தாரை தப்பட்டை - ஏன் பார்க்க கூடாது?
போர்ட்லன்ட் நகரில் பொங்கலுக்கு என்ன படம் திரையிடபடுகிறது என்று தேடிய பொழுது ஒரு மிக பெரிய அதிர்ச்சி.ரஜினி முருகன் மட்டும் தான் திரையட படுகிறது.சரி இங்கு தமிழர்கள் எண்ணிக்கை குறைவு என்று அமெரிக்காவில் எங்கெல்லாம் திரையிட படுகிறது என்று அறிந்து கொள்ள கூகுள் செய்தபொழுது , நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் போன்ற பெருநகரங்களில் மட்டும் தான் திரையிடப்பட்டுள்ளது.தமிழர்கள் வாழும் வளைகுடா பகுதியில் கதகளி, ரஜினிமுருகன், கேத்து ஆகிய படங்களே முக்கியதுவம் தரப்பட்டு திரையிடபடுகிறது . இந்த முன்று படங்களும் பெரிய ஸ்டார் மற்றும் பெரிய இயக்குனர்கள் படங்கள் இல்லை.
தாரா தப்பட்டை எடுத்துக்கொண்டால் , இரண்டு முறை தேசிய திரைப்பட விருது பெற்றவர், 15 வருடங்கள் தமிழ் திரைபடத்தின் மறுக்கமுடியாத இயக்குனர்,அவரை குறிப்பிடாமல் தமிழ் திரை வரலாற்றை எழுத முடியாது. தமிழர்களின் பண்டைய கலையான கரகாட்ட கலைஞர்கள் பற்றிய படம்,அவர்களின் வாழ்வை கிண்டல் செய்யாமல் நமக்கு கண் முன் காட்டும் ஒரு கண்ணாடி. இது எல்லாம் ஒரு காரணம் இல்லை என்று வைத்துகொண்டாலும் , இளையராஜாவின் ஆயிரமாவது படம்.இதை விட மிக பெரிய காரணம் தேவையில்லை என நினைக்கிறன் படம் பார்க்க.
படம் வெளியிடவில்லை என்ற ஆதங்கத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, எனக்கு கிடைத்த விமர்சனம்.
அப்பாடா நாம தப்பிச்சிட்டோம் !!
பாலா படம் ஒரு டார்சர்
ரொம்ப கொடூரமா இருக்கும்..
பாலா ஒரு சைக்கோ
இத்தகைய மிக தீவிரமான விமர்சனங்கள் வருகின்றன, மற்ற படங்களுக்கு "படம் மொக்க" "கேவலமா இருக்கு" "தலைவலி" "ஓரு தடவை பார்க்கலாம் "ஆகிய விமர்சனங்களை தாண்டி மிக வீரியமான கருத்துகள் முன்வைக்க படுகின்றன. ஏன் இந்த வெறுப்பு? முதல் காரணம் பாலாவின் படங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன. ஆழ் மன உணர்ச்சிகளை தட்டி எழுப்புகின்றன. படம் பார்த்த ஒரு மணி நேரமாவது நம்மால் படத்தின் பாதிப்பிலிருந்து வெளிவர முடியாது.நாம் சாதாரணமாக தெருக்களில்,கோயில் வாசல்களில்,நடைபாதையில்,பேருந்து மற்றும் இரண்டாம்/முன்றாம் வகுப்பு ரயில் பயணத்தில் பார்த்தும் கவனிக்காமல் கடந்து செல்லும் மனிதர்களை நம் விழி முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.அவர்களின் அன்றாட வாழ்க்கை போராட்டங்கள் நமக்கு தெரியவருகிறது. அடுத்த வேலை உணவுக்கும்,ஒரு சக மனிதனின் தன்னை அங்கீகரிக்க வாழும் விழும்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை நமக்கு சொல்கிறது. தன்னுடைய குடும்பத்திற்கும் தனக்கும் உணவுக்காக வாழ்வாததிற்கு போராடும் ஒரு அன்றாட மனிதனின் போரட்டங்களை நாம் காண நேருகிறது,அத்தகைய பிரச்சனைகள் 65 இன்ச் LED தொலைகாட்சியில் அல்லது மல்டிப்லெக்ஸில் படம் பார்க்கும்பொழுது உணர முடியாது. என் என்றால் அப்பொழுது நம் கையில் தின்று மீதி குப்பையில் போடம் அளவு பாப்கார்னும் சமோசாவும் இருக்கும்.
தமிழ் திரையுலகில் இலக்கியங்களிலிருந்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவு. பாலாவின் நான் கடவுள் ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் தழுவல்.பரதேசி - முருகுவேள் அவர்களின் எரியும் பனிக்காடு நாவல்களை தழுவி எடுக்க பட்ட படம்.
எழாம் உலகம் இந்த புத்தகங்களில் சொல்லப்படும் உருப்படி(பிச்சைகாரர்கள்)களின் நிலைமை நாம் படத்தில் பார்ப்பதை விட மிக மிக குறைவு . நல்ல குறையுள்ள உருப்படி பிறக்க இரண்டு மிக ஊனமான ஆண் , பெண்ணை குடிக்க வெயித்து புணர(breeding ) விடுவார்கள்.இதை போல பல நிகழ்வுகள் உண்டு நாவலில்.நாம் பிச்சை போட முதல் காரணம் இரக்கம், அன்பு, சகோதரத்துவம்,கடவுள் நம்பிக்கை என்ற எந்த மண்ணாங்கட்டியும் இல்லை. முதல் காரணம் நமக்கு அந்த நிலைமை இயற்கை(கடவுள்) தரவில்லை என்ற நன்றி உணர்ச்சி தான் உண்மை காரணம். அகதிகளின் வாழ்க்கை நிலையயை விளக்கும் நாவல்கள் பல உள்ளன அதில் பெண்களின் நிலை பரதேசியில் காண்பித்தது விட மிக கொடுமையாக நடத்தபட்டுள்ளனர் .இத்தகைய உண்மை காரணங்களை நம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஏன் எனில் நாம் பார்க்கும் படங்கள் நம்மை யோசிக்க வைப்பதில்லை.நம்மை ஒரு வடிகட்டின முட்டாளை போல நடத்துகின்றன.நமக்கும் அது தான் விருப்பம்.நாம் எதை விரும்புகிறோமோ அதை தான் நாம் தேடுவோம். மருந்து கசக்கும் அனால் அது தான் உடலுக்கு நல்லது, அதுபோல் இத்தகைய படங்கள்,செவ்வியல் இலக்கியங்கள் நம் மனதிற்கு கசாயம்,.
பரதேசி படம்ஆங்கிலேயர் ஆட்சியின் பொது பஞ்சம் பிழைக்க சென்ற மக்களுடைய கதை, பரதேசி என்பதற்கான சரியான விளக்கம், எவன் ஒருவன் தன் நாட்டில் பிழைக்க வழியில்லாமல் வெறு நிலம் செல்கிறானோ அவன் ஒரு பரதேசி. 1800 களில் தாது பஞ்சம் காரணமாக , பஞ்சம் பிழைக்க அடுத்த வேலை ஒரு கவள உணவுக்கும் அடிமைகளை போல தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள்,இலங்கை, மௌரிஸிஸ் போன்ற நாடுகளுக்காக தமிழர்கள் வேறு வழியின்றி எந்த ஒரு புவியியல் அறிவும் இன்றி அந்த நிலத்தின் காலநிலை(climate ) பற்றி எந்த ஒரு தகவல் இல்லாமல் சொந்த நிலத்தை விட்டு சென்றனர்.கடலையே பார்க்காத திருநெல்வேலி ,மதுரை வரண்ட பாலை நில ஏழை விவசாய கூலிகள் கப்பலில் பயணம் செய்தனர்!இன்று நாம் எல்லா அறிவும் இருந்தும் உலக வர்த்தகமயம் ஆனதால் நம் தேவை நம்மால் முடிவெடுக்க முடியவில்லை, நம் தேவையை இன்று நம் சுற்றமும்,நிறுவனங்களும்,நிறுவனங்கள் நடத்துகின்ற அரசுகள் முடிவு செய்கிறது. அந்த தேவைதான் இன்று நம்மை அமெரிக்க வர செய்திருக்கிறது. நாம் இன்று இபோன் , மடிகணினி , LED டிவி ,கார், நகரங்களில் வீடு- போன்ற பொருட்களின் தேவை நம்மை பரதேசி போல இன்று அமெரிக்கா வர செய்துள்ளது. அன்று கங்காணிகள் செய்த வேலையே இன்று MNC கள் செய்கின்றன. அறிவை தேடி ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா வருபவர்கள் 1% மட்டுமே, மற்றவர் எல்லாரும் ஒரு சாதாரண வேலை செய்ய அமெரிக்க வருகிறார்கள் இங்கு வந்து M.S படிக்கும் மாணவர்கள் உட்பட. I.T தொழிலாளன்(ஆமாம் தொழிலாளன் தான்..) இதை பற்றி இங்கு பேசினால் அதுவே ஒரு தனி கட்டுரையாக வரும்.
வன்முறை நிறைந்த படம் என்ற மிக பெரிய குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதலில் வன்முறை நிறைந்த படத்திற்கு A தர சான்றுதழ்(18 வயதுக்கு மேல்) வழங்கபடுகிறது. நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல வன்முறை என்றால் என்ன என்று தெரியாமல் வாழ.வன்முறை நம்மை சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கிறது.ராமஜெயம் கொலை வழக்கு, இளவரசன் ரயில் தண்டவாள தற்கொலை(?), கோகுல்ராஜ் கொலை வழக்கு, அதனால் விஷ்ணுபிரியா தற்கொலை.2012 தருமபுரி கலவரம், ஈழம் 2009 இறுதி போர் ,ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 நொடிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது.இது எல்லாம் நிஜம் ஆனால்,அது எங்கோ நடந்தது நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று வெய்த்து கொண்டால்....?
சரி நிஜங்களின் வன்முறையை பற்றி பேசவேண்டாம் என்றாலும் படங்களின் உள்ள வன்முறை சற்றும் குறைவில்லை. ஹாலிவுட் படங்களில்
Quentin torontino அவர்களின் hateful eight மற்றும் Alexandro innaritu அவர்களின் படம் reverantயில் உள்ள வன்முறையை காட்சிகள் நிறைந்த படம். யாரும் அவர்களை சைய்கோ என்று கூருவதில்லை. "the wolf of wall street " Martin sarcose வின் ஆபாச காட்சிகளை பார்த்துவிட்டு அவரை யாரும் ஒரு ஆபாச பட (porn ) இயக்குனர் என்று முத்திரை குத்தபடுவடில்லை. ஆனால் தமிழகத்தில் இத்தகைய கருத்து உருவாக்க படுகிறது.இது பாலாவுக்கும் மட்டும் அல்ல மிஸ்கின்,ராம், வெற்றிமாறன் ,அமிர் போன்ற இயக்குனர்களுக்கும் பொருந்தும்.
படம் இரண்டரை மணி நேரம் என்றால் அதில் கிளைமாக்ஸ் 20-30 நிமிடங்கள் தான் வன்முறை காட்சிகள் அதுவும் கொடுரமான தவறு செய்பவன் கொடூரமாக தான் சாவான் என்று படங்களில் காட்சிபடுத்தபடுகிறது. தவறு செய்பவன் தண்டிக்க படவேண்டும் என்று எடுத்துணர்த்த படுகிறது.சரி அப்படியே வன்முறை பிடிக்காவிட்டாலும் படம் முடிவை பற்றி யோசிக்காமல் நாம் ஏன் முதல் 2 1/2 மணிநேரம் வரும் உறவின் அன்பையும், நட்பையும், காதலையும்,தாய்-மகன் உறவையும், இயற்கை காட்சிகளையும், இளையராஜாவின் பின்னணி இசையையும் பறைசாற்றும் காட்சிகளை நாம் ஏன் ரசிக்ககூடாது?
நாம் ஏன் வன்முறையை மட்டும் மனதில் வைத்துகொள்ள வேண்டும்? நம் சுற்றத்தின் வலிகளை உணர்பவனும் அதை உணர்ந்து அன்புடன் பயணிப்பது தான் வாழ்க்கை.






4 comments:
வித்தியாசமான கோணத்தில் படத்தை அலசி உள்ளீர்கள்.
I think the reason why many ppl hate or skip Bala movies is they are paranoid about his style of film making which is torturing to say the least.
Plus I go for a movie which I m comfortable to watch.
I don't want to watch anything which upsets me.
That's why I avoid.
I think taste of a person in movies is similar to taste in food.
Some like pizza, some burger , some full meals...
Bala as a cook dishes out movies in same taste.
But I m not alone there are millions like me.
Good passionate writing
My view : mohan view
- his films showcase common men life to million people,at least he can show some positive end.
- all his film , at the end main characters will die, he is following this as pattern or he choose his subject like this ,don't know .
- in this 'tharai thappatai' film also , at the end hero/heroine end up in dead/mental situation, instead he can take story to how they overcome struggle and take that art to next level like to digital world or new form.we saw some videos like some college troop performing this arts in some functions/foreign countries.
- MGR/Rajini films most of them are simple story line but ending will always positive ..
- he is capturing bad things happening in society in his film, also if he ends up the story with some possible good solution for that problems. It will strongly reach millions of people.
mohan comment:Because initially when they announced this film with illayaraja... I expected this movie is like 'thillana mohanambal' kind of story ... That movie also captures those artist pain and struggle. And how rich people approaching lady artists etc... But ended with positive solution at the same time it teaches pain and beauty of that art .. Even if we see that film now,we will think to learn to play நாதசுரம் ..that much impact it will create.
Post a Comment