா புவியியலின் அடையாளம் மஞ்சள்பாறை. அந்த நிலம் என்னை அழைத்து என்க்கு  கிடைத்த  பேரு  என்றே  உணர்கிறேன். நன்கு பழகிய  மக்கள்யில்லாததால்  பயணம் செய்ய வேண்டியிருந்தது .

செப்டம்பர் 2 காலை 9 மணியளவில் காரை ஹெர்ட்ஸ் எடுத்தேன், Hyundai sonata  ஹைபிரிட் வண்டி கிடைத்தது.  கேம்பிங் பொருட்கள் எடுத்து வைத்துவிட்டு,  அறை  நண்பன் அங்கித்  வேறு வேலைக்காக  நிரந்தரமாக  ஆஸ்டின் செல்வதால் அவனை அன்று  வழியனுப்பி வைத்தேன். ஒரு வருடம் கூட வாழ்ந்த  வடக்கத்திய பிராமண வாலிபன். தானுண்டு தன் வேலையுண்டு என்றும் அறையில் இருந்தவன்  கிராமத்து மனிதன். கணனித்துறை ஒரு கிராமத்திலிருந்து அமெரிக்கா கனவு தேசம் அழைத்து செல்லும் வாய்ப்பு வழங்குகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் . அவனுடம் மற்றும் கோகுல்ராஜியிடம் சொல்லிக்கொண்டு பயணத்தை தொடங்க  GPS "yellostone west enterance " என்று போட்டபொழுது  சுமார் 870 மைல் என்று காட்டியது சற்றே மனதில் பரவசமும் அச்சமமும்  ஏற்பட்டது , அவ்வளவு தூரம் தனியாக பயணிப்பது முதல்முறை.

US 26 வழியாக  I 84 கிழக்கு நோக்கி பயணது  கார் சென்றது, I-84 வரலாறு சிறப்பு மிக்க பெருஞ்சாலை. Oregon trail  என்று அழைக்கப்பட்ட  தென்கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி தங்கம் மற்றும் விவசாயத்திர்க்காக  மக்கள் மாட்டு வண்டியிலும்  , குதிரை பாரவண்டி(wagon ) பயணித்த பாதை. ஓரகன் பாதை  "Way to the garden of the world " என்று 1845 யில் பயணித்த மக்களால் அழைக்கப்பட்டது.சுமார் 250000 மக்கள் இந்த வழியாக சுமார் 5 வருடங்களில் பயணித்தனர்.  oregon trail  இன்று I -84 ஆக  அதிவேக சாலையாக   கொளும்பியா(Columbia )  ஆற்றை ஒட்டிய சுமார் 200 மெயில் செல்கிறது. பயணம் முழுக்க ஆற்றையும். அதை ஒட்டிய  cascade  என்று அழைக்கப்படும் மலைத்தொடரும்  ஆறு ஓடும் பள்ளத்தாக்கை பார்த்தபடி பயணம் தொடர்ந்து. காலை உணவு சரியாக சாப்பிடாததால் 11.30 மணிக்கு   Dalles என்ற நகரின் ஒட்டியுள்ள ஓய்வு பகுதியில் சமைத்து எடுத்து சென்ற  வாழைக்காய் புளிக்குழம்பு உணவு உண்டேன்.பெரும் தூரம் பயணம் இருந்ததால் பயணம்  தொடர்ந்தது, பின்பு நதியை விட்டு விலகி தெற்கு நோக்கி பயணம் திரும்பியது , பின்பு  நிலம் மலை குன்று பாலைவனங்களாக எங்கும் மஞ்சள் போர்வையை விரித்தது  போன்ற இருந்தது. வழியெங்கும் காய்ந்த புல்லின் தங்க ஒளி கண்ணை நிரப்புகிறது. 

   


இரண்டு மணிநேர பயணத்திற்கு பிறகு 10 நிமிடம் ஒய்வுக்காக vista point(இயற்கை அழகை ரசிக்க சாலையோரத்தில் ஒதுக்கப்பட்ட இடம்)  நிறுத்தினேன். அப்பொழுது ஒரு honda accord  ஒரு பெண் காரை விட்டுஇறங்காமல் இருந்தாள்.பார்த்துவிட்டு செல்லலாம் என காத்திருக்கலாம் என  நிமிடங்கள் பிறகு நேரம் ஆகும் என்று  நான் புறப்பட்டேன் , சிறு நேர பயணத்திற்க்கு பிறகு   Honda  மின்னல் வேகத்தில் என்னை கடந்து சென்றது, தொடர்ந்து சென்று யார் என பார்த்த பொழுது அந்த vista point பார்த்த பெண்,ஒரு கையில் கைபேசி மறுகையில் ஸ்டேரிங் பிடுத்து  அவ்வளைவு சாலைகளில் அநாவசியமாக பல வண்டிகளை கடந்தாள். தனித்த பயணங்களில் சலிப்பு தட்டாமல் பயணிக்க  எனக்கு தெரிந்த  வழி , நன்கு வேகமாக செல்லும் காரை பின்தொடர்வது. அவர்கள் லைன் மாற்றி செல்வதை நாம் துரத்துவது ஒரு சிறு சாகச உணர்வை தரும். அவள் எதோ ஒரு சாலை திருப்பத்தில் சென்றவுடன் ,
பின்பு தனிமையின் பயணம் தொடர்ந்தது .கார்  பாம்பாற்றின் கரையில் உள்ள Ontario கடந்து  Idaho மாநிலத்தில் நுழைந்தது.  பாம்பு ஆறு தான் இடாஹோ மற்றும் ஒரேகோன் கிழக்கு எல்லைக்கோடு.  வழியெங்கும் பயிர்களை காண முடிந்தது , கோகுல்ராஜ் அடிக்கடி message செய்த்து விசாரித்தது என் பயணம் எந்த பிரச்சனை யில்லை என்று விசாரித்து  மற்றும் idaho உருளைக்கிழங்கு வயல்களை பற்றி கேட்ட பிறகு  தான் இடாஹோ அமெரிக்காவின் உருளைக்கிழங்கு களஞ்சியம் என்று ஞாபகம் வந்தது, கார் எண் பலகைகளில்  "sweet potatoes " "famous potatoes " என்று இடாஹோ வண்டிகளில் காணமுடிந்தது. இடாஹோவில் சாலை வேகம்  80 மைல் மற்றும் சமவெளி நிலம் என்பதால்  ஸ்கேலில்  கொடு போட்டது  நேர் கோடுகளாக இருந்தது. அதனால் காரை 90-95 சாதாரணமாக  ஓட்ட முடிந்தது.  சற்று நேரம் வரை பாம்பாற்றின் டெல்டா  நிலங்களில்  சோளம் கோதுமை பயிர்களை காணமுடிந்தது. 
சற்று நேரத்திற்கு பிறகு   கருப்பு Toyota Prius " மற்றும்  ஒரு 4x 4 டிரக் 100 மைல் வேகம் எடுத்து செல்வதை பார்த்தேன், பிறகு அந்த வண்டியை துரத்தும் நோக்கத்துடன் பயணம் தொடர்ந்தது. சுமார் மூன்று மணிநேர பயணத்தில் 10 நிமிட ஒய்வு தான் எடுத்திருந்தேன். ஆனால் காரை விரட்டும் பயணம் என்பதால் உடலில் உற்சாகம் தொற்றிக்கொண்டது . கார் idaho தலைநகரம்   Boise  நோக்கி செல்வதால்   நான்கு வழிச்சாலை 6 அல்லது  8 வழி சாலையாக மாறியது , Pirus  இரு பெண்கள் , செப்டம்பர் -அக்டோபர் மாதம் கல்லூரி தொடங்கும்   என்பதால் நிறைய  இளம் வயதினரை சாலையில் காணமுடிந்தது.சுமார் 1 மணிநேரம் 100 மைல் வேகத்தில் lane மாற்றி மாற்றி துறத்தும் பயணமாக கடந்தது.அதற்கு பிறகு பசி மற்றும் சோர்வு ஏற்பட்டதால் நான் உணவு உன்ன Mountain home என்ற சிற்றூரில் பெருஞ்சாலையில் இருந்து பிரிந்து ஊரில் இருக்கும்  pats desert inn என்ற உள்ளூர் உணவகத்தில் அலாஸ்கா மீன் வறுவலும் காபி சாப்பிட்டேன். பயணங்களில் எப்பொழுதும்  விரைவு உணவு விடுதிகள் தவிர்த்து உள்ளூர் உணவகங்களில் மட்டும் சாப்பிடுவது என்பது  பயண வரைமுறை. அது அந்த ஊரின் பொருளாதாரத்திற்கு உதவும்.
அப்பொழுதே நேரம் மாலை  6 மணி இருக்கும், பயண திட்டத்தின் படி  idaho falls  என்ற  ஊரில் இரவு தங்கி அங்கிருந்து காலை பூங்கா செல்ல 160 மைல் சுமார் 3 மணி நேர பயண திட்டம்.   மலைவீடு ஊரில் இருந்து புறப்பட்டு  பயணம் தொடர்ந்தது , உடல் சோர்வுற்று இருந்ததால் பயணம்  மெதுவாக தொடர்ந்தது.அந்தி வேலை , கிழக்கு  நோக்கி பயணத்தினால் சூரியன் விரைவில் 7 மணி அளவில் மறையதொடங்கினான். அத மருள் சூழும் இரவில் காரின் பின்னோக்கும் கண்ணாடியில் கருஞ்சிவப்பில் சூரியன் தொடுவானம் மெல்ல இறங்குவது ஒரு அற்புத காட்சி. தினமும் கதிரவன்  தோன்றி மரையலாம் ஆனால்  நான் இது வரை பல முறை  கதிரவன் மறைவதை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் முற்றிலும் புதிய காட்சி!  அதன் வண்ணம் , மேகங்களின் பிரிதிபளிக்கும், நாம் பார்க்கும் கோணம்  ஒவ்வொரு நாளும் ஒரு புது ஆதவன் தோன்றி மறைகிறான் என்பதே நான் கண்ட  உண்மை.
நீண்ட பயணத்தினால் கண்கள் நித்திரையை  தேட தொடங்கின , அதனால் இரவு 9 மணிக்கு நான் motel தேட தொடங்கினேன், உயர்தர தங்கும் விடுதியல்லாமல் சிக்கனமாக சுமார் 30-40$ பணத்தில் சாதாரண எளியவர்கள் தங்கும் விடுதி . ஊருக்குளே விடுதி சென்றால் open  என்று போடு கதவு பூட்டப்பட்டிருந்தது, மணி அடித்தால் நாய்  குலைக்க ஆரம்பித்தது.  இரண்டு பெரிய அல்சேஷன் வகை கருப்பு நிற பைரவர்கள் hello  சொன்னார்கள். இதன் பிறகு அங்கு காத்திருந்தால் பயன் இல்லை என்று அடுத்து தங்கும் விடுதி சென்றேன், அங்கு கதவை திறந்தால்  - ஒருவர்  தான்  நிற்கும் அளவு தான் அலுவலகம், ஒருவர்  பெருந்தொந்தியுடன் சட்டை போடாமல் ஒரு ஜீன்ஸ் மட்டும் வெறும் கால்களுடன் அலுவலகத்தில் இருந்தார். அவர் தான் அந்த சிறு மோடில் உரிமையாளர் போன்று இருந்தார். அவரை பார்த்தால் வெள்ளையாக  ஜீன்ஸ் அணிந்த பிள்ளையார் சிலை போல காட்சி தந்தார். இப்பொழுது அறுவடை காலம் என்பதால் அறைகள் இல்லை என்று சொன்னார். இந்த அமெரிக்கா கலாச்சாரம் ஏதும் இன்றி " wellcome "   "how  can I help  you today " என்ற உணர்வுயின்றி சொல்லும் வரவேரப்பாளர்  இல்லை , நம் ஊர் விடுதி போல எதோ ஒரு வெள்ளைக்கார அண்ணாச்சியுடன் பேசிய அனுபவம்.
வழியெங்கும் பயணத்தில் truck , அறுவடை எந்திரங்கள் வண்டிகைகளை  கண்டதன் காரணம் புரிந்தது. அவர் மன்னிக்கவும் இடம் தராததால் என்றார், நான் நன்றி சொல்லிவிட்டு வேறு எதாவது விடுதி உண்ட  என கேட்ட பொழுது  "நாய் விடுதி " முதலாளியியை அழைத்து விசாரித்தார் அவரம் இடம் இல்லை என்று சொன்னார். இவ்விரண்டு விடுதிகள் விட்டால் இவ்வூரில் வேறு  இல்லை என்றவுடன் மீண்டும் சாலையை பிடித்தேன். உடல் சோர்வுற்று இருந்ததால் வேறு விடுதி தேடும் உத்தேசம் யின்றி  சாலை வழியில் இருந்த   பொருள் அங்காடியும் மற்றும் சிறு காசினோ கொண்ட இடத்தில காரை நிறுத்திவிட்டு இருந்த மீதி உணவை உண்டுவிட்டு காரிலியே  தூங்கிவிட்டேன். சுமார்  நான்கு மணிநேரம் கழித்து எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு காபி சாப்பிட்டு கிளம்பலாம்  என கடைக்கு சென்றேன் . அப்பொழுது நேரம் 1 என கைக்கடிகாரம் காட்டியது, இடாஹோ  Mountain time zone என்பதால் நேரம்  1 மணி நேரம் முன்பாக அப்பாழுது யாமம் 2 மணி. உள்ளே சென்று காபி வாங்கும்பொழுது  தான் கவனித்தேன் அங்கு 7 $ கொடுத்து குளிக்கலாம் என தெரிந்தது. முதலில்  6 மணி அளவில் வேறு எங்காவது இதை போன்ற இடத்தை கண்டுபிடித்து செல்லலாம் என யோசித்தேன் . கடை பையன் ஒரு அமெரிக்கா ஆதிவாசி இனத்தில் இருந்து வந்தவன் போன்று இருந்தான். குளிக்க செல்லும் பொழுது பணம் தந்தால் போதும் என சொன்னான், அதனால் பிறகு  தேடுவது கடினம்  என  அங்கே Truckers  அறையில் பெரிய சோபாவில் ஒய்வு எடுத்துகொண்டு   checkslovakia  பற்றிய  மலைப்பயணங்கள் ஆவணப்படம் பார்த்தேன்.அப்படியே காபி முடித்துவிட்டு  வெந்நீரில்  குளியல் போட்டேன். அந்த  இரவு குளியல்  சோர்வை குறைத்து.பின்பு அந்த இருட்டில் என் மிச்ச பயணம் தொடர்ந்தது.

  


பின்பு ஒரு  அறை மணி நேரத்தில் Idaho falls  என்ற நகரத்தை கடந்து வடக்கு நோக்கி செல்லும் I-15 N  பிடித்து பயணம் தொடர்ந்தது , அது ஒரு இருவழி பாதை கொண்ட பயணம் , இரவில் யாரும் இல்லாத சாலையில் மைல் கணக்கில் தன்னந்தனியாக பயணம் எப்பொழுதாவது எதிரில் ஒரு மஞ்சள் ஒளியுடன் வாகனங்கள் கடக்கும், இருட்டின் துணையுடன்  சாலையோரத்தில் தோட்ட மரங்கள்   காரின் விளக்கின் ஒளியில் நடனம் ஆடுவது போன்ற  ஒரு எண்ணத்தை உருவாக்கியது.சார் மலையேர தொடங்கியதால்  குளிர் வந்து தாக்கியது அதனால் மூத்திரம் முட்ட தொடங்கியது  , இருளில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தவுடன் கார் விளக்குகள் அணைந்து  எங்கும் இருள் என்னால் என் அருகில் இருந்த காரை கூட காணமுடியவில்லை. சற்றே பதற்றத்துடன் சாலையோரத்தில் அவசரமாக சிறுநீர் கழித்தேன் , இந்த காட்டில் கரடிகளும் ஓநாய்களும் உண்டு என்று எண்ணம் மனதில் ஓடியது. கார் விளக்கை ஏற்றவும் தயக்கம் என் எனில் அங்கு ஒரு டிரக் நிறுத்துவைக்க பட்டிருந்தது , அவர்கள் தூக்கத்தை கெடுக்க மனம் இல்லை. விடியும் காலை வேளையில் மேற்கு வாயில் அருகில்யுள்ள எல்லோஸ்டோன் ஊருக்கு வந்துசேர்ந்தேன். இதன் பிறகு வீட்டுக்கு அழைப்பது கடினம் என அழைத்து சொல்லிவிட்டு காட்டின் உள்ளே நுழைந்தேன்.



வரவேற்கும்  மாயக்காடு

காலைவேளையில் வந்ததால்  நுழைவுக்கட்டணம் வாங்க ரேஞ்சர்  இல்லை, பணம் போட சொல்லியும் அறிவுப்பு  இல்லை. மெதுவாக காரை  செலுத்தினேன், வானில் நட்சத்திரங்களும் பிறை நிலவும் துணையுடன் உள்ள செல்லத்தொடங்கினேன்,எங்கோ கீழ்வானத்தில் ஒளி தோன்றுவதை காணமுடிந்தது, விடிய இன்னும் சில நிமிடங்கள் உள்ளன என எண்ணிக்கொண்டு உள்ளே செல்ல செல்ல  , வெந்நீர் ஊற்றின் நீர் ஆவியும்  அதன் கந்தக (sulpher ) வாடையம்  காட்டின் அமைதியும் ஒரு மாயா உலகின் வாசல் என எண்ணம் தோன்றியது, வழியில்  சிற்றோடைகளும் சமவெளி பகுதிகளும், குன்றுகளும், பள்ளத்தாக்குகள் ,மெல்லிய பனிப்போர்வை கொண்ட சாலைகள்  உள்ள வரவேற்றது. அந்த காட்டின் பேரமைதியில் உள்ளே செல்லே செல்ல அதன் பிரம்மாண்டம் என்னை  உள்  வாங்கிக்கொண்டு ஏதும் அறியா ஓர் பேரமைதி் கொண்டிருந்தது.




சாலையில் மெதுவாக காரில் செல்ல  ஒரு  மான் திடீர் என சாலை கடக்க தாவி பிறகு மிரண்டு பின்வாங்கி கார் கடக்க காத்திருந்தது.அந்த மிரண்ட பெரும் கண்கள் கடந்து நான் இன்னும் என்ன மாயங்கள் காணவேண்டியிருக்கும் என வியந்து உள்ளே சென்றேன். சிறுது நேரத்தியில் ஒரு  கருங்கரடி சாலையை கடந்து மறுபக்க மேட்டில் எற தொடங்கியது. அப்படியே கடந்து நான்   mamooth geysers  என்கின்ற வெந்நீர் உற்று இடத்திற்கு வந்தேன். ஐஸ் கட்டிகளை வெட்டி வெய்த்து போன்ற பாறைகளில் இருந்து வெந்நீர் வழிந்து ஓடியது, பாறைகளில் படிந்த கந்தகமும் பிற கனிமங்கள் மீது கொதிக்கும் நீர் வழிந்து நீரோடைகளில் கலந்து. காலை குளிருக்கு அந்த நீரின் ஆவியின் வெப்பம் கதகதப்பை கொடுத்தது.

                                          


 பிறகு அங்கிருந்து புறப்பட்டு பக்கத்தில் இருந்த வன அலுவலகத்தில் கேம்பிங் இடத்திற்கு செல்வதை பற்றி விசாரித்துவிட்டு GPS "bay bridge " என்கின்ற கூடாரதின் முகவரியை கொடுத்து பயணத்தை தொடர்ந்தேன், கார் சாலையில் இருந்து சரளை கற்கள் போட்ட ஒரு வனாந்திர சாலையில் எங்கோ  ஆள்  நடமாட்டமில்லாத இடத்தில கொண்டு சென்று விட்டது. இதற்கு பிறகு GPS நம்புவது வேலைக்காவது என்று  வழியில் இருந்த ஒரு Sinclair காஸ் ஸ்டேஷன் வண்டியை நிறுத்தி விசாரித்த பொழுது  அங்கு காட்டின் வரைபடத்தை பெற்றுக்கொண்டு அங்கு காலை உணவாக முடித்துக்கொண்டு  புறப்பட்டேன்.அங்கிருந்து முகாமிடும்   இடம் சுமார் 35 மெயில் தொலைவில் இருந்தது. வழியில்  yellowstone   canyon என்கின்ற  ஆறு ஓடும் பள்ளத்தாக்கை காண முடிந்தது.அப்படிய வழியில் நிறுத்தி மலைகள்,அருவிகள்,பள்ளத்தாக்குகள் இயற்கை  அழகை ரசித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது. வழியில்  ஆயிர கணக்கில்  காட்டெருமைகள்  பொன்  வண்ண வானில்  சிதறிய கரு மேகங்கள்  போன்று  புல் மேய்ந்து  கொண்டிருந்தது கண்கொள்ளா காட்சி . 

                       



                                                  




கூடாரம் அடிக்கும்  bridge bay  இடத்தை தேடி , வழியில் தொலைந்து , பிறகு வழிகேட்டு   அலுவலகத்தை  அடைந்த பொழுது மதியம் 12 மணியிருக்கும் .   பலத்த  எச்சிரிக்கையுடன் - உணவு நீர் எல்லாம் காரில் இருக்கவேண்டும், எக்காரணம் கொண்டும் விறகு அடுப்பு ஏற்றக்கூடாது. காபி நீரை கீழே கொட்டினால் கரடி மோப்பம் பிடுத்து வரும் என பல எச்சரிக்கையுடன்  எனக்கு ஒதுக்கப்பட்ட C -159 என்கின்ற இடத்திற்கு வந்து முதல்முறையாக தனியாக கூடாரம் அடிக்க முயன்றேன், கூடாரம் மட்டும் அடித்தால் இந்த பயணம் சொதப்பாத்து என்ற எண்ணம் தான் ஊரில் இருந்து கிளம்பும் எண்ணம் இருந்தது,. மூன்று சிறுவர்கள் camp அடிப்பதை பற்றி காணொளி யூடியூபில் பார்ததது ஒரு நம்பிக்கை தந்தது. ஒரு வழியாக பொறுமையாக  யோசித்து பதற்றமின்றி  நமக்கு நேரம் நிறைய உள்ளது என்று வழிமுறையை பின்பற்றி கூடாரம் அடித்தேன்.  ஓர் அளவுக்கு ஒழுங்காக வந்தது .மனதில்  மஞ்சள்பாறை தனியாக வந்தது தவறில்லை என்று தோன்றியது.


                               



 சில மணிநேரம் தூங்கியெழுந்து  பிறகு செல்லலாம் என  கூடாரத்தில் படுக்கையில் படுத்தேன், இப்பொழுது தான்   ஒன்றரை நாட்கள்  பிறகு  காலை நீட்டி படுத்து சுகம் அடைந்தேன் . "என் பெயர் சிவப்பு" புத்தகத்தை படித்து கொண்டே பகல் தூங்க முயற்சித்தேன். வெளியே  காற்று விச தொடங்கியது கூடாரத்தை காற்று அடித்து  அதன் மோதும்  ஒலி நித்திரையிலிருந்து எழுப்பிவிட்டது. இரவில் மழை வரும் என்ற அறிகுறி இப்பொழுதே காற்றின் வேகமமும் கரும் மேகங்களின் கூடாரத்தின் வான் மீது தவழ தொடங்கியது.  விழித்தபொழுது மணி மூன்றுயிருக்கும், இரவு தூங்கலாம் என எழுந்து  "old faithful" என்கின்ற  வெந்நீர் உற்று காணும் இடத்திற்கு சென்றேன் . ஒவ்வொரு இடமும் இந்த  காட்டில் சுமார் 15 மைல் தொலைவில் தான் உள்ளது. அங்கு அடைந்து பக்கத்தில் உள்ள ஒரு கடையில் காபி அருந்தலாம் என செல்லும் பொழுது அங்கு வெந்நீர் உற்று பிச்சு அடித்துக்கொண்டு மக்கள் சுழுந்து படங்கள் எடுத்து கொண்டிருந்தனர். நான் பிறகு வந்து பார்க்கலாம் என்று உள்ள சென்று வருவதற்குள் நீர் நின்று கூட்டம் கழிந்துவிட்டது.பிறகு தான் தெரிந்தது  திரும்பவும் நீர் வர இன்னும் 2 மணி நேரம் ஆகும்.பிறகு மரப்பாதை அமைத்த வழியின் ஊடாக சென்று வரலாம் என புறப்பட்டேன். அங்கு காத்திருந்த  சிலருடன்  அதில்  ஒரு  ஒற்றை  இந்திய இளைஜனுடன்  ஒரு வன அதிகாரி   பேசிக்கொண்டிருந்த பொழுது சென்று நானும் அந்த கூட்டத்தில் சேர்ந்தேன் .அவர் இங்கு  இந்த நீருற்றின் விளக்கங்களுடன் ஒரு விளக்கச்சுற்றுலா  அழைத்து சென்றார், ஒவ்வொரு நீரூற்றின் பெயர்கள் அதன் கதைகள் என தொடர்ந்தது. வெந்நீர் ஊற்றின் பாறைகள் உருவாகும் விதம் என சொல்லிக்கொண்டே வந்தார் .

                                 



இந்த நிலம்  650000 வருடங்கள் முன்பு ஏற்பட்ட எரிமலைகுழம்பு குளிர் இந்த காடுகள் உருவாகின. இங்கு பூமியின் மையத்தில் உள்ள உட்கருவம் தீ ஜுவாலை துவாரங்கள் வழியாக கடந்து, இந்த பூமி பகுதியில்  சில இடங்களில் மேலோடு மிக மெல்லியதாக 1-2 மைல் அடர்த்தி தான் உள்ளது அதனால் அத தீயின் நெருப்பு நீரை மிக சூடாக்குகிறது.  சில இடங்களில் அடைப்பு குறுகி அதனால் அதிக அழுத்தம் உருவாகி  நீர் வேகமாக வெளியேற்ற படுகிறது. இத்தகைய எரிமலைகள் கடலுக்கடியில் அதிகம். உலகத்தில் சில இடங்களில் மட்டும்தான் நிலத்தில் இந்த அமைப்பு உள்ளது. அத்தகைய அபூர்வ இடம் தான் மஞ்சள்பாறை நிலப்பகுதி. 

                                                     


 நீறும் அதன் பகுதிகள் பல வண்ணங்கள் பெற்றுஇருந்தன , அடர் நிலம்,அடர் ஆரஞ்சு , வெளிர் ஆரஞ்சு என பல நிறத்தில் நிலமும் நீரும் கண்ணனுக்கு விருந்து பிடித்தன , அதில் அடர் ஆரஞ்சு கந்தக துளியின் நிறம் , வெளிர் ஆரஞ்சு இறந்த cyanabacteria என்கிற நுண்ணுயிரி சுமார் 100-200*C  வாழும் உயிரினங்கள் , உலகம் தீ பிழம்பாக ஐஸ் ஏஜ்க்கு முன்பே உயிரை பல யுகங்கள்-பில்லியன் ஆண்டுகள்  கடத்திவந்தவை. 

  நாம் இந்த பூமியின் எரிமலை மேல் நிற்கிறோம், பூமிதாய்  தன்னுடைய பலத்தின் துளியின் துளி  அளவு இங்கு பார்ப்பதே ஒரு அச்சத்தை மனதில் உருவாக்குகிறது. உலகை நாம் வெளியில் இருந்து காண்பது போல மாட மாளிகைகளும், வணிக அங்காடிகளும் பெரும் கோபுரங்கள் அல்ல. அதன் கீழ் ஒரு பாதாள உலகம் உள்ளது அங்கு பல உயிரினங்கள் வாழ்கின்றன என இந்து மத புராணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.வராகன் அவதாரம் பன்றி வடிவில் பூமிக்கு அடியிலிருந்து வந்த திருமாலின் அவதாரம். பூமிக்கு அடியில் உள்ள நாகா உலகத்திற்கு  அர்ஜுனன் செல்வதாக மகாபாரத கதைகள் உள்ளன.

பின்பு விளக்கப்பயணம் முடியும் பொழுது. இந்த உலகத்தின் பூக்கள் தான் இந்த நீரூற்றுகள் -  time lapse காண்ணொளியாக ஒரு பத்து வருடங்களில் எடுத்ததை சில நிமிடங்களில் பார்த்தால் .பூக்கள் பூத்து வெடித்து மகரந்தங்களை பூமி எங்கும் வீசுவது போன்று பூமி பூத்து நீர்ஊற்றாக வெடித்து கந்தகங்களை நிலமெங்கும் வீசி தெளிக்கும் காணொளி  போலயிருக்கும் என சொன்னார். நீரூற்றை பூக்களாக குறியீடு செய்தது ஒரு இயற்கையை அவதானித்தவரால் தான் சொல்ல முடியும் .காலையிலிருந்து உணவு என்று என்னும் உண்ணாமல் சுற்றிக்கொண்டுயிருந்ததால் நன்கு பசித்தது . அங்கு  கோழி  செண்ட்விட்ச்  காபி சொல்லிவிட்டு காத்திருந்த பொழுது முதலில் சந்தித்த அந்த இந்திய இளைஞன் - கார்த்திக் நானும் உன்னுடன் உணவு உண்ணலாமா என்றார், சேர்ந்து உணவு உண்ணும்பொழுது அவர் மோட்டோரோலா - சிகாகோவில் வேலைசெய்வதாக சொன்னார் , இருவரும் பின்பு ஆண்ட்ராய்டு மோட்டோரோலா  கைபேசி மேம்படுத்தும் பிரச்சனைகள் பற்றி பேசிக்கொண்டு உணவுயுண்டோம். பயணங்களில் உணவு தனியாக உண்பது சற்று கடினம், ஆனால்  எப்படியாவது யாரையாவது விதி  நம்முடன் 
சேர்ந்துவிடுகிறது.அதனால் பயண அலுப்புகள் குறைந்து புதிய அனுபவங்களை நமக்கு தருகிறது. பின்பு விடைபெற்றுக்கொண்டு செல்லும் பொழுது இருள் சூழ தொடங்கியது. இங்கிருந்து புறப்பட்டு கூடார இடத்திற்கு செல்ல தொடங்கினேன், உடல் முழு சோர்வை அடைந்துவிட்டது , காரில் தான் அந்த சோர்வு தெரிகிறது , இடங்களையும் மக்களுடன் பேசும்பொழுது அதே எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை, உள்ளுக்குக்களே எங்கோ சென்று ஒளிந்துகொள்கிறது. 

இருளில் காடு உயிர்பெற தொடங்குகிறது , வழியில் பார்த்த மான்கள், எல்க் , காட்டுஎருமைகள் சாலைகள் கடந்து சென்றன. இருளில் கேம்ப் இடத்தை கண்டுபிடிப்பது ஒரு பெரும் கடினமாக இருந்தது. பலமுறை இருளில் காரை சாலையோரத்தில் நிறுத்தி வரைபடத்தை பார்த்து வழியை கண்டுபிடித்து இடத்திற்கு சென்றால் ஓர் அதிர்ச்சி நான் அடித்த கூடாரம் ரோட்டிற்கு வந்துயிருந்தது. பிறகு தான் தோன்றிற்று காற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு சற்றே கிழிந்து ரோட்டில் கடந்தது. திரும்பவும்  அங்கு இருந்த விறகுகட்டை கொண்டு  கொக்கியை  அழமாக அடித்து உள்ளே சென்று படுத்தேன். உடல் சோர்வுயுற்றும் மனம் எண்ணங்களில் முழுகி நித்திரை வரவிடாமல்அன்று பயணித்த எண்ணங்கள் மனம் முழுவதும் படங்கள் போல ஓடிக்கொண்டே இருந்தேன் , சிறு நேரத்திற்கு பிறகு  தங்கிலீஷில்   சத்தமாக பேசிக்கொண்டு தூக்கத்தை கெடுத்தது ஒரு கும்பல். உடலை சோர்வு மற்றும் குளிரால் எழுந்த  யார் என்று பார்க்கவும் விருப்பமின்றி பிறகு அப்படியே தூங்கிவிட்டேன்.  நடுயிரவில்  சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன் , அது ஆலங்கட்டி மழையால்  சிறுகற்கள் கூரையில் படும் பேரொலி என உணர்ந்தேன். அந்த மழையின் ஒலியின் ஊடே ஒரு காட்டெருமையிம் ஓலம்  கேட்டது. கரடியோ அல்லது ஓநாய் கூட்டம்  அதை வேட்டையாடிய வலியின் சத்தம்  என்று தோன்றியது. அந்த குரல் அச்சத்தை தந்தது  அனால்  அதை   முதல்முறை கேட்பது என்று தோன்றவில்லை, பல ஜென்பமங்களாக  அந்த ஒலி என் உள்மனதில் என்னுள் வாழ்கின்ற ஒரு ஆதிவாசியாக  பல யுகங்களாக பழகிய ஒலிதான்  என்று மனதில் தோன்றியது. பின்பு அந்த ஒலியை காதில் வாங்கிக்கொண்டே   எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் நித்திரையில் ஆழ்ந்தேன்.


எரிமலை தீ பூமி 

 காலை  6 மணிக்கு விழிப்பு வந்தது, இன்னும் இருள் சுழிந்திருந்ததால் ஏழுந்துகொள்ள மனம்யின்றி சிறுநேரம் படுத்திருந்தேன். குளிக்கும் வசதியில்லாத கேம்ப் இடம் என்பதால் நான் பல் விளக்கி முகம் கழுவி   "பழைய விசுவாசம் " - old faithful  வெந்நீர் உற்று  காணலாம் என சென்றேன். வழியில்  மஞ்சள்பாறை ஏரி பார்த்து அதன் கரையில் வண்டியை நிறுத்தினேன்.  அந்த ஏரியின் பிரமாண்டம் கடக்கும் பொழுது என்னை பிரமிப்பூட்டியது. இலங்காலை வேலையில் அந்த நடக்கும் குளிரில் நான் ஒரு ஸ்வெட்டர்  அதற்கு மேல் ஒரு ஜாக்கெட் போட்டிருந்தேன். நான் டிசம்பர் மாதத்தில் ஹில்லசுபரோவில் ஜாக்கெட் போடுவது தேவையா  என யோசிக்கும் ஆசாமி. வானம் மேகங்கள நிறைந்து எப்பொழுது  பொழியலாம் காத்திருந்தது போல தான் இருந்தது. ஏரியின் கரையில் இருந்து  நீர் கரையில் மோதும் ஒலி மனதை  வருடி ஒரு பேரின்பத்தை தந்தது. அந்த நிமிடம் அந்த ஏரி எனக்கு மட்டும் தந்த இசை. ஏரியின் கிழக்கே  ஓங்கியிருந்த ஒரு பெரும் மலை தொடர், அதன் சில மலைகளின் சிகரங்கள் மேகங்களுக்கு மேல் உயர்ந்தயிருப்பதை காண முடிந்தது. அது எதோ என்னை எப்பொழுதும் அழைத்து கொண்டேயிருப்பதாக ஓர் உணர்வு உண்டாகிக்கொண்டே இருந்தது. 

                                   



நேரம் ஆனதால் 8 மணியளவில் நீரூற்று வரும் என வனக்காவலாளி சொன்னதால் "பழைய விசுவாசம் நீரூற்று" இடத்திற்கு சென்றேன். காலை 7.30 மணியிருக்கும். நேற்று மாலை பார்த்த அதே இடம் மக்கள்க்கூட்டம் இன்றி வெகு சிலரே இருந்தனர், உலகில் உணவுயின்றி  என்னால்  இருந்துவிட முடியும் அனால்  காலை தொடங்க ஒரு காபி அவசியம். உணவு விடுதியில்  ஒரு காபி வாங்கிக்கொண்டு நீரூற்று இடத்தின் அருகே அமைக்க பட்ட இடத்தில் அமர்ந்து காத்திருந்தேன். என்னை போல தனியாக வந்த  இன்னொரு தமிழ் பேசும் ஒருவர் காத்திருந்தார். நல்ல உயரம் அதற்கு அற்ற கணத்த உடல்வாகு , கையில் கேமரா கொண்டு எப்பொழுது நீரூற்று வரும் படம்  என அவசரகதியில் இருந்தார் அடுத்த இடத்திற்கு செல்லும் ஒரு பரபரப்பு.அவர்  bay area வில் இருந்து வந்து "Glacier national " மற்றும்  Grand teton  வனப்பூங்கா  காண போவதாக சொன்னார்.  
பின்பு அவர் எப்பொழுது நீரூற்று வரும் என விசாரிக்க சென்றுவிட்டார். நான் அங்கே உட்கார்ந்து காத்திருந்த பொழுது  , பேருந்தில் அமெரிக்கா வயதான தம்பதியர் வந்து அமர்ந்தனர். அவர் நட்புடன் பேச தொடங்கினார் , மிஷிகன் இருந்து பேருந்தில் சுமார் 10  பூங்காக்கள் சுற்றுலா வந்ததாக  சொன்னார் , அவருக்கு  45 மற்றும் 42 வயதில் பிள்ளைகள்இருப்பது  குறிப்பிட்ட பொழுது வயதானவுடன் மனைவியுடன் இதை போல ஒரு பயணத்தை நாம் செய்ய வேண்டும் என்று  தோன்றியது. அனால் மறு  நிமிடமே  யாரோ அழைத்துச்செல்லும் bus tour  சாதாரண ஊர்ச்சுற்றி நானில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்  , அபப்டி செல்வதாக இருந்தால் அது என் சொந்த வாகனத்தில் நான் நினைக்கும் ஊருக்கு நான் விரும்பும் நேரத்தில் நான் விரும்பும் கால அளவு அந்த பயணம் இருக்கும்.

அந்த காலை வேலையில் கனிவுடன் பேசியது ஒரு நல்ல அனுபவம் ,  பயணம் நன்றாக உள்ளதாக  சொன்னார்.  சுமார் 10 நாள் பேருந்து பயணம் தினம் ஒரு ஊரில் தங்கி பயணிப்பது அவ்வளவு ஒன்றும் எளிது அல்ல.சுமார் 1 1/2 மணி நேரம் காத்திருந்த பிறகு  ஒன்பது மணியளவில் சுமார் இந்து நிமிடம் வெந்நீர் நீரூற்று வந்தது , இயற்கையின் அற்புதங்களின் இதுவும் ஒன்று. மனதின் ஓரத்தில் குறுக்கு புத்தி உள்ளே மோட்டார் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்களோ என்ற சந்தேக பட்டது. 


         

பின்பு அங்கிருந்து புறப்பட்டு இன்னும் உள்ள  நீரூற்று குளங்களை பார்க்க சென்றேன். சில இடங்களில் நீர்  கொதிநிலையில் இருந்தது. 199 *C  தான் உயர் அழுத்த இடங்களில் இருக்கும் அதனால் நீரில் கைவைத்தால் விரல் வெந்துவிடும் அபாயம் உள்ளது.  நீரின் வெம்மையும் அங்கு தெரிந்திருந்த  கந்தக தூள்களும் , நுண்ணுயிர்களும்  அழகிய வண்ணங்கள் கொண்ட  நீர்நிலையும் , கந்தக புகை மண்டலமும் , அதன் வாசமும்  ஒரு மர்ம இடமாக தான் தோன்றின. நேரம் ஆக மக்கள் விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக,  அந்த மர்ம சூழலின் அழகை இழந்து  ஒரு selfie எடுக்கும் காட்சியாக  மாறிவிடுகிறது.  அங்கிருந்து புறப்பட்டு  மஞ்சள்பாறை  ஆற்றின் நீர்விழுச்சி காண சென்றேன். நேற்று உள்ளே வரும்பொழுது தூரத்தில் இருந்து பார்த்தது , இன்று  கீழே இறங்கி அருவியை காணலாம் என்று சென்றேன்.

   


இன்று விடுமுறை நாள் என்பதால் மிக கூட்டம் வண்டியை  நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு நடந்தே மேல் மற்றும் கீழ் அருவியின் பல கோணங்களில் நடந்து சென்று ரசித்தேன். 
 . artist view , inspiration view என்ற பல இடங்களுக்கு  நடைபயணமாக  சென்று அருவியின் அழகை ரசிக்கலாம். மஞ்சள்மலை ஆறு missouri ஆற்றின் கிளையாறு , பல ஊர் பனியின் நீரை அள்ளி பல கிளைகளாக பிரிந்து  இங்கு வந்து சேர்ந்து மலையில் யிருந்து அருவியாக குதித்து ஏரியில் சேர்கிறாள். அமெரிக்காவில் சில அருவிகள் கடல் சேராதவை என்றே நினைக்கிறேன், அல்லது பல கிளைகளாக கடந்து பெரும் ஆற்றில் கடந்து கடலை அடையாளம்.  அருவி  என்ற அழகிய தமிழ் பெயர் இருக்க ஆங்கிலத்தில் இருந்து  waterfalls - நீர்விழுச்சி  என்ற எதிர்மறை சொல்லாக உருவாக்கியது ஏன்  என்று புரியவில்லை , நீர் என்றும் விழுவதில்லை  அவை  மழையாக திரும்பவும் போழிகிறது, நீர் விழுவதாக இருந்தால் எப்படி அருவியை காணும் பொழுது ஏன் மன எழுச்சியும்   குதூகலம் கொள்கிறோம்? 
                                                                  


 பின்பு அருகில் இருந்த  Grand கிராண்ட் பூங்கா பார்வையாளர் மையம் சென்று மஞ்சள்பாறை  பற்றிய புகைப்பட மற்றும் பொருட்களின் கண்காட்சியில் , இந்த நிலம்  ஒரு தெய்வத்தின் திருத்தலங்களாக  தான் பூர்விக அமெரிக்கர்கள் ( செவ்விந்தியர்கள் என்று சொல்வது எதோ அவர்களுக்கும் இந்த நிலத்திற்கும் சம்மந்தம் இல்லாத ஒரு உணர்வு உருவாககிறது)  இந்த புனித இடங்களுக்கு , பல மலை நிலங்களை கடந்து கிழக்கே   ராக்கி மலைத்தொடரில் மற்றும் , பெரும் புல்வெளி நிலங்கள்,  வில்லமாட்டே பள்ளத்தாக்கில் இருந்து முன்பு நடை பயணமாக வந்துள்ளனர், அவர்களின் வந்த பல்லாயிரம் மைல் வழித்தடங்கள் இன்றும் உள்ளது. ஒரு புனித நிலமாகவும் , இறைவன் வாழும் இடமாக தான் இந்த மலைகளை அவர்கள் தரிசித்தினார்.  Mi tsi a-da-zi  என்ற  பழங்குடி மக்களின் சொல்லின் ஆங்கில மொழியாக்கம் தான் Yellowstone. .  பதினாறாயிரம்  ஆண்டுகள் முன்பு இங்கு மஞ்சள்பாறை ஏரியில் கூடாரம் அடித்து தங்கிய வரலாற்று குறிப்பு உள்ளது. நமக்கு  அகத்திய முனிவர் கமண்டலத்தை  அடைபட்டு இருந்த  கங்கையை பிள்ளையார்  காக்கை உருவில் வந்து அவருக்கு தெரியாமல் அது தட்டிவிட ஓடிய நீர் தான் இன்று  காண்வரி  என்கின்ற காவேரி. அதைப்போல பழங்குடி மக்களுக்கு ஒரு குள்ளநரி ஒரு கிழவியின்  ஒரு பெரிய சொம்பில் இருந்த நீரையும் மீனையும் தட்டிவிட்டு தான் இந்த  மஞ்சள் பாறை எரியும் , பாம்பு  ஆறு மற்றும் மஞ்சள்பாறை ஆறு தோன்றியதாக கதையுள்ளது.


                                               


                                                        

இந்து பூதங்கலான  நீர் , நெருப்பு , காற்று , நிலம் ஆகாயம் , இதில் நாம்  தீ என்கின்ற நெருப்பை நாம் அவ்வளவாக  காற்று நீர் நிலம் அளவுக்கு  தின வாழ்க்கையில் உணர்வதில்லை. தீயை நாம் அழிக்கும் உருவாக  பார்ப்பதால் அதை அஞ்சுகிறோம் அதனால் நாம் அதனிடம் இருந்து ஒதுங்க நினைக்கிறோம். இந்த உலகம் சூரியன் என்கின்ற நெருப்பில் இருந்து வெடித்து வந்த  துளி அது குளிர்ந்து தான் இன்று பல்லுயிர்கள் வாழும் வையகம் . சூரியனின் வெப்பம் தான் இந்த உலகுக்கு நீரும் காற்றும் தருகிறது.. புவியின் மத்தியில் ஒரு பெரும் நெருப்பு பிழம்பாக ஜோதி வடிவமாக உள்ளது , அந்த வெம்மையில் தான் இந்த பூமி உணவு கொடுக்கிறது , அந்த ஜுவாலை கொதித்து பல லட்ச ஆண்டுகளுக்கு  முன் வெளி வந்த துளியில்  உருவான  அழகு தான் இந்த மஞ்சள்பாறை  காடு , நெருப்பின் சக்தியை உணர்ந்து தான் அவர்கள் இந்த இந்த நிலத்தை வழிபட்டார்கள்.   

  இன்று இந்த நிலத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இன்றி எங்கோ  Wyoming  மற்றும் Montana  அவர்களுக்கு என்ற ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்கின்றனர்.

பார்வையாளர் மையத்தில் தான்  backcountry  அலுவலகம் உள்ளது, இங்கு பதிவு செய்து விட்டு, உள்காடுகளுக்கு உள்ளே சென்று கூடாரம் அடித்து தங்கலாம், அந்த நிலையை அடைய இன்னும் உடல் வலிமையும்  உயிர் காக்க தேவையான அத்தனை பொருட்களுடன் மற்றும் நல்ல மனஉறுதியும் தேவை. அந்த அடுத்த  நிலை அடைய  இயற்கை மீது பேரன்பும்  சாகச உணர்வு வேண்டும். 

காலையில் இருந்து காபி கொண்டு சென்ற முறுக்கு மட்டும் சாப்பிட்டு திரிந்தால் மாலை  இந்து மணியளவில் நல்ல பசி , அங்கு இருக்கும் உணவகத்திற்கு காத்திருந்து  கோழியிறைச்சி சான்விட்ச் சொல்லிவிட்டு காத்திருந்தேன் , இங்கு உணவகங்கள் கிழக்கு கடற்கரை பகுதியில் இருப்பது போல  நீண்ட வளைந்து U  போல உள்ள மேஜையில் வரிசையாக உட்கார வைத்து ஒரூ  உணவு  உபசரிப்பவர் இருப்பார். அதனால் மக்கள் நெருக்கமாக உட்கார்ந்து உணவு உண்ணலாம் அதனால் தனித்து உண்ணும் உணர்வு இருக்காது.

என் அருகில் சீனாவில் இருந்து வந்த யுவன்,யுவதிகள் உணவை சிறுது உன்றுவிட்டு மித்தம்  வைத்துவிட்டு சென்றனர். அவர்களுக்கு அமெரிக்கா உணவு பிடிக்கவில்லை போல. நம்மை போல எங்காவது  அவர்கள் ஊர் புளிசாதம் எங்காவது கிடைத்தால் நன்றாக இருக்கும்  என்று தேடுவார்கள் என்று  நினைக்கிறேன்.
பின்பு  அருகில் இரண்டு இளம் வயதாக காணப்பட்ட இருவர் வந்து அமர்ந்தனர்.
அதில் ஒருவன் சீன வம்சாவளி மற்றொருவன்  வெள்ளையன். உலகில் பேசுபவரை பார்த்திருக்கிறேன் , மக்களுடன் பேசுவதற்காகவே வாழ்பவர் சிலர். அவன் பெயர் ஜேம்ஸ்  winnipeg  என்ற ஊரிலிருந்து கனடா நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தான். இங்கு அவன் நான்காவது முறையாக வருவதாக சொன்னான். அவனுடன் அமெரிக்கா அரசியல், கனடாவின் பிரதம மந்திரி  Justin Trudeau   நாற்பத்தி நான்கு வயதில்  பிரிதமராக தேர்ந்தெடுக்க பட்டார். அவர் தந்தை Pierre  Trudeau வும் கனடா பிரிதமராக இருந்தவர்! சென்ற முறை பிரதமராக இருந்த முந்தய பிரிதமரை தோற்கடித்து  அவர் மீது பொருளாதார  மற்றும் குடியேறிகள்  பிரச்சனைமக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.முக்கியமாக  அவர் தந்தை இறந்த பொழுது Eulogy(இறந்தவரை பற்றி  அவரை புதைக்கும் முன் சர்ச்சில் பேசுவது) பேச்சு புகழ்பெற்று ஆட்சிக்கு வந்தார்.
உலகில் சுதந்திரமும் சோசியலிச கொள்கை கொண்ட நாடு, நான் மதிக்கும் ஒரு சில நாட்டில் இது முதன்மை கொண்டது ஏனெனில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு  வாழ்வு  அளித்த நாடு.  பின்பு அமெரிக்கா அரசியில் அது இந்த பத்து  ஆண்டுகளில் அது பின்னோக்கி சென்று விட்டதாக குறிப்பிட்டார். முக்கியமாக நிற வெறி , மற்றும் துப்பாக்கி அரசியல், நாட்டின் கடன் தொகை. பிறகு கனடாவின் மக்கள் , winniepeg  நகரில் வருட வருடம் நடக்கும்  சீக்கியர், ஹந்து(இலங்கை தமிழர்) , சீன , போலிஷ்  இனங்களின் கலை மற்றும் உணவு திருவிழா பற்றி அதை வந்து பார்க்கும் படி அழைத்தான். அவன் தான் ஒரு பழங்குடி  இனத்தை சேர்ந்தவன்  என்று குறிப்பிட்டான்.அவன் பெற்றோர் அல்லது மூதாதையர் வைத்து சொல்லியிருக்கலாம் , அவர்களுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் இல்லாமல்  Native americans  என்பதற்கு பதிலாக indigenous என்று சொல்லி அவர்களுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் இல்லாமல் செய்ய அரசுகள் முயல்வதாக சொன்னான். பிறகு முக்கியமாக  Portland  ஒரு கறுப்பர் இன  நகரம்  1990 முன்பு வரை வெகு சில வெள்ளையர்களை போர்ட்லேண்ட் நகரில் பார்க்கமுடியும் , 1990 பிறகு hipsters (middle class youth) வந்து  போர்ட்லேண்ட் கறுப்பறைகளின் இடங்களை வாங்கி அவர்களை ஊரை விட்டு அனுப்பிவிட்டு இன்று அது ஒரு வெள்ளையர் நகரமாக  மாறிவிட்டது என்று  தெரியவந்தது. அதை பற்றி கூகுள்  செய்த பொழுது  "legacy emanuel Medical  center " portland  நகரில் உள்ள பிரபல மருத்துவமனை அங்கிருந்த கருப்பர்கள் நிலத்தை கட்டாய படுத்தி வாங்கப்பட்டு கட்டப்பட்டது. பெரும்  போராட்டத்திற்கு பிறகு கறுப்பர்களின் நினைவாக ஓரூ  சிறிய அருங்காட்சியகம் அமைத்தனர். இன்றும்  வடமேற்கு போர்ட்லேண்ட் நகரத்தில் வெகு சில பழைய கறுப்பின மக்கள் வெகு சிலர்  வாழ்கின்றனர்.  North West போர்ட்லேண்ட் நகரில் தான் திருட்டு மற்றும் வன்முறை பார்க்க முடியும்  என்று நான் சொல்லியத்திற்கு,  இல்லாதவன் இருப்பவரிடம்  எடுப்பது, இல்லாதவன் தனக்குள் அடித்தும் பிடுங்குவதும் இயல்பு என்று ஜேம்ஸ் குறிப்பிட்டான். பிறகு பேச்சு மஞ்சல்பாறையில் நான் பார்த்த இடங்களும் நான் பார்க்க தவறிய மற்றும் அருவியை இன்னும் அருகில் சென்று பார்க்கக்கூடிய hiking பாதைகளை குறிப்பிட்டு அடுத்த முறை கண்டிப்பாக  பார்க்க சொன்னான். பிறகு நேரம் ஆகிறது நான் குளிக்க செல்ல வேண்டும் என்றான் அவன் தங்கியிருக்கும் கேம்பிங் இடத்தில குளிக்கும் வசதி யுள்ளதாகவும் 4$ கொடுத்து குளிக்கலாம் என்று சொன்னான்.முதலில் எப்படி இங்கிருந்தே செல்வது என்று  யோசித்தேன் பிறகு தான் எல்லா உடைகளும் காரின்  டரங்கில் உள்ளது நியாபகம்  வந்தது. பிறகு நாங்கள் விடைபெறலாம் என நினைத்து உணவுக்கு பணம் செலுத்தலாம் என Polish  நாட்டில் வந்து இங்கு வேலை செய்யும் உணவு பரிமாறுபவரை அழைத்தோம், இருவரும் பில் தனியாக வந்தது,  நான் அவர் இருவருக்கும் சேர்த்து பணம் தாராளமா என்று யோசித்தேன், கொஞ்சம் அதிகப்பிரசங்கி தனமாக இருக்கும் என யோசித்த பொழுது அவன் எழுந்து  சென்று அந்த உபசரிப்பாளருடன்  இந்து நிமிடம் பேசிவிட்டு வந்தான், அப்பொழுது தான் தெரிந்து அவன் எனக்கும் சேர்த்து பணம்செலுத்தியது, நான் ஆச்சிரியத்தில்  சிறுது நேரம் எதுவும் சொல்லவில்லை, ஒருவருடன்  பேசி நமக்கு அந்நியமான ஒரு மனிதன் எனக்கு உணவுக்கு பணம் செலுத்தியது  பெருமையாக உணரச்செய்தது. உலகத்தில் நாம் என்றும் தனித்து இல்லை , உறவுகளை  நாம் தேடினால் கிடைக்கும். பின்பு   சோர்ந்த உடலுடன் அருகில் ஜேம்ஸ் தங்கியிருந்ததாக சொன்ன கேம்பிங் இடத்திற்கு சென்று  வெந்நீரில் குளித்தேன் உடல் சோர்வும் மனமும் உற்சாகம் கொண்டது. அப்பொழுதே இருள் சூழ தொடங்கியது. பிறகு bridge bay கேம்பிங் இடத்திற்கு வரைபடத்தை கொண்டு புறப்பட்டேன்.  உடல் என்னை  எப்படியாவது கேம்ப் இடத்தை கொண்டு சேர்த்துவிட்டு என கெஞ்ச தொடங்கியது. அதனால் 35 வேக சாலையில்  50 ஓட்ட ஆரம்பித்தேன், அவசரமாக வளைவில் திரும்பும் பொழுது  சிறு மான்கள்  எல்லாம் சாலையின் மறுக்கரையிலும் , கவலையுடன் மறுமுனையை பார்த்து கொண்டிருந்தன , பிறகு தான் தெரிந்தது தாய் மானுக்கோ  அல்லது கூட்டத்தின் தலைவி பார்க்கின்றன என தெரிந்தது . அந்த தனித்த மான் சாலையை  கடக்க பரிதவிப்புடன் இந்த முனையில் , நான் காரை நிறுத்தினேன் , பின்பு பெண் மான் சாலையை கடந்து சென்றது. மான்களுக்கு சாலையை கடப்பது வாழ்வா சாவா என்ற தின போராட்டம் தான் என நினைக்கிறேன். பின்பு என் அவசர புத்தியை குறைத்து  மெதுவாக  காரை செலுத்தினேன். தடவி தடவி சுற்றி என்  இடத்திற்கு  வந்து சேர்ந்தேன். . இன்று  கேம்பிங் கூட்டம் குறைந்து விட்டது,.புதிதாக எதிரே ஒரு வெள்ளையர் குடும்பம்  கேம்பிங் வந்திருந்தனர்  குழந்தையின் அழுகை குரலும்  நோபல் பரிசு பெற்ற  "என் பெயர் சிவப்பு" புத்தகத்தை படித்து கொண்டே தூங்கிவிட்டேன் .. 


பெருமுலை மலை பயணம் 

 இரவெல்லாம்  பெரும்  மழையும் காற்றும் தொடர்ந்து பேய்ந்து கொண்டேயிருந்தது. கூடாரம் காற்றில் இரவெல்லாம் அலைக்கழிக்க பட்டது. 
நடு இரவில் முழிப்பு வந்து விழித்த பொழுது குழந்தை அழும் குரல் இன்னும் கேட்டது. காலை ஊர் திரும்ப செல்ல வேண்டும் என்ற எண்ணத்தால் திரும்ப தூங்க  முயன்றேன், எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாமல் வழக்கம் போல காலையில் எழுந்தேன். 

இரவெல்லாம் பெய்த மழையில் வெளிய கடும் குளிர், வெளியே செல்லவே உடல் நடுங்கியது. ஆனால் நேரம்  ஆகும் அந்த இருளில் - விடிய இன்னும் நேரம் இருந்தது. 
எழுந்து தயாராகி  படுக்கையை மடித்து காரில் போட்டேன். அந்த கடும் குளிரில்  டென்ட்  பிரித்து மடித்து காரில் வைப்பதற்குள்ளே விரல்  உறைந்துவிட்டது. கடும் வலியுடன் கைகள் உரசி உரசி குளிரை குரைத்து  எப்பொடியோ மடித்து காரில் வைத்தேன். பிறகு   Great Teton  மலைத்தொடர்  பாதை தெற்கே செல்ல வேண்டும் , போர்ட்லேண்ட்  மேற்கு  நோக்கிய பயணம் , அதனால் GPS  பார்த்தபொழுது சுமார் 120 மைல் அதிகம் . ஆனால் கண்டிப்பாக  ஜேம்ஸ் பார்க்க சொன்னதால்  இவ்வளவு தூரம் வந்ததால் பார்த்துவிட்டு செல்லலாம் என நினைத்தேன்.புறப்படும் பொழுது காலை 6.30 லேசாக  வானம் விடிய தொடங்கியது. கருமேகங்களுக்கு இடையே வெண்மை பரவ தொடங்கியது , இரவின் தொடர் மழையில்  இப்பொழுது தான் குறைந்திருக்கும் மிருகங்களோ பறவையின் குரல் இல்லை ,அவையும் ஓய்வுக்கு சென்றுவிட்டன  போல.  வானில் மட்டும்  வலசை  பறவை  அதிகாலையில் எங்கோ புறப்பட்டு சென்றது. காரை   புறப்பட்டு  எப்பொழுதும்  ஏரிக்கரை சாலையை பிடித்தது.  முன்னே ஒரு Benz கார்கள் மெதுவாக  செல்வது GPS யில்  960 மைல் வீடு தோலைவு  என பார்த்த பொழுது வேகத்தை கூட்டி முந்தினேன். வேகம் பிடித்து செல்லும் பொழுது எரிக்கரை சாலையில் சில நிமிடங்கள் நிறுத்தி ஏரியையும்  மலையையும் கடைசியாக  பார்த்து விட்டு செல்லலாம் என நினைந்து வண்டியை நிறுத்தினேன். சில நிமிடங்கள் அந்த மலை பார்த்துவிட்டு புறப்பட்டேன். அப்பொழுது  ஓர்  ஒற்றை  ஓநாய் சாலையை மின்னல் வேகத்தில் கடந்தது.   The  lonely wolf  என்று சொல்லப்படும் ஒற்றை ஓநாய் பார்ப்பது அபூர்வம் , அதை மட்டும் தான் இந்த காட்டில் நான் பார்க்கவில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது.  அமெரிக்கா படங்களில் வீர  பூர்விக அமெரிக்கர்கள் பெயர் ஒற்றை ஓநாய் என்று தான் இருக்கும். அமெரிக்காவில் வேட்டையாடி மொத்த  ஓநாய்களை கொன்றுவிட்டு முற்றிலும் அழிந்துவிட்ட உயிரினம். பிறகு பெரும் போராட்டங்களுக்கு பிறகு  கனடாவில் இருந்து மஞ்சள்பாறை  காட்டில் விட்டு இப்பொழுது சுமார் 110 ஓநாய்கள் இருக்கின்றன. அந்த மலையை பார்க்க  நிறுத்தி வந்ததால் கிடைத்த பாக்கியம்.

பின்பு கார் வேகம் பிடித்து தெற்கு வாசல் வழியாக சென்று  Teton மலையை vista இடங்களில் இருந்து பார்த்துவிட்டு  அங்கிருந்து  idaho  falls  சென்று  I-84 பிடித்து ஊர் செல்ல திட்டம்.

grand teton  என்ற சொல் பிரெஞ்சு மொழியில் பெரிய முலை என்று தான் பொருள். மலைத்தொடரில்  உயர்ந்த  மலையில் ஒன்றின் பெயர் தான் grand  Teton. 
 மலைகள்  பூமித்தாயின் முலைகள் தான் மலைகள் . அவை தான்  உயிரினங்களுக்கு உயிர்ப்பாலாக மழையை  தருகிறாள். நம் தாயின் முலை  போன்றது தான்  மலை. அதன் புனிதந்தை மறந்து ஒரு காம பொருளாக பார்க்க  பழகிவிட்டோம். " இடம் பொருள்  ஏவல் "   படத்தில் வைரமுத்துவின் வரிகள்  "தாய் முலையை அறுக்காதே" பாடல் வரிகள் மனதில் ஓடியது.  
கார்  கிழக்கு நோக்கி செல்ல செல்ல அந்த  ஓங்கியிருந்த மலை கண்ணில் பட்டது , வழியெங்கும் காரை நிறுத்தி அந்த மலைதான் பார்த்துக்கொண்டு வந்தேன்.
இப்பொழுது தான் எனக்கு நான் இரண்டு நாட்களாக  இந்த மலைத்தொடரை ஏரிக்கரையில் தூரத்தில் இருந்து தான் ரசித்து வந்திருக்கிறேன் என்று தெரிந்து.  
முந்தானை கொண்டு  மார்பை மறைப்பது போல பூமாதேவி காற்றின் கரங்களை கொண்டு  வெண்மேக முந்தானையால் மார்பை  மறைக்க  முயன்று கொண்டேயிருந்தாள். 

   


ஜேம்ஸ் மனதில் நன்றி சொல்லிக்கொண்டு  தெற்கு பாதை இயற்கையின் அழகை  கொட்டியிருந்தது. Wyoming  மற்றும் Montana  வாய்ப்பு கிடைத்தால் பார்த்தே ஆக வேண்டிய  மாநிலங்கள். Glacier national  park  Montana  போர்ட்லாண்டில் இருந்து வடக்கேகிழக்கே   மொண்டனாவில் கனடா எல்லையில் உள்ளது. 

பின்பு   El  Tequila  Jackson Wyoming உள்ள மெக்ஸிகன் உணவகத்தில்  பல் விளக்கிவிட்டு காபியுடன்  breakfast barito சாப்பிட்டேன். காலை உணவுக்கு மெக்ஸிகன் உணவு   நான் பயந்ததை விட நன்றாக இருந்தது.
                                                    


பின்பு  ஊரை நோக்கி பயணம் தொடர்ந்தது.  Idaho falls நகரை சேரும் வரை   wyoming வழியாக ஊரை ரசித்து கொண்டு வந்தேன். பின்பு  மனதில்   மூன்று நாட்களாக நடந்தை  கோர்வையாக   மனதில் அசைபோட்டு படிய பயணம் தொடர்ந்தது. 

                   


நடுவில் காஸ் போட மட்டும் வண்டியை நிறுத்தி ஒரு வாழைப்பழம்  சாப்பிட்டு பத்து நிமிடங்களில் புறப்பட்டேன்.  பயணம் 3 மணி வரை தொடர்ந்தது அதற்கு பிறகு கார் ஒட்ட Boise  வந்தேன்.  ஒரு மணி நேரமாவது காரிலிருந்து விடுதலை வேண்டும் என்று  பாரில் பீர்யுடன் உணவு  உண்ணலாம்  என்று  சென்றால் அங்கு உணவு இல்லை.பின்பு  நீலநிலவு(Blue moon ) பீர் குடித்தேன். மனதின் வெறுமை குறைந்தது. பிறகு புறப்பட்டு  போர்ட்லேண்ட் நோக்கி பயணம் தொடர்ந்தது. பின்பு ஓரிகன் வந்து La- Grande  என்ற சிற்றுரில்  பிஸ்சா சாப்பிட்டேன். 



இரவு வர சோர்வும் சேர்ந்தது , 8 மணியளவில் எதிரில்  படகை ஏற்றி சென்ற வண்டியின் சிவப்பு விளக்கு கண்ணுக்கு  தெரியவில்லை. இதற்கு மேல் வண்டி ஓட்வது நல்லது அல்ல என்று  அங்கேயே ஒரு ஒய்வு எடுக்கும் இடத்தில நிறுத்தி ஒரு மணிநேரம் தூங்கினேன். பிறகு புறப்பட்டு வழியில்  காருக்கு காஸ் அடித்து எனக்கு ஒரு காபி வாங்கிக்கொண்டு பயணம்  தொடர்ந்தது அப்பொழுதும் இன்னும் 200 மைல்  செல்ல வேண்டியிருந்தது.

என் அமெரிக்கா வாழ்க்கையை இந்த முதிவெண்ணிற்காலத்துடன்  முடித்து கொண்டு இந்தியா  செல்ல  விரும்பியதால் இந்த  கனவு பயணத்திற்கு சென்றேன். அமெரிக்காவில் இது கடைசி பயணமாக இருக்கலாம், அனால் என் வாழ்வின் நான் கனவு காணும் பயணத்தின் முதல் படி , ஏனக்கு இந்திய துணைக்கண்டம்  முழுவதும்  ஒரு சாதாரண   இந்திய கிராமத்து  கூலித்தொழிலாளி போல   அரசு பேருந்துகளிலும் ,  unreserved ரயில் பயணங்களில் குறைந்த பணத்துடன் ஒரு  நாடோடி போல என்னால் பயணிக்க முயல முடியும் என்ற நம்பிக்கையை இந்த பயணம் கொடுத்தது.  நான் ஒரு நாடோடி என்று கண்டுணர இந்த பயணம் உதவியது. மனம் செல்லுப பாதைக்கு என் உடல் சென்றது அது ஒரு பெரும் பேராக இந்த வயதில்(அப்படி ஒன்றும் வயதாகவில்லை!!) தான் நான் நினைக்கிறேன். 

இரவு ஒரு  மணிக்கு அறை வந்து சேர்ந்து  குளித்து தூங்கிவிட்டேன் ,  காலை  காரை ஒப்படைத்த பொழுது  2300 மைல்  என்று சொன்னபொழுது  hertz அலுவலக பெண்மணி என்னை பார்த்த பார்வையில் எனக்கு தெரிந்தது "நானும்  Nomad  தான் " 



                                                                                                                                                உணர்வும்  எழுத்தும் 
                                                                                                                                                  Nomadயின்  ஆனந்த் 





































Sunday, September 11, 2016

வீடற்ற அமெரிக்கர்கள்



                              
                                                                    வீடற்ற அமெரிக்கர்கள்

   
    அமெரிக்காவின் முதல்  முன்று பிரச்சனைகள்  , துப்பாக்கி கலாச்சாரம், நிறவெறி அடுத்ததாக வீடற்ற அமெரிக்க குடிமக்கள்(Homeless).   அமெரிக்காவில் மட்டும் 35 லட்சம் வீடற்ற மக்கள் வாழ்கின்றனர். அதில் குழந்தைகள் சுமார் 1 லட்சம் அடங்கும். உலகில் எங்கும் வீடற்ற மக்கள் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவில் இதை பார்ப்பது என்ன காரணம்  என்று எப்பொழுதும் யோசிக்க வைக்கும் அமெரிக்காவில்  பெரும் நிலப்பகுதி, ஒவ்வொரு வீடும்  நம் தேவைக்கு அதிகமான இட வசதி கொண்டவை. உலகின் பொருளாதரத்தில் முதலில் உள்ள நாடு. வீடற்ற நிலைமைக்கு மக்களை கொண்டுசெல்லும் காரணம் என்னவென்று தெரிந்த  கொள்ள ஆர்வம். 


சில வாரங்களுக்கு முன்  வாஷிங்டன்போஸ்ட் நாளிதழில்   ஒரு 80 வயது பெண்மணி தனக்கு அரசாங்க சமூக  பாதுகாப்பின்  வழியாக  100000$ வரவேண்டும் என 10 வருடங்களாக  போராடி இப்பொழுது  தான் பெற்றார். அவர் 40 ஆண்டுகள் வேலைசெய்து சேர்த்த பணம். வேலையிழந்த தன பெண்ணுக்கு பாரமாக  இருக்கக்கூடாது என  அவளுக்கு  தெரியாமல் வாஷிங்டன் தலைநகரில்  ஹோமேல்ஸ் இருந்து வந்தார். இந்த செய்தி என்னை மிக ஆச்சிர்யத்தில் ஆழ்த்தியது.  நாம்  பொதுவாக  நினைப்பது போல   வீடற்ற  மக்கள்  போதை  மற்றும் குடி, மனப்பிறழ்வும்  மற்றும் கரணம் அல்ல என்று தோன்றியது.

போர்ட்லேண்ட் ஒரு வித்யாசமான  நகரம். இங்கு  மேயர்  அரசின் பொதுஇடங்களில் வீடற்ற  மக்கள் டென்ட் அடித்து  பொதுமக்களுக்கு தங்கலாம் என  அறிவித்துவிட்டார். அதனால் நான் ஹிக்கிங் செல்லும்பொழுது  கூட  வரும் அமெரிக்கர்கள்  அவரை கழுவி கழுவி  ஊற்றுவார்கள் , எப்பொழுதும் இந்த பிரச்சனையை பேசுவார்கள்  ஒரு பணக்கார  தனத்துடன்  எதோ வேண்டாத மக்கள் தன இடத்தை வந்து பிடித்துக்கொண்டதாக புலம்புவார்கள்.அதனால் பல நாட்களாக    போர்ட்லேண்ட்  நகரில் வாழும்  வீடற்ற மக்களுடன் பேசி அதை புரிந்து  கொள்ள  முயலவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் போர்ட்லேண்ட் நகரம் செல்லும் பொழுது தோன்றும். 

இன்று(செப்டம்பர் 11)  போர்ட்லேண்ட்  நகரில் உள்ள  சினிமா  21 என்ற அரங்கில்  "hunt  for the  wilder people "  படம் பார்த்துவிட்டு வடமேற்கு போர்ட்லேண்ட் கறுப்பினர் வாழும்  நகரம்  என்றும் அதிக வன்முறை நடக்கும் இடம் என்று  கேள்வி பட்டிருப்பதால் அங்கு எப்படி இருக்கிறது என்று   பார்க்கும்  ஆர்வத்துடன் தெருக்களில்  சுற்றி வந்தேன். 
அப்படி ஒன்றும் கருப்பு இனத்தவரை பார்க்க முடியவில்லை, பழைய வீடுகள் நிறைந்த  தெருக்கள் கொண்ட வீடுகள் இருந்தன. போர்ட்லேண்ட்  நகரில்   எப்பொழுதும் பார்ப்பது போல  வீடற்ற மக்கள் தெருக்களில் இருந்தனர்.

அவர்களை மிக எளிதாக  உணர  முடியும்   வெளிர் கண்கள் , உணவு குறைவாக  உண்பதால் சற்றே மெலிந்த உடல் வாகு , பல நாள் குளிக்காமல் பல்விளக்காமல் பரட்டை தலையுடன் திரிவர்.கண்களில் போதை , தமக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்று தெரிந்தும் கூடவே ஒரு நாய் , நான் ஒரு  முறை ஒரு தாய்  இரு குழந்தைகளுடன்  பார்த்திருக்கிறேன்.

சாலையோரத்தில் ஒரு இளம் வயது பெண்மணி நின்றி  1$ நாளிதழ் விற்றுக்கொண்டிருந்தாள். மெலிய உடல்வாகு , Caucasian உரிய பொன்னிற சுருண்ட கூந்தல் ஆனால் பல நாள்  தலைக்கு குளிக்காமல் அது காய்ந்து போய் இருந்தது. கண்கள் வெளிறி அதில் ஈரம் இழந்து வறண்டு தோன்றியது . அவள் பூக்கள் அச்சடித்த நீண்ட முழங்கால் வரை கவுன் மற்றும் சிவப்பு டிஷர்ட் அணித்துஇருந்தாள்.அது இன்னும் அழுக்கு படியாமல் வீடற்ற மக்களின் கந்தல் ஆடி நிலைக்கு செல்லவில்லை. அவள் இந்த படத்தில் இருந்த புன்னகையை இழந்து கன்னங்கள் ஒட்டி மெலிந்தியிருந்தாள் 





நான் அவளை கடந்து பக்கத்தில் உள்ள ஒரு பழைய புத்தக கடையை சென்று புத்தகங்களை பார்த்தேன் . என் மனம் அந்த பெண்ணை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியது.திரும்பி வந்து 1 $ கொடுத்து "street roots " என்ற இதழை அவளிடம்  வாங்கினேன். சுற்ற தயக்கத்துடன் நான் உங்களுடன் பேசலாமா என்று கேட்டேன். அவளும் சற்று தயக்கத்துடன் சரி என்றாள். 

நான் நேரடியாக அவளை கேட்டேன்  are  you  homeless ? என்று அவள் ஆமாம் என்றார் 

ஏன்? என்றபொழுது இந்த நாட்டில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் வீடற்ற மக்கள் ஆகும் வாய்ப்பு அதிகம் என்றாள் .

அவள் இண்டியானா மாநிலத்தில் இளநிலை படித்துவிட்டு போர்ட்லேண்ட் முதுநிலை பட்டம் பெற வந்து, அறை  நண்பனோ அல்லது நண்பியோ வின் வன்முறை மற்றும்  அடிமைத்தனத்தை  தாங்க  முடியாமல் வெளியேறி , சில வாரங்கள் கல்லூரி நண்பர்களுடன் தங்கிக்கொண்டு இருந்து போன மாதத்தில் இருந்து தங்க கூரையின்றி   பூங்காவில் டென்ட் அடித்து தங்குவதாக சொன்னாள். அவளுக்கு  தாய் தந்தையர் ஊரில் உள்ளனர், அனால் அவள் அவர்களை தேடி திரும்பி செல்ல விரும்பவில்லை. காரணம் அவரகள் ஒரு atheist  கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் அவர்கள் என்னை  இந்த நிலையில் இருப்பதால் வெறுப்புடன் என்னை ஏற்றுக்கொள்வதை என் மனம் ஒப்பவில்லை என்று சொன்னாள். பட்டம் பெற்ற  நீ ஏன் ஒரு வேலை தேடவில்லை என்ற கேட்டபொழுது  தான் தேடுவதாகவும் வீடற்ற மக்களை வேலையில் அமர்த்துபவர்கள் எளிதாக அவர்களின் முட்டைகள் மற்றும் அவர்கள் பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடுவர். மற்றும் வீடற்ற மக்கள் சோம்பேறிகள் , வாழ்க்கையில் முன்னேறும் எண்ணம் அற்றவர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் உள்ளதால் வேலை கிடைப்பது சிரமம் என்று சொன்னாள். நீ நம்பிக்கையுடன் ஒரு நாள் இந்த நிலையில் இருந்து மீண்டுவிடுவாய் என்று நம்புகிறாயா? இல்லை வாழ்நாள் முழுக்க தெருவாசியாக இருப்பாயா? தான் அரசாங்க உதவி வீட்டுக்கு கேட்டிருப்பதாகவும் அது இந்த கிறிஸ்துமஸ் முன் கிடைத்தவுடன் நான் வீட்டிற்கு செல்வேன் என்று சொன்னாள் மற்றும் வேலை கிடைக்க  முயன்று கொண்டிருக்கும் வழிகளை சொன்னாள்.

வீடு வாடகை மிக அதிகமாக ஆனது தான் வீடற்ற  மக்கள் உருவாக முக்கிய காரணம் , வேலை இழப்பு , திடீர் என வீட்டில் உள்ளவர்க்கு உடல் நிலை சரியில்லாமல் செல்வது அதனால் வீட்டைவிட்டு வெளியேறும் நிலைமை, விவாகரத்து  ஆகிய பல காரணங்கள். 

வெளியூரில் இருந்து நாம் இங்கு வந்து எதோ வகையில் பிழைக்கிறோம் இங்கு பிறந்து வளர்ந்த மக்கள் உணவுக்கும் இருப்பிடத்திற்கு அலைகின்றனர் , இந்தியாவிலும தெருவில் வாழும் மக்கள் உள்ளனர், ஆனால்  படித்து தாய் தந்தையர் சொந்தங்கள் இருந்து அனாதையாய் வாழும் நிலை வரவில்லை.

அடுத்த முறை ஒரு வீடற்றவனை பார்க்கும் பொழுது ஒரு கரிசனத்துடன் அணுகுங்கள், எதோ ஒரு பிரச்னை அவர்களை இங்கே கொண்டு வந்துள்ளது அதை கடக்க சிறிய உதவி செய்வதற்கு தயங்காதீர்கள். இந்த உலகத்தில் ஒரு மனிதன் இன்னொருவனை நேசிக்கிறான் என்று கடவுளுக்கு உணர்த்துங்கள்.


https://www.washingtonpost.com/local/i-wasnt-crazy-a-homeless-womans-long-war-to-prove-the-feds-owe-her-100000/2016/08/22/3913e4c2-6541-11e6-8b27-bb8ba39497a2_story.html


http://www.homeaid.org/homeaid-stories/69/top-causes-of-homelessness

www .streetroots.org 


டேவிட்  - புதிய பருவம் வீடற்றவன் - ஏப்ரல் 29
நான் காலை உணவு நியூ சீசன் வயறு நிறைய சாப்பிட்டுவிட்டு திரும்பும் பொழுது ஒரு மனிதன் கார்டில் பொருட்களுடன் பேருந்து நிலையத்தில் நின்று  கொண்டிருந்தான்.அவன் சாப்பிட்டு இருப்பானோ என்ற எண்ணம் வர காரை ஒரு குறுக்கு சாலையில்  தெருவில் நிறுத்திவிட்டு நடந்து சென்று அவனுடன் பேசினேன். நீண்ட கூந்தலும் கண்ணில் சிறு போதையும் கைகளில் சிராய்ப்பு களுடன். இருந்தான். அவனிடம் நீ எங்கு தங்குவாய் என்று கேட்டபொழுது அவன் இந்த சாலையில் இங்கு தன தங்குவேன் இல்லை என்றல் Forest grove என்ற அடுத்த ஊரில் தங்குவதாக சொன்னான்.இங்கு பல  பீர்  கேன் மற்றும் பாட்டில் எடுத்து மறுசுழற்ச்சி போட்டு பணம் எடுப்பதாக சொன்னான். பத்து வருடங்களாக வீடற்றவனாக வாழ்வதாகவும் இந்த முறை இரவில் அடைக்கலம் தேடாமல் குளிரில் வாழ்ந்த பார்க்க முயன்றதாகவும் சொன்னான்.இந்த வருடம் தான் மிகவும் மழையும் குளிரும் அதிகமாக இருந்த காலம்.வாழ்வின் மாற்றங்களை தேடும் மனிதனின் எண்ணம் தன்னை இன்னும் ஒரு படி மேலே போராட துணிவை தான் காட்டுகிறது. வீடற்றவனுக்கு குறிக்கோள் இல்லை என்று நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானது. இரவில் பெருங்குளிரில் தான் மற்றவர்களுக்கு நடந்து சென்று பீர் வாங்கி வருவதும்  சில நாள்  சூடான சூப் வாங்கி வந்து தாங்கள் பகிர்ந்து குளிரில் அதன் வேதுமையை மகிழிந்ததாகவும் அவனின் சொற்கள் என்னை வியக்க வைத்தது.அந்த வார்த்தைகளில் பெருமையோ அற்று சாதாரணமாக கடந்து சென்றது அவனிடம் இருந்து. அந்த செயலில் அவன் அடையும் திருப்தி ஒருபோதும் நம்மால் உன்னர முடியாது.

தான் கலிபோர்னியாவில் இருந்த பொழுது ஒருவன் தன்னை காலை தடுக்கி விழவைத்து ஒன்றை மாதம் கோமாவில் இருந்த தாகவும் அதனால் தன்னால்  ஒரு வேளைக்கு செல்ல முடியாத நிலைமையில் இருந்து தன்னை ஒரு பெண்மணி  தனக்கு தாயாக அறிவுரை சொல்லி இந்த பீர்  கேன்களை எடுத்து விற்கும் வேலை செய்வதாக சொன்னான்.வரம் 100$ அரசாங்கம் தருவதாகவும் அதனை கொண்டு பொருட்களை வாங்கி சேகரிப்பதாகவும் , தனக்கு அரசாங்கம் வீடு(Affordable housing ) தரும்பொழுது உபயோகிக்க. அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னிறுமையும் . பிறகு ஆண்களில் வயதிற்கு ஏற்ப முன்னிருமை தருவதாகவும் தனக்கு 33 வயதான பிறகு தான் வீடு கிடைக்கும் என சொன்னான். அதனால் இன்னும் இரண்டு வருடங்கள் வீடற்றவனாக வாழ்க்கை பயணத்தை எதிர் நோக்கி கொண்டிருப்பதாக தன் வாழ்க்கையின் பயணத்தை பகிர்த்தான்.

தான் வனத்தோப்பில் ஒரு  தார்பாலின் கொண்டு விடு கட்ட முயன்றதாகவும் அதை கட்டி முடித்து அங்கு குடியேற சென்ற பொழுது தேனிக்கள் குடு கட்டி கொண்ட அந்த தோப்பில் ஒரு நாள் அவை அவனை துரத்தியதாகவும் அதனால் மண்ணில் பிரண்டு அவைகளிடம் இருந்தது தப்பிக்க முயன்று, பிறகு நெருப்பை கொளுத்தி அவற்றை விரட்ட நினைத்த பொழுது தன விடும் எறிந்து  விட்டதாகவும் திரும்பவும் விடு கட்ட முயல்வதாக சொன்னான்.

ஒரு வழிப்போக்கனுடன்   பேசுவது ஒரு நல்ல அனுபவம் . என் எனில் அவன் நம்மை  ஆராயப்போவதில்லை மற்றும் பிறகு அவனை நாம் பார்க்கவும் போவதில்லை அதனால் உள்ளத்தில் இருந்து பேச முடியும்.



































Sunday, February 21, 2016

அமெரிக்காவில் நில போராட்டம்



  அமெரிக்காவை நமக்கு தெரிந்தவரை ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சி பெற்ற மாநிலங்கள், அம்மாநிலகங்களை அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் மாநில வரி,காவல்துறை ,சட்ட ஒழுங்கு பாதுகாப்பு,வாகன உரிமை மற்றும் ஓட்டும் உரிமை எல்லாம் சுயேச்சை பெற்றது .அதுபோல் சுயாட்சி பெற்ற மாநிலங்கள் என்றால் அம்மாநிலத்தின் நிலங்கள் அந்த மாநில அரசின் பொறுப்பில் அதாவது அந்த நகர அல்லது ஊராட்சியிடம் (county ) இருப்பதாக தான் நாம் எதிர் பார்க்கமுடியும். ஆனால் மேற்கு கரையில் உள்ள மாநிலங்கள் நிலை வேறு. நெவேடா - 81%, யூடாஹ் -57%, நெவேடா- 84.5% , ஒரேகோன் - 53% மத்திய அரசின் (Federal government ) கட்டுப்பாட்டில் உள்ளது.





இந்த நிலங்களை மத்திய அரசின் நான்கு நிறுவனங்கள் மேலாண்மை செய்கின்றன. அவை அமெரிக்க காடுகள் சேவை(USFS ) இது நாம் பயணிக்க கூடிய காடுகள் பராமரிப்பு,மற்றும் மேற்பார்வை , மர வியாபாரம் மற்றும் மிருகங்கள் பாதுகாப்பு.அமெரிக்க பூங்கா காப்பகம் (NFS ) -இந்த மத்திய அரசு நிறுவனம் தான் நாம் சுற்றுலா சென்று பார்க்க கூடிய நிலங்களை பாதுகாக்கின்றன. யோஷிமிடே காடு (Yosimite national forest), கரண்ட் கேன்யன் (Grand canyon ) ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.அடுத்து மீன் மற்றும் வனவிலங்கு காப்பகம் (WFS ). இந்த முன்று நிறுவனங்களும் 360 மில்லியன் ஏக்கர் நிலங்களை பராமரிக்கின்றன.இதை விட முக்கியமான அரசு நிறுவனமான நில மேலாண்மை நிறுவனம்(BLM - Bureau of land management ) அது தான் சுமார் 280 மில்லியன் ஏக்கர் நிலங்களை பராமரிக்கிறது. இந்த நில அளவு இந்தியாவின்  30-40% அளவுக்கு மிக பெரிய நிலங்களாகும் .BLM நிலங்களை கரி,நிலவாயு மற்றும் பல கனிம வளங்களை எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடுகிறது, மற்றும் மாடுகளை  வளர்க்க மற்றும்  மைய்சல் நிலங்களாக உபயோகிக்க அனுமதி வழங்குவது போன்ற நில மேலாண்மை செய்கிறது.

ஒரேகோன் மாநிலத்தில் போர்ட்லன்ட் நகரத்தில் இருந்து தென் கிழக்கே சுமார் 300 மைல் தொலைவில் உள்ள சிறு நகரம் பர்ன்ஸ்(Burns ). அன் நகரத்தின் சுமார் 40 மைல் தொலைவில் உள்ளது மால்ஹுவேர் மத்திய காடு (Malheur national forest ). இங்கு உள்ள மத்திய அரசின் அலுவலகத்தை சுமார் 16 பேர் அக்கரமித்து கொண்டனர் .இதை தலைமை தாங்கி நடத்தியவர் அம்மோன் பண்டி (Ammon Bundy ). இந்த போராட்டத்தை எடுத்த முக்கிய காரணமாக கருதபடுவது ,இந்த மத்திய அரசின் நிலங்களுக்கு பக்கத்தில் இங்கு பண்ணைகள் நடத்தி வந்த தந்தையும் ,மகனும் ஆன ஹம்மொண்ட்ஸ்(Hammonds )அவர்கள் அரசு நிலங்களில் அத்து மீறி நுழைந்து மாடுகள் மேய்த்ததாகவும்,வேட்டையாடி மிருகங்களை கொன்றதாக மற்றும் மத்திய அரசின் நிலத்தை தவறாக பயன் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 5 வருட சிறை தண்டனையில் உள்ளனர்.அவர்களின் பொய் குற்றத்திற்காக சிறையில் இருந்து விடுதலை பெறவும் மற்றும் மத்திய அரசின் நிலத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டி போராட்டம் தொடங்கபட்டது. இத்தகைய போரட்டத்தை எடுக்கும் படி கடவுள் தன் கனவில் வந்து கட்டளையை தான் தொடங்குவதாக அறிவித்தார். அதில் பெண்கள் மற்றும் குடும்பங்களுடன்  சுமார் 16 பேர் இருந்தனர்.

இந்த போரட்டங்களை புரிந்து கொள்ள அமெரிக்க சுதந்திர போராட்ட வரலாறை சற்று திரும்பி பார்க்கலாம். அமெரிக்காவின் முதல் சுதந்திர போரட்டங்கள் குடியிற் சட்டமறுப்பு போராட்டங்கள் முலம் தான் தொடங்கின . பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வரி கொள்கையை எதிர்த்து தொடங்கியது.அதை தொடர்ந்து கிழக்கு கரையோரம் உள்ள மாநிலங்கள் பிரிட்டிஷ் மன்னராட்சியை எதிர்த்து 13 மாநிலங்கள் ஒன்றிணைந்து 1776 ஜூலை மாதத்தில் சுயாட்சியை அறிவித்தது . முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் பதவியேற்றார் .

அமெரிக்காவை சேர்ந்த ஹென்றி டேவிட் தொரியு(Hendry david thoreau ) அவர்களின் குடியிற் சட்டமறுப்பு (Civil disobedience ) கட்டுரை தான் முதலில் அரசை கொடுங்கோன்மைக்கு எதிர்த்து போராடும் யுத்தியாக எடுத்துரைக்க பட்டது,ஒரு குழுவாக அரசின் கொள்கை மக்களின் விரோதமாக இருக்கும் பொழுது அதை எதிர்த்து போராட பயன் படுத்தும் ஆயுதமாக சொல்லப்பட்டது.
மகாத்மா காந்தி அவர்கள் அஹிம்சை முறை முலம் தொரியு அவர்களின் கொள்கையை விரிவடைய செய்து இந்த போரட்ட யுத்தியை மக்களிடம் எடுத்து சென்றார்.   ஆயுதமின்றி ஒரு போராட்டத்தை உலகத்திற்கு நடைமுறை படுத்தி காட்டினார். அதன் வரலாற்றை நான் அறிவோம்!அமெரிக்காவில் கருப்பர் இன குடிமக்களின் உரிமை சட்டத்தை பெற சுமார் 175 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது அமெரிக்காவில்  இதை முன்னின்று மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்ற தலைவர்களுடன் போராட்டத்தை நடத்தினார்






1964யில் தான் அமெரிக்காவில் கறுப்பினர் இனத்திற்கும் சமமாக நடத்தும் குடிசார் உரிமை சட்டம் நிறைவேற்றபட்டது. இந்த சட்டம் தான் கறுப்பினத்தவரை சமமாக பாவிக்கும் சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று நாம் அமெரிக்க வந்து பணிபுரிய மற்றும் குடியுறுமை (green card ) உதவும் சட்டமாகிய குடியேற்றம் மற்றும் தேசிய சட்டம் (Immigration and nationality act of 1965) தான். இரோப்பியாவில் இருந்து மட்டும் அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாமல் உலகின் பிற பகுதிகளான இந்திய ஆப்ரிக்கா என்று எல்லோரும் குடிபுக வாய்ப்பு கிடைத்தது.அதனால் நாம் என்றும் அமெரிக்க கறுப்பினத்தவருக்கு கடமைபட்டுள்ளோம் .




இந்த போரட்டமும் இன்றி உலகின் பல போரட்டங்கள் குடியிற் சட்டமறுப்பு போரட்டங்கள் முலம் தான் வெற்றி பெற்றது. அண்மையில் ஆப்ரிக்கா நாடான லைபிரிய உள்நாட்டு போர் நிறுத்தமும் இந்த போராட்டம் ஒரு விசித்திரம் நிறைந்தது.இங்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ' பழங்குடியினர் பல வருடங்களாக ஆயுதம் தாங்கி சண்டையிட்டு வந்தனர் . அங்கு வாழும் ஆப்ரிக்கா பெண்மணி லேய்மஹா பொவீ (Lehmah Bhovee ) மற்றும் அவர் குழுவினருடன் சேர்ந்து , இனி முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ பெண்கள் ஆண்களுடன் அகபத்தியம் ( உடலுறவு ) கொள்வதை நிறுத்துவதாக அறிவித்தனர் , இந்த  போரட்டத்தில் விலைமாதர்களும் கலந்து கொண்டனர்  அவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினர் . இந்த போரட்டத்தின் விளைவாக இரு குழுவினரும் பேச்சு வார்த்தை நடத்தினர் . பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து இரு குழுவினரும் வளாகத்தை விட்டு செல்லும் பொழுது இந்த அம்மையார் தான் தன் உடைகளை களைய போவதாக அறிவித்தார் , தன் தாயின் வயதில் இருப்பவரை நிர்வாணமாக பார்ப்பது மிக பெரிய பாவ செயலாக ஆப்பிரிக்கா கண்டத்தில் பார்க்கப்படுகிறது . அதனால் இரு குழுவினரும் பேசி சுமுகமான முடிவுக்கு வந்தனர் . இந்த போராட்டம் முலம் தான் அமைதி லைபீரியாவில் அமைதி திரும்பி பெற முடிந்தது. அதற்காக லேய்மஹா பொவீ (Leymah Gbovee ) 2001 அமைதி கான நோபெல் பரிசு கிடைத்தது.





தன் நாட்டில் ஒரு 16 பேர்கள் ஒரு அரசு அலுவகத்தை அக்ரமித்தவர்களை தடுக்க அரசு கையாண்ட விதம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .எந்த அரசாங்கமும் போரட்டங்களை முளையிலேயே அழிக்க நினைக்கிறது.அதிகாரவர்கத்தினரை  எதிர்த்து கேள்வி கேட்பதை நசுக்கபார்க்கிறது.இந்த போராட்டத்தில் பங்கு கொண்ட லவாய் ஃபினிகம்(LaVoy Finicum ) என்பவர் அவர்களுக்கு ஆதரவு தந்து ஒரு குழுவினருடன் ஒரு சமுக சந்திப்புக்கு செல்லும் வழியில் மத்திய புலனாய்வு துறை (FBI ) துறையால் சுட்டு கொல்லப்பட்டார்.அதற்கு புலனாய்வு பிரிவு அவர் எங்களை சுட வந்தார் என்று கூரினர், அனால் தற்காப்புக்காக பின்னால் இருந்து சுட்டு கொன்றனர்.அதை நிருபிக்க ஒரு காணொளி(https://www.youtube.com/watch?v=gjl1hefqqWI) வெளியிட்டனர். அவருடன் பயணித்த ஒரு பெண்மணி அவர் துப்பாக்கி எடுக்கவில்லை என்று பிறகு வாக்குமுலம் கொடுத்துள்ளார்.பின்பு சுடப்பட்ட லவாய் அவருடன் வந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எம்மான் பண்டி மற்றும் அவர் சகோதரர் கைது செய்து முல்டிநோமாஹ்(Multinomah) சிறையில் அடைத்தது. ஜாமீன் பெற முடியாத வழக்கை பதிவு செய்தது.

அதன்பிறகும் நான்கு பேர் அந்த ஆக்கரமிப்பை விட்டு வராமல் இருந்தனர்.அவர்களின் பாதுகாப்பிற்க்காக அவர்கள் ஆக்கிரமிப்பை கைவிடும்படி எம்மான் பண்டி முறையிட்டார். பின்பு நெவாடா மாநிலத்தின் மக்கள் பிரதிநிதி அம்மையார் மிசெலே ஃ பயோரியா(Michele Fioria ) மற்றும் பில்லி கிரகாம்(Billy Graham )அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களும் சரண் அடைந்தனர் .இந்த போராட்டத்தில் பங்கெடுத்த மக்களை அரசு அதிகாரிகளை அவர்களுடைய கடமையை செய்யவிடாமல் தவிர்த்தது. வன்முறை முறையில் துப்பாக்கி கொண்டு வன மேர்பார்வை அலுவலகத்தை அபகரித்தது. அமெரிக்காவை எதிர்த்து போர் புறிந்த குற்றம் சாட்டப்பட்டது . 15 பேரையும் கைது செய்து ஜாமீனில் வெளி வரமுடியாமல் சிறையில் அடைத்தது .இந்த போராட்டம் சுமார் 41 நாட்கள் நடந்தது . இதே போராட்டத்தை கறுப்பின மக்கள் செய்திருந்தால் அரசாங்கம் 41 நாட்கள் காத்திருக்குமா , 41 நிமிடங்களில்  பிரச்னையை திர்த்திருக்கும்  என மக்கள் FB கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர போர்ட்லன்ட் வந்த எம்மான் பண்டியின் தந்தை கிளிவேன் பண்டி (Cliven bunty ) ஜாமீனில் வெளிவர முடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவரின் சொந்த மாநிலமான நெவாடாவுக்கு சிறைக்கு அனுப்பப்பட்டார். இவருக்கும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது. 2014 இவர் ஒரு அத்துமிறி காட்டில் மாடு மேயித்த குற்றத்திற்காக சுமார் 2 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க பட்டார்  , இவரின் மாட்டை ஜப்தி செய்ய BLM அதிகாரிகள் வரும் பொழுது சுமார் 400 பேர் இதில் பாதி பேர் துப்பாக்கி கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர் , அதனால் மத்திய நில அதிகாரிகள் திரும்பி சென்றனர். அந்த போராட்டத்திற்கு இப்பொழுது கைது 2016யில் கைது செய்யபட்டுள்ளார்.இந்த போராட்டத்தில் முன்பு கலந்து கொண்டவர் தான் மிசெலே ஃபயோரியா .







இந்த நிலங்களின் பிரச்சனை வெள்ளையின அமெரிக்கர்களுக்கு முன்பே தொன்ம குடி மக்களான பைடுஸ்(Paitus ) இனத்தவர் இருந்து 1.5 மில்லியன் ஏக்கர் நிலங்களி 1895 எடுத்துகொண்டது. இதற்கு இழப்புக்கு இடாக 1 சென்ட் ஒரு ஏக்கர் விதம் 90 வருடங்கள் கழித்து இப்பொழுது தான் கொடுத்தது .எல்லாம் செலவும் போக , பிரித்து கொடுத்த பொழுது அவர்களில் ஒருவருக்கு 730$ வந்து சேர்ந்தது. இன்று இவர்களின் பரிசினை இருட்டிக்க பட்டது. இன்று எம்மான் பண்டி மத்திய அரசின் நிலங்கள் பண்ணையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்க போராடுகின்றனர், அதனால் இவர்களுடைய உரிமையும் இவர்களின் பரிசினை மறக்கபடுகிறது.




இந்த போரட்டங்களும் இதன் விளைவுகளும் இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது, இந்த நிலம் அரசுக்கு சொந்தமாக இருக்கவேண்டுமா? பண்ணையாளர்களுக்கா ? இல்லை தொன்ம குடிமக்களுக்கா இதை காலம் தான் முடிவு சொல்லமுடியும்.


(தொடரலாம்)

குறிப்பு:
http://bigthink.com/strange-maps/291-federal-lands-in-the-us
https://www.washingtonpost.com/news/post-nation/wp/2016/02/11/cliven-bundy-arrested-as-oregon-refuge-occupation-nears-possible-ending/?hpid=hp_hp-top-table-main_occupiers-935pm%3Ahomepage%2Fstory
https://www.washingtonpost.com/news/post-nation/wp/2016/02/11/cliven-bundy-arrested-as-oregon-refuge-occupation-nears-possible-ending/
https://en.wikipedia.org/wiki/African-American_Civil_Rights_Movement_(1954%E2%80%9368)
https://en.wikipedia.org/wiki/Civil_disobedience
http://www.goodreads.com/quotes/tag/civil-disobedience
http://www.cbsnews.com/news/cliven-bundy-ammon-bundy-ryan-bundy-federal-indictment-nevada-oregon-standoff/
http://www.nytimes.com/2016/01/27/us/oregon-armed-group-arrest-bundy.html?_r=0
https://www.washingtonpost.com/blogs/govbeat/wp/2014/12/01/utah-could-make-more-than-300-million-a-year-if-it-took-over-federally-controlled-land/
http://www.cnn.com/2016/02/02/us/witness-lavoy-finicum-killed-oregon/index.html?eref=rss_latest
http://www.kgw.com/news/local/ammon-bundy-court-hearing-oregon-standoff/31616906
http://www.oregonlive.com/oregon-standoff/2016/02/burns_paiutes_to_ammon_bundy_y.html
http://www.oregonlive.com/opinion/index.ssf/2016/01/in_harney_county_may_the_anarc.html

https://www.hcn.org/articles/malheur-occupation-oregon-ammon-bundy-public-lands-essay








Thursday, January 28, 2016

தாரை தப்பட்டை - ஏன் பார்க்க கூடாது?



        தாரை தப்பட்டை - ஏன்  பார்க்க கூடாது?

போர்ட்லன்ட் நகரில் பொங்கலுக்கு என்ன படம் திரையிடபடுகிறது என்று தேடிய பொழுது ஒரு மிக பெரிய அதிர்ச்சி.ரஜினி முருகன் மட்டும் தான் திரையட படுகிறது.சரி இங்கு தமிழர்கள் எண்ணிக்கை  குறைவு  என்று அமெரிக்காவில் எங்கெல்லாம் திரையிட படுகிறது என்று அறிந்து கொள்ள கூகுள் செய்தபொழுது , நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் போன்ற பெருநகரங்களில் மட்டும் தான் திரையிடப்பட்டுள்ளது.தமிழர்கள் வாழும் வளைகுடா பகுதியில் கதகளி, ரஜினிமுருகன், கேத்து  ஆகிய  படங்களே முக்கியதுவம்  தரப்பட்டு  திரையிடபடுகிறது . இந்த முன்று படங்களும் பெரிய ஸ்டார் மற்றும் பெரிய இயக்குனர்கள் படங்கள் இல்லை.

தாரா தப்பட்டை எடுத்துக்கொண்டால் , இரண்டு முறை தேசிய திரைப்பட விருது பெற்றவர், 15 வருடங்கள் தமிழ் திரைபடத்தின் மறுக்கமுடியாத இயக்குனர்,அவரை குறிப்பிடாமல்  தமிழ் திரை வரலாற்றை எழுத முடியாது. தமிழர்களின் பண்டைய கலையான கரகாட்ட கலைஞர்கள் பற்றிய படம்,அவர்களின் வாழ்வை கிண்டல்  செய்யாமல் நமக்கு கண் முன் காட்டும் ஒரு கண்ணாடி. இது எல்லாம் ஒரு காரணம் இல்லை என்று வைத்துகொண்டாலும் ,  இளையராஜாவின் ஆயிரமாவது படம்.இதை விட மிக பெரிய காரணம் தேவையில்லை என  நினைக்கிறன் படம் பார்க்க.

             

படம் வெளியிடவில்லை என்ற ஆதங்கத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, எனக்கு கிடைத்த விமர்சனம்.

அப்பாடா நாம தப்பிச்சிட்டோம் !!

பாலா படம் ஒரு டார்சர்

ரொம்ப கொடூரமா  இருக்கும்..

பாலா ஒரு சைக்கோ

இத்தகைய மிக தீவிரமான விமர்சனங்கள்  வருகின்றன, மற்ற படங்களுக்கு   "படம் மொக்க"  "கேவலமா இருக்கு" "தலைவலி" "ஓரு  தடவை  பார்க்கலாம் "ஆகிய விமர்சனங்களை தாண்டி மிக வீரியமான கருத்துகள் முன்வைக்க  படுகின்றன. ஏன் இந்த வெறுப்பு?  முதல் காரணம் பாலாவின் படங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன.  ஆழ் மன உணர்ச்சிகளை தட்டி எழுப்புகின்றன.  படம் பார்த்த ஒரு மணி நேரமாவது நம்மால்  படத்தின் பாதிப்பிலிருந்து வெளிவர முடியாது.நாம்  சாதாரணமாக தெருக்களில்,கோயில் வாசல்களில்,நடைபாதையில்,பேருந்து மற்றும் இரண்டாம்/முன்றாம்  வகுப்பு ரயில் பயணத்தில் பார்த்தும் கவனிக்காமல் கடந்து செல்லும் மனிதர்களை நம்  விழி முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.அவர்களின் அன்றாட வாழ்க்கை போராட்டங்கள் நமக்கு தெரியவருகிறது. அடுத்த வேலை உணவுக்கும்,ஒரு சக மனிதனின் தன்னை அங்கீகரிக்க வாழும் விழும்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை நமக்கு சொல்கிறது. தன்னுடைய குடும்பத்திற்கும் தனக்கும் உணவுக்காக  வாழ்வாததிற்கு போராடும் ஒரு அன்றாட மனிதனின் போரட்டங்களை நாம்  காண நேருகிறது,அத்தகைய பிரச்சனைகள்  65 இன்ச் LED தொலைகாட்சியில்  அல்லது மல்டிப்லெக்ஸில் படம் பார்க்கும்பொழுது உணர முடியாது. என் என்றால் அப்பொழுது நம் கையில் தின்று   மீதி குப்பையில் போடம்  அளவு பாப்கார்னும் சமோசாவும்  இருக்கும்.

தமிழ் திரையுலகில் இலக்கியங்களிலிருந்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவு. பாலாவின் நான் கடவுள் ஜெயமோகன் அவர்களின் ஏழாம்  உலகம்  தழுவல்.பரதேசி - முருகுவேள்  அவர்களின் எரியும் பனிக்காடு  நாவல்களை தழுவி எடுக்க பட்ட படம்.

எழாம் உலகம் இந்த புத்தகங்களில்  சொல்லப்படும் உருப்படி(பிச்சைகாரர்கள்)களின் நிலைமை நாம் படத்தில் பார்ப்பதை  விட  மிக மிக குறைவு . நல்ல  குறையுள்ள உருப்படி பிறக்க  இரண்டு மிக ஊனமான ஆண் , பெண்ணை குடிக்க வெயித்து  புணர(breeding ) விடுவார்கள்.இதை போல பல நிகழ்வுகள் உண்டு நாவலில்.நாம் பிச்சை போட முதல் காரணம் இரக்கம், அன்பு, சகோதரத்துவம்,கடவுள் நம்பிக்கை  என்ற  எந்த மண்ணாங்கட்டியும் இல்லை. முதல் காரணம் நமக்கு அந்த நிலைமை இயற்கை(கடவுள்)  தரவில்லை என்ற நன்றி உணர்ச்சி தான் உண்மை காரணம். அகதிகளின் வாழ்க்கை நிலையயை விளக்கும் நாவல்கள் பல உள்ளன அதில் பெண்களின் நிலை பரதேசியில் காண்பித்தது விட மிக கொடுமையாக நடத்தபட்டுள்ளனர் .இத்தகைய உண்மை காரணங்களை நம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஏன்  எனில் நாம் பார்க்கும் படங்கள் நம்மை யோசிக்க வைப்பதில்லை.நம்மை ஒரு வடிகட்டின முட்டாளை போல நடத்துகின்றன.நமக்கும் அது தான் விருப்பம்.நாம் எதை விரும்புகிறோமோ  அதை தான் நாம் தேடுவோம். மருந்து கசக்கும் அனால் அது தான் உடலுக்கு நல்லது, அதுபோல் இத்தகைய படங்கள்,செவ்வியல் இலக்கியங்கள் நம் மனதிற்கு கசாயம்,.

பரதேசி படம்ஆங்கிலேயர் ஆட்சியின் பொது பஞ்சம் பிழைக்க சென்ற மக்களுடைய கதை,  பரதேசி என்பதற்கான சரியான விளக்கம், எவன் ஒருவன் தன் நாட்டில் பிழைக்க வழியில்லாமல் வெறு நிலம்  செல்கிறானோ அவன் ஒரு பரதேசி. 1800 களில் தாது பஞ்சம் காரணமாக , பஞ்சம் பிழைக்க அடுத்த வேலை ஒரு கவள உணவுக்கும்  அடிமைகளை  போல தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள்,இலங்கை, மௌரிஸிஸ் போன்ற நாடுகளுக்காக தமிழர்கள்  வேறு வழியின்றி எந்த ஒரு புவியியல் அறிவும் இன்றி அந்த நிலத்தின் காலநிலை(climate ) பற்றி எந்த ஒரு தகவல் இல்லாமல் சொந்த நிலத்தை விட்டு சென்றனர்.கடலையே பார்க்காத திருநெல்வேலி ,மதுரை வரண்ட பாலை நில ஏழை விவசாய கூலிகள் கப்பலில் பயணம் செய்தனர்!இன்று நாம் எல்லா அறிவும் இருந்தும் உலக வர்த்தகமயம் ஆனதால் நம் தேவை நம்மால் முடிவெடுக்க முடியவில்லை, நம் தேவையை இன்று நம் சுற்றமும்,நிறுவனங்களும்,நிறுவனங்கள் நடத்துகின்ற அரசுகள்  முடிவு செய்கிறது. அந்த தேவைதான்  இன்று நம்மை அமெரிக்க வர செய்திருக்கிறது. நாம் இன்று இபோன் , மடிகணினி , LED டிவி ,கார், நகரங்களில் வீடு- போன்ற பொருட்களின் தேவை நம்மை பரதேசி போல இன்று அமெரிக்கா வர செய்துள்ளது. அன்று கங்காணிகள் செய்த வேலையே இன்று MNC கள் செய்கின்றன. அறிவை தேடி ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா வருபவர்கள் 1% மட்டுமே, மற்றவர் எல்லாரும் ஒரு சாதாரண வேலை செய்ய அமெரிக்க வருகிறார்கள் இங்கு வந்து M.S படிக்கும் மாணவர்கள் உட்பட. I.T தொழிலாளன்(ஆமாம் தொழிலாளன் தான்..) இதை பற்றி  இங்கு பேசினால் அதுவே ஒரு தனி கட்டுரையாக வரும்.


வன்முறை நிறைந்த படம் என்ற மிக பெரிய குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதலில்  வன்முறை  நிறைந்த  படத்திற்கு   A   தர சான்றுதழ்(18 வயதுக்கு மேல்)  வழங்கபடுகிறது. நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல வன்முறை என்றால் என்ன என்று தெரியாமல் வாழ.வன்முறை நம்மை சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கிறது.ராமஜெயம் கொலை வழக்கு, இளவரசன் ரயில் தண்டவாள  தற்கொலை(?), கோகுல்ராஜ்  கொலை வழக்கு, அதனால்  விஷ்ணுபிரியா  தற்கொலை.2012 தருமபுரி  கலவரம், ஈழம்  2009 இறுதி  போர் ,ஒவ்வொரு நாளும் இந்தியாவில்   4 நொடிக்கு  ஒரு  விபத்து  ஏற்படுகிறது.இது  எல்லாம்  நிஜம்  ஆனால்,அது எங்கோ நடந்தது நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று வெய்த்து கொண்டால்....?
சரி நிஜங்களின் வன்முறையை பற்றி பேசவேண்டாம் என்றாலும் படங்களின் உள்ள வன்முறை  சற்றும் குறைவில்லை. ஹாலிவுட் படங்களில்
Quentin torontino அவர்களின் hateful eight மற்றும் Alexandro innaritu அவர்களின் படம் reverantயில்  உள்ள வன்முறையை காட்சிகள் நிறைந்த படம். யாரும் அவர்களை சைய்கோ என்று கூருவதில்லை. "the wolf of wall street " Martin sarcose வின் ஆபாச காட்சிகளை பார்த்துவிட்டு அவரை  யாரும்  ஒரு  ஆபாச பட (porn )  இயக்குனர் என்று முத்திரை குத்தபடுவடில்லை. ஆனால் தமிழகத்தில் இத்தகைய கருத்து உருவாக்க படுகிறது.இது பாலாவுக்கும் மட்டும் அல்ல மிஸ்கின்,ராம், வெற்றிமாறன் ,அமிர்  போன்ற  இயக்குனர்களுக்கும்  பொருந்தும்.

                                 


பாலா சைக்கோ  என்று கூறுகிறார்கள் பிதாமகன், நான் கடவுள் , பரதேசி ஆகிய படங்களில் உறவுகளின் நுண்ணுணர்வை பிரிதிபலிக்கும், கண்டிப்பாக ஒரு சைய்கோ இதை உணரமாட்டான். பிதாமகனில் சித்தன் மற்றும் சக்தியின்  நட்பும், கோமதி -சித்தன் காதல், நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரர் தமக்குள் செய்துகொள்ளும் நய்யாண்டிகள். பரதேசி படத்தில் ராசா-மரகதம்(தனிஷ்கா ) உறவு,கிறிஸ்துவ மத பரிசார முறைகள்.
படம்  இரண்டரை மணி நேரம் என்றால் அதில் கிளைமாக்ஸ் 20-30 நிமிடங்கள் தான் வன்முறை காட்சிகள் அதுவும் கொடுரமான தவறு செய்பவன் கொடூரமாக தான் சாவான் என்று படங்களில் காட்சிபடுத்தபடுகிறது. தவறு செய்பவன் தண்டிக்க படவேண்டும் என்று எடுத்துணர்த்த படுகிறது.சரி அப்படியே வன்முறை பிடிக்காவிட்டாலும் படம் முடிவை பற்றி யோசிக்காமல் நாம் ஏன் முதல்  2 1/2 மணிநேரம் வரும்  உறவின் அன்பையும், நட்பையும், காதலையும்,தாய்-மகன் உறவையும், இயற்கை காட்சிகளையும், இளையராஜாவின் பின்னணி இசையையும்  பறைசாற்றும் காட்சிகளை நாம் ஏன் ரசிக்ககூடாது?



                                 



 நாம் ஏன் வன்முறையை மட்டும் மனதில் வைத்துகொள்ள வேண்டும்? நம்  சுற்றத்தின் வலிகளை உணர்பவனும் அதை உணர்ந்து  அன்புடன் பயணிப்பது தான் வாழ்க்கை.