Thursday, January 7, 2016

ஹட்ஃபுள் எயிட்(Hateful eight) - என் பார்வை



                         ஹட்ஃபுள் எயிட் - என் பார்வை

 ஹட்ஃபுள் எயிட்(Hateful eight )  கியுண்டின்  டொராண்டினோ (Quentin torontino ) அவர்களின்  8வது படம். ஒரு இத்தாலியா திரைப்பட கலாச்சார  வன்முறை கவித்துவத்துடன் டொராண்டிநோவின் ஸ்டைல் லில் எடுக்க பட்ட . டொராண்டினோ அவர்கிளின் படத்தில் வசணங்கள் தான் பிரதானமாக இருக்கும், ஆங்கிலம் புரியாமல் ,திரைஅரங்கில் துணை  தலைப்பு (சப் டைட்டில்) இன்றி படம் பார்ப்பது சற்று கடினம். படம் அமெரிக்காவின் 19 ஆம் நூற்றாண்டில்  (1860-65)  பணத்திற்காக திருடர்களையும் கொலைக்காரர்களையும் வேட்டையாடி தண்டனை வாங்கி கொடுக்கும் காலத்தை மைய படுத்தி எடுக்க பட்ட படம். சாம்ஊல் ஜாக்சன்(Samual  Jackson ) , கர்ட் ரஸ்ஸல்(Curt russel ) , ஜென்னிபர் ஜசோன் லீக்(Jennifer jason  Leigh ) முக்கிய கதாபத்திரங்கள் நடித்து ராபர்ட்  ரிச்சர்ட்சன்(Robert richardson ) ஒளிப்பதிவில், இசை இன்னியோ மோரிகோன் (Ennio Morricone )

ஜான் ருத்(John  "Hangman " ruth)  ,  டைசி டோமர்கு (Daisy Domargue )பெண் கொலைகாரியை பிடித்து  ரெட்-ராக் என்ற ஊரில் தூக்கிலிட அழைத்து செல்லும் பொழுது , பனிப்பொழிவு காரணமாக தங்களின் குதிரைகளை இழந்த வழியில் மேஜர் வார்ரேன் (Major  warren ) மற்றும் ஷெரிப் க்ரிஸ் மன்னிக்ஸ் (Sherif  chris  mannix ) அவர்கள் சேர்ந்து ஒரு விடுதியில் தங்குகின்றனர், . கொலைகாரி தங்கையை காப்பாற்ற அங்கு  மறைந்து இருக்கும் அவள்  அண்ணன் ஜோடி (Jodi ) மற்றும் அவன் கூட்டாளிகள் சேர்ந்து நடத்தும் நாடகமும் அதனால் அங்கு ஏற்படும் கொலையும்  தான் கதைகளம்.

படத்தில்  சிறு சிறு பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கபட்டு வந்து செல்லும் நேரம் சிறுது என்றாலும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.  முக்கியமாக ஜூடி(six  horses Judy )  யாக  வரும்   ஸோ பெல் (Zoe bell ) அவர் ஒரு குதிரை வண்டியின் எடுபுடி வேலை செய்யும் தொழிலாளராக வருவார் அவர் பயணியர்களுடன் பேசி பழகும் விதம், ஒரு  கிராமத்து  பெண் போலவே வாழுந்திருப்பார். ஸோ பெல் ஒரு ஸ்டுண்ட் நடிகை, அவர் கில் பில்(Kill bill ), மற்றும் கேட் வொமென் (Cat women ) நாயகிகளுக்கு டூப் போட்டவர்.

ஒரு சிறு விடுதியில் 2 1/2 மணி நேர படத்தில்  1 1/2 மணி நேரம் ஒரு  சிறிய விடுதியில் படம் பயணிக்கும் ஆனால் திரைக்கதையும், வசனமும் சற்றும் சோர்வடையாமல் கதை செல்கிறது.

ஒளிப்பதிவு மற்றும் இசையை  பற்றி அறிவு இல்லாததால் அதை பற்றி கூர தெரியவில்லை. நன்றாக ரசிக்கும் படி இருந்தது என்று சொல்லி கொள்ளலாம்.
படத்தின் கதை  சொல்லியவிதம் மிக எளிமையாக உள்ளது, எந்த  குழப்பமும் இல்லை. இந்த படத்தை  பார்த்துவிட்டு  படம் எடுப்பது(திரைப்படம் என்பதே கதை சொல்லும் வேலை தான் )  மிக சுலபம்  என்று தோன்றுகிறது..
எந்த தேவையில்லாத  சின்ஸ் இல்லை,  பாக்யராஜ், மணிவண்ணன்  படங்களில் பார்ப்பது போல மிக தெளிவான திரைக்கதை,

வன்முறையும்  படங்களை விருப்பமுடையவர்கள் , டொராண்டினோ படங்களில் ரசிப்பவர்கள்,  படம் சற்று நீளம் பொறுமை உள்ளவர்கள் பார்த்து ரசிக்கலாம்.







No comments: