Thursday, September 5, 2024

தூண்டில் முள்ளும்,தரிசி நிலங்கள்

தூண்டில் முள்ளும்,தரிசி நிலங்களும்

இந்த வயல்கள்   கண்கானும் நிலம்வரை சுடுகாடுகள் இங்கேயே பிறந்தோம், இங்கேயே மடிந்தோம்.

கலங்காத கண்கள்‌ உலகத்தை காணா-இறந்தவர்கள் உயிர்வாழ்பர்களை உயிர்விப்பர்.

பசித்தவனுக்கு கெட்டுப்போன உணவென்று எதுவும் இல்லை.வயிருமுட்ட உண்டவன் பின்பு பசித்து இருப்பான்.

நினைவுகள் என்றும் அழிவதில்லை உடலில் பச்சை குத்தியது போல

சிலர் மேலே செல்வர் பலர்  கிழே வீழ்வர்-இப்படி தான் நகர்கிறது வாழ்க்கை.

குற்றம் செய்தவர்கள் அறியனை ஏறுவதும், மேய்ப்பர்கள் பெரும் பள்ளத்தில் வீழ்வதும்.

நூறு அடிகள் முன்னெடுத்தும் -நூற்றாண்டுகள் பின் சென்றது வாழ்க்கை.

நம் சாவு!
நம் நிழல்!
நம் மலர்கள்!
 
தமிழாக்கம்,
ஆனந்த்
 Barbs, wastelands படத்தின் வசனங்களில் இருந்து

    

Amour Fou(Twisted lovers)

 


                                            Amour Fou(Twisted lovers)


               Where the blue mountains

                rise from the lower skies

                look inside

               where the sun sets

               where the cloud spread

               there I would like to be

               there is the quiet valley

               which silences pain and woe

               where in rocky spaces

               softly sleep the primroses

               and sweeps so gently the wind

               there I would like to be

               there I would like to be

               to the forests depths

              pushes me the power of  my love

             my inner pain

             my inner pain

             if only I could stay

             if only I could be with you

             Eternally



              

Thursday, April 25, 2024

சம்கீலா - தொலைந்த ஆத்மா

சம்கீலா - தொலைந்த ஆத்மா

          நான் விடைபெறுகிறேன் உயிரே

          என் பயணம் வெகுதூரம் 

          விடை கொடுங்கள் அன்பர்களே 


          நீங்களோ தூயவர்கள் நானோ கருமேகம் 

          நீங்கள் அனைவரும் ஒழுக்கசீலர்கள்

          நானோ பாவத்தின்  அறு           

          எப்பொழுதும்  உண்மை பேசும்  நீங்கள்

          இப்பொழுது மட்டும் ஏன் பொய் சொன்னிர்கள் ? 

          நான் உங்களின் ஒருவன் என்று


          இம்மண்ணில்  உங்களுடன் சேர்ந்து 

          வாழ   பேராவல் கொண்ட என் 

          சவாசத்துக்கும் இடமில்லை 


           நான் விடைபெறுகிறேன் உயிரே

           எல்லோர் பாவங்களையும்  என் மிது

           சுமந்து கொண்டு

           விடை கொடுங்கள் அன்பர்களே 


‌‌.           ஆனந்த் 


        Translated/inspired from

       Chamkila song vida Karo lyrics by Irshad Kamil

        https://youtu.be/2dc63Lhdr-I?si=ccWhqUpdSjz-d7kr





             

 


   

        

Friday, December 24, 2021

தெரு நாய்கள்

                                                   தெரு நாய்கள் 

நான்  பல வருடங்கள் தெருக்களில் நடந்து செல்லும் போதும் வீட்டு வாசலில்,தெரு முனைகளில் வாழும் நாய்களை கடந்து சென்றிருக்கிறேன். ஒரு நாளும்  அவை எப்படி வாழ்கின்றன என்று எண்ணம் வந்ததில்லை. நான் சில வருடங்கள் கழித்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பின் என்னை தெருவில் கண்டாலே நாய்கள் குலைக்கும்.குட்டிகள்  ஈன்ற காலத்தில் பெங்களூரில் இருந்து  இரவில் பயண தோள்பை (travel bag)  உடன் வரும் பொது  நான் எதோ அதன் குட்டிகளை திருட வருபவன் என கடிக்க முயற்சித்தவை.அதனால் அதன் மீது கோபமாக வரும், என் ஊரில் என் தெருவில் என் வீட்டின் அருகில் என்னை  குலைக்கும் பொது நான் சென்னைக்கு  அன்னியனாக  உணர செய்தவை.

ஆனால்  கரோணா காலத்தில் வீட்டில் முடங்கி கிடைக்கும் போதும் , மற்றும் என் இளய மகன் நாய்களுடன் அவன் பழகும் பொது  அவனுடன் செல்கையில் எங்கள் தெருவில் இருந்த நாய்கள் உலகம் சற்றே விளங்க ஆரம்பித்தது, அதன் வாழ்க்கையும்  தேவைகளும் , நம் வாழ்வில் அதன் பங்குகளும், நாய்களுக்கும் மனிதர்களுக்கான நெடுங்கால உறவுகளும் பற்றி யோசிக்கவைத்தது.  தெரு நாய்கள் அற்றே கனடாவில் வாழும் பொது , கயிற்றில் கட்டப்பட்டு துணையுடன் செல்லும்  நாய்களும், சுதந்திரமாக சென்னையில் வாழும்  நாய்களை நினைவுகள்  எழுகிறது. அவைகளின் நினைவுகளை மறக்கமுடியாமல் அந்த நினைவுகளை என் வாழ்கை பயணத்தில் சற்றே இளைப்பாற இங்கே என் சொற்களின் மூலமாக நினைவுகளை இறக்கிவைக்கிறேன். 

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் ஆன உறவு என்பது 30000 -60000 ஆண்டுகளாக தொடர்ந்து  நீடிப்பவை  இரண்டு உயிரினங்களும்  ஒன்றாக பரினாம வளர்ச்சி அடைந்தவை.மனித பரிணாம வளர்ச்சியில் அவைகளின் பங்கு மிக முக்கியமானது. மனித குலம்  வேட்டை சமூகமாக காடுகளில் அலைந்த போதும் அவனுக்கு வேட்டை துணையாய் மற்றும் குகைகளிலும், பரந்த வெளியிலும் அவன் உறங்கும் பொது வனவிலங்குகளின்  இருந்து பாதுகாத்தன. பிறகு விவசாய சமூகமாக மனித சமூகம் மாறியபின்பு ஊர் அமைந்து ஓர் இடத்திலேயே  தங்கி வாழ்வை  தொடங்கியபோதும் அவர்களுக்கு  துணையாய் காட்டிலும், வயல் வெளியிலும் , ஆடு மாடுகளுக்கு காவலாக அவனுடன் இரவும் பகலும் வாழ்ந்தன .இன்றும் 21ஆம் நூற்றாண்டிலும் மனிதர்களுக்கு  ஆடு,மாடுகளை மேய்க்க நாய்களே துணை. மனிதன் பரிணாம வளர்ச்சியில் பல குணங்களை பல மிருகங்களிடம் இருந்து அவன் அறிந்து கொண்டிருக்கலாம். நாயை போல நன்றியுடன் இருக்கவேண்டும் என்றும், அவன் அலைந்து திருந்து அலையும் வாழ்க்கையை நாயின் வாழ்க்கையுடன் தான் ஒப்பிட்டுக்கொள்கிறான்.நாயிகளின் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களின் பங்கும் உள்ளன, அவை பிறந்து கண் விழித்து நடக்க தொடங்கியவுடன் மனித காலடிகளை தேடுகின்றன.மனித வாடையை உணர கின்றன, தன் தாயின் எஜமானனை தன்னுடைய எஜமானாக ஏற்று கொள்கின்றன. அவைகள் இன்றி மனிதர்கள் பல நூறாயிரம் ஆண்டுகள் காலத்தை கடந்திருப்பது அசாத்தியம்.அவன் தன் ஆறாம்  அறிவால் மட்டும் பெரும் காலங்களை கடந்துவிடவில்லை பல மிருகங்களின்  துணையுடன் கடந்து வந்தான்.அதன் தொடர்ச்சியாக தான் அவை மனிதர்களுடன் உறவை விடாமல் தொடர்கின்றன.30000 முதல் 60000 காலத்திற்கு முன்பு ஓநாயில் இருந்து  பிரிந்து மனிதர்களை நெசிக்கவும்  பழகி அதன்முலம்  மரபணுக்கள்  பரினாம வளர்ச்சி மனிதகுலத்துடன்  சேர்ந்து வாழ பழகிவிட்டன.


     Maxamma 

மனிதர்களின் உறவுகளுக்குள் அன்பும் பாசமும் மட்டும் இருப்பது இல்லை.
அதன் ஊடாக மட்டும் உறவுகள் பிணைக்கப்படுவதில்லை.அதற்கு அப்பால் உயிரியல்,சுயநலம், நட்பு,சமுக தேவை, வழியாகவும் பிணைப்புகள் ஏற்படுகின்றன. அந்த உறவுகளில் அன்பு பாசம், என்றே உயர்பண்புகளின் அடிப்படை மட்டும் இல்லாமல் விசுவாசம்,  பொறாமை,கோபம்,கர்வம், காழ்ப்புணர்ச்சி , என்ற பல உணர்வுகளின் ஊடாக தான் உறவுகளை பேணுகிறான். தன சொந்த இரத்த உறவுகளை தாண்டி அவனக்கு 
அலுவலகங்கள்,பயணத்தில் என்று  நேரடியாக பழக உறவுகளை தேடுகிறான். அதுவும் அவனுக்கு போதாமல் மனிதர்களுக்கு உறவுகள் தேவை படுகிறது அதனால் தான் சமூக ஊடகங்களில் உறவுகளை தேடுகிறோம்.எல்லா மனித உறவுகளிலும் எங்கோ ஒரு துளியாவது சுயநலம் கலந்து இருக்கிறது.ஆனால் சுயநலம்  இன்றி மனிதர்களை நேசிக்கும் ஓர் உயிர் என்றால்  அவை நாய்கள் இன்றும் மனிதர்கள் மிது திராத அன்பு செலுத்துபவை. 

மனிதர்கள் தன்னை போல நாய்களும் வயிற்றுக்காக வாழும் மிருகம் என்று நினைக்கிறான், அவை ஒரு வேளை உணவுக்காக மனிதர்களை நாடி வரலாம்,ஆனால் அவை உணவுக்காக மட்டும் மனிதர்களுடன் உறவு கொள்கின்றன என்று நினைப்பது தவறு.நான் எங்கள் விட்டு தெருவில் அதிக உணவு இடும் மனிதர்களிடம் அதிக அன்பும் சிறுதோ அல்லது அதன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை உணவு இட்ட மனிதர்களை ஓரே வகையாக  நேசிக்கின்றன. சில நேரங்களில் ஏன் இந்த நாய் என்னை நேசிக்காமல் அடுத்தவர்களை முக்கியமாக என் மகனை அதிகமாக நேசிக்கின்றன, நான் தானே அதற்கு  உணவு இடுகிறேன் என்று நினைத்ததுண்டு.இது  மனித மனங்களின் இருக்கும்   கீழ்மையான எண்ணங்களின்  வெளிப்பாடு.

தெரு  நாய்கள் எப்பொழுதும் பசித்தே இருக்கின்றன.முன்பு போல வீட்டில் மீந்த  உணவு இலையில் போட்டு  தெரு நாய்களுக்கோ அல்லது மாடுகளுக்கு  வைக்கும் பழக்கங்களை நாம் இழந்துவிட்டோம். அப்படியே  பிளாஸ்டிக் கவரில் கட்டி காலையில் குப்பைக்காரன்  வரும்போது  அவர்களிடமோ அல்லது அவை எடுத்து உண்ண  முடியாத பெரிய  குப்பைத்தொட்டியில் வீசுகிறோம். அதனாலேயே உணவின்றி பல நேரங்களில் அவை பெரும் பசியில் திரிகின்றன ஆனால் அவை  பெரும் பசியில் உய்யும் போதும் நான் பலமுறை ஞாயிறு  அன்று சமைக்க கறி  எடுத்து கொண்டு  நான் தெரு முனையில் வரும் போதே  வாசம் பிடித்துவிடும், ஆனாலும் ஒருநாளும் அவை உணவின் அருகில் வந்து முகர்ந்தோ அல்லது வாயை வைத்தோ  பார்த்ததில்லை.அத கறியை சமைத்து சாப்பிட்டுவிட்டு  மிச்ச எலும்புகளை சிறு துண்டுகளை அவைகளுக்கு  அளிக்க கொண்டுவரும் பொது  அவை தாவி குதிக்கும்  தொண்டை குழியில் இருந்து குழந்தை போல குழைந்து குரல் கொடுக்கும், அது தன்னுடைய  தியாக அன்பை காட்டிவிட்டு ,அவன் பாதங்களை நாக்கால் முத்தமிட்டு  பின்பு தான் உணவை ஏற்கின்றன.ஒருபோதும் அவை அவனுக்கு நன்றி சொல்லாமல் உணவை ஏற்பதில்லை.

நாய்கள் ஏதோ வயிற்றுக்காக  மனிதர்களிடம்  வாழ்வதாக நினைக்கிறார்கள் ஆனால் உலகில் உணவு உண்பதற்காக மட்டும் உயிர்கள் வாழ்வதில்லை (Man doesn't live on bread alone - Bible ). அதற்கு மேலான ஒரு தேவையை  மனிதர்களின் ஆன்மாக்கள் தேடுகின்றன.  அந்த தேடுதல் என்பது சக உறவுகள் தன மீது அன்பு செலுத்தவேண்டும் என்று ஏங்குகின்றன.ஆனால் அதே அன்பை நாம் முதலில் தரவேண்டும் என்ற எண்ணம் வெகு சில மனிதர்களுக்கு மட்டும் தான் அந்த தெய்விக பண்பு  தோன்றுகிறது. மனிதனின் உணர்வு சிக்கல்களில் முதலில் பிரச்சனையானது யார் முதலில் மன்னிப்பு கேட்பது என்பதும் தன்னை அறிந்துகொள்ள மனிதர்கள் இல்லை என்ற எண்ணம் தான்.இத்தகைய எண்ணங்கள் உறவில் சிக்கல்களையும் சில சமயம் தற்கொலை எண்ணங்களை தூண்டிவிடும்.

நாயின் உறவு என்பது உள்ளுணர்வு சார்ந்த விடயம்,அவை எதையும் நியாபகமாக வைத்துக்கொள்வதில்லை, எல்லாம் உணர்வுகளாக நினைவில் வைக்கப்படுபவை. நேற்று என்ன சாப்பிட்டோம் பத்து நாட்கள் முன்பு யார் உணவு இட்டார்கள்  என்று தகவல்களாக நினைவுகள் சேமிக்கப்படுவதில்லை. அவை அதை உணர்வாக இந்த மனிதன் தனக்கு உணவிட்டான் என்ற உணர்கின்றன. தான் பராமரித்த  மிருகங்களை காட்டில் விட்டாலும் பல வருடங்கள் கழித்து யானை மற்றும் பல மிருகங்கள் அந்த மனிதனை நேசிக்கின்றன. நாய்கள் மனிதர்கள் மிது திராத அன்பு செலுத்துபவை,மனிதர்களின் காலடிகளை தேடி கொண்டிருப்பவை,அது ஒரு துண்டு எலும்புக்காக அல்லது ஒரு பாக்கெட் பிஸ்கட்காக  அல்ல, அவை மனிதர்கள் நம் உள்ளுக்குள் இருக்கும் அன்பை நினைவுட்டி கொண்டிருப்பவை.அதனால் தான் பிறந்த சில நாட்கள் ஆன நாய் குட்டிகள் மனிதர்கள் மிது தாவி கொண்டும் அவனை திராத அன்பில் முழ்கடிக்கின்றன.அவை ஒரு போதும் மனிதர்களை கைவிடுவதில்லை.
பெட்டை  நாய்கள் குட்டிகள் இன்றவுடன்  தன்னுடன் இணை சேர்ந்த அண் நாயை கூட குட்டிகள் அருகில் அன்றவிடுவதில்லை.ஆனால் தன் அன்பு செலுத்திய மனிதனை தன் குட்டிகளை காட்டி அவைகளை உன் அன்புக்கு உரியவை என்று காட்டுகின்றன. அதன் கண்களில் அப்பொழுது பெருமிதமும், சிறு பயமும் கலந்த அந்த பார்வை இருக்கும். மனிதர்கள் பேசி கொண்டிருந்தாலோ அவர்களின் நடுவே அமர்ந்து அவை கேட்க தொடங்குகின்றன.சிறுவர்கள் விளையாடி  கொண்டிருந்தால்  நடுவில் சென்று அவர்களுடன்  சேர்ந்து விளையாட தொடங்கிவிடும்.நான் எங்கள் விட்டில் அருகில் இருக்கும் கடைக்கு சென்றாலும் காவலுக்கு வருபவை, கூடவே வந்து கூடவே திரும்புபவை.உன்னையோ உன் வாகனத்தை தெரு முனையில் பார்த்து விட்டாலோ வாலை ஆட்டிக் கொண்டு எங்கிருந்தாலும் விட்டுவிட்டு தேடி வருபவை.நீ என் அன்புக்கு உரியவன் என்று தன் நாக்கினாலும் வாலின் வழியாக  சொல்லுவிட்டு செல்பவை. மனிதர்கள் நாய்களை  தன்னை அண்டி பிழைக்கும் உயிரினமாக நினைக்கலாம், ஆனால் அவற்றின் பார்வையில், அந்த தெருவுக்கு தங்களுக்கு தான் காவல் உரிமை இருக்கின்றன என்று நம்புபவை.பிற நாய்களையோ, மாடுகள், மனிதர்கள் அவர்களின் வண்டிகள் கண்டால்  குரைக்கின்றன. அவர்களின் கண்களில் இருந்து பிரியும் வரை காக்கின்றன, அவை களை பொருத்த வரை மனிதர்கள் தன் பாதுகாப்பில் தன்  நிலத்தில் வாழும் உயிரினம்  என்று  உணர்வுடன் தான் வாழ்கின்றன.

மனிதர்கள் தம் வாழ்வில் போராட்டங்களும்,குதூகலங்கள்  நிறைந்ததாக என்னுகிறான், அவன் காணும்  திருவிழாக்களும், பண்டிகைகளும், கல்யாணம் என்று வீட்டு விசேஷங்களும் அவன் குதூகலம் கொள்ள தேவை படுகின்றன,
மனிதர்கள் கதைகள் காவியங்கள் சினிமாக்களின் வழியாக தான் காதலும் அன்பும் உணர தொடங்குகிறான்.இணை சேரும் காலங்களில் ஜோடிகளை கண்டபின் மனித காவியங்களின்  வரும் காதல்கள் அதன் போராட்டங்களும் மிக சாதாரணமாக தோன்றுகின்றன. இரண்டும் இனைபிறியாமல் இருபத்துநான்கு மணிநேரமும் தன் துணேயின் மிது திராத காதல் கொள்கின்றன, பகல் இரவு நேரங்களை கடந்து உணவை மறந்து, உடலின் மிது திராத காதல் கொண்டு  நாள் முழுவதும் திரிகின்றன.மாலைகளில் கொஞ்சியும் குலவியும் திரிகின்றன. மனித சமூகதில் ஆண்கள் போராடி துணை  அடையும் காலம் இப்பொழுது இல்லை. இன்னும் நம் சமூகத்தில் வீட்டில் பார்த்து  திருமணம் செய்வதால் தான் பாதி ஆண்களுக்கு திருமணம் என்ற ஒன்றே நடக்கிறது,  ஆனால் தன் துணையை அடைய கிடா நாய்கள் பெரும் போராட்டங்களை சந்திக்கின்றன. தெருக்களில் உள்ள பிற ஆண்  நாய்களுடன் சண்டையிட்டு வெற்றியடியும் வீரனை இணையை தான் பெட்டை தேர்வு  செய்கிறது.MadMax  ஒரு  பெரும் போராளி இதை  நான்கு  நாய்கள் சூழ்ந்து தான் வீழ்த்தமுடிந்தது. 

    Madmax 

பிறகு மருத்துவமனைக்கு  அழைத்து சென்று தான் அதன் உயிரை காக்க வேண்டியிருந்தது.அதன் Maxamma  மீது வைத்திருந்த காதல் என்பது மனிதர்கள் அப்பால் மிக பெரியது. இணை  சேரும் காலம் இல்லாத நாட்களிலும் எப்பொழுதும் அதற்கு தீராத அன்பு. எப்பொழுதும் அதனுடன திரியும்.அது குலைத்தால் தானும் குலைக்கும்.

பழகிய நாய்களின் அழமான கண்களை உடையவை கூர்ந்து நோக்கி பாருங்கள் அவை உங்களை எவ்வளவு நேசிக்க பழகிவிட்டது என்பதை அறிவீர்கள்.நாய்கள் ஆயிசு 15 வருடங்கள் அவை சராசரியாக 11-12 வயது வரை வாழக்கூடிய வை, தெரு நாய்கள் சராசரி 6-8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தாலே பெரும் சாதனை.அந்த குறுகிய நாட்களில் அவை வாழ்வின் எல்லா வற்றையும்  பார்த்துவிடுகின்றன. Muffin  என் மீதும் என் மகன் மீதும்  வைத்திருந்த அன்பு என்பது எக்காலத்திலும் மறக்க முடியாதவை. அடுக்கு மாடி குடியிருப்பில்  கேட்டில் நுழைந்து வீட்டுக்குள் வந்து வாசலில் படுத்து கொள்ளும். துரத்தினாலும் செல்லாது. கோபித்து கொண்டு அடிப்பது போல விரட்டினாலும் திரும்பவும் தேடி வரும். பெட்டை நாய்கள் எட்டு மாதத்தில் பருவம் அடைந்து விடும், எங்கள் muffin தன்னுடைய பத்து/பதினோராவது மாதத்தில் கருவுற்று எங்களுடனே இருந்தது. வயிறு பெருத்து பசு போல தெருவில் திரியும் என்னை கண்டவுடன் அப்படிய ஓடி வரும்.என் இளைய மகன் மீது திராத அன்பு கொண்டது. நாயிகளின் வாழ்க்கை விசித்திரமானது.தாய் மகள் மகன் என்ற உறவு அவை வளரும் வரை தான் உணவை வாயில் கவ்வி கொண்டு வந்து குட்டிகளுக்கு கொடுக்கும்.அவை வளர்ந்தபின் அங்கு உறவுகள் இல்லை. ஆண் +பெண்  என்ற உறவு மட்டும் தான்.தாய்-மகள், அண்ணன் -தம்பி, தாய்-மகன் என்ற உறவுகள் இல்லை.யார் அந்த கூட்டத்தில் தலைவன்,அல்லது தலைவி மட்டும் தான், கிடைக்கும் சிறு உணவில் யார் முந்தி கொள்வது மட்டும் தான் அங்கு போராட்டம்.அதனால் 
Muffin இந்த தெருவில் குட்டிகள் ஈன்ற பாதுகாப்பு இல்லை என்று நினைத்தோ அல்லது பிற நாய்களுக்கோ அல்லது மனிதர்களை  கண்டு பயந்தோ  எங்கோ சென்றுவிட்டது.அதை தேடி அலைந்த பின் ஒருநாளும் அது திரும்பவில்லை.
 நாய்களுக்கு தான் வாழும் தெருவை தாண்டி மனிதர்களின் துணை இன்றி செல்லாதவை. தெருக்களுக்கு நாய்களின் எல்லை உள்ளது.அதை தாண்டி  சென்றால் அங்கிருக்கும் நாய்களின் கூட்டம் தாக்கும்.அதனால் அவைகள் எப்பொழுதும் செல்லாதவை. அதை மீறி  எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டது.

                                    Muffin 


 சென்னை அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் 118 வருட பாராம்பரியம்  கொண்டது.  மிக பழமையான redfort போன்ற ஆங்கில கட்டிடக்கழியுடன் கட்டப்பட்ட மிக சுகாதாரமான மருத்துவமனை.



பூனை முதல், வளர்ப்பு அணில்/எலி புறா கொண்டுவரும் மனிதர்களை பார்க்கலாம்.சென்னை இப்படி கூட மக்கள் வாழ்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்,சாதாரண குடிசை மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை  பார்க்கலாம்.தெருவில் அடிபட்ட நாய்களுக்கு மருத்துவம் பார்க்கவும் வருவதும் அவை உயிர் பிரிந்தால் அங்கு கதறி அழுவதை பார்க்கலாம். மனிதர்கள் உணர்வு ரீதியான வாழ்க்கை தேவை படுகிறது. அவைகளை சக மனிதர்களால் மற்றும் தந்து விட முடியாது.
நாம் அவசரத்தில்,கோபத்தில் மற்றொரு உறவை மிக சாதாரணமாக தட்டி கழித்து விடுவோம்.அப்படி பல நேரங்களில் சக மனிதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவோம்.நாய்களை அப்படி கடந்து சென்றாலும் அவை நம்மை தேடி வரும், நம் மீது அப்பொழுதும் அன்பு செலுத்தும். அவசரத்தில் அவைகளை கண்டுகொள்ளாமல் சென்றாலும் திரும்பி வந்த பின்பு அவை தேடி வந்து அன்பு செலுத்தும். மனித ஆழ்ந்த அக உணர்வை புரிந்துகொள்பவை  நாய்கள். MadMax வளர்ந்த நாய் அதற்கு பசித்தாலும் பிஸ்கட் உண்ணாது. வறுபுறுத்து கொடுத்தால் எங்க நம் மனம் புண் படும் என்று வாயில் வாங்கி கொண்டு நம் கண்ணீன் மறைவின் தூரமாக சென்று மண்ணில் புதைத்துவிட்டு வரும். நாய்களை பிடிக்காத மனிதர்களையும் தன அன்பினால் அவன் மனதை மாற்றகூடிய சக்தி படைத்தவை அந்த சக்தி என்பது அதன் தெய்வீக அன்பு மட்டுமே அவனையும் அவை நேசிக்கின்ற அவனிடம் சென்று வாலை ஆட்டி  தன் கள்ளகபடம் அற்ற அன்பை தெரிவிப்பவை,அவன் ஆழ் மனதில் இருக்கும் அன்பையும் தோண்டி எடுத்து அவனுக்கு காட்டுபவை. 

 ஒருமுறை பைக்கில் அடிபட்டு இருந்த நாயை அழைத்து கொண்டு மருத்துவ மணி சென்றேன்  அங்கு ஒருவருடன் பேசி கொண்டிருக்கும் பொது அவர் வீட்டில் 20-30 நாய்கள் வாழ்வதாகவும் தன்னுடைய தம்பி உடல் நலம் இன்றி இருக்கும் பொது தன்னுடைய நாய்  ஒன்று தன்னுடைய உயிரை கொடுத்து தன தம்பியை காப்பாற்றியதாக சொன்னார், நாய்கள் கடவுளுடன் நேரடியாக பேசக்கூடியவை தன்னுடைய எஜமானுக்காக மனமுருகி வேண்டுபவை. அத்தகைய வேண்டுதல் தான் தன் தம்பியை காத்ததாக அவர் நம்புகிறார். நாய்களின் அன்பு தெய்விகமானது அதன் பிராத்தனைக்கு  கடவுள் செவிசாய்த்து தான் ஆகவேண்டும். இது எதேர்சையாக நடந்திருக்கலாம் ஆனால் நம்பிக்கையின்  அடிப்படையில் தான் வாழ்க்கை  சுழல்கிறது.

நாய்களுக்கு முன்னுறவு மிக அதிகம், குட்டிகளுக்கு பாதிப்பு என்று அதற்கு உள்ளுணர்வு சொல்லும் பல நேரத்தில் மாடியில் என்னை தேடி வந்து குலைக்கும் நான் அலுவலகம் மற்றும் பிற அவசரத்தில் கண்டுகொள்ளாமல் இருந்துருகிறேன், பிறகு பார்த்தால் எதாவது ஒரு அதன் குட்டி பைக்கிலோ அல்லது பக்கத்து தெரு நாய் வந்து கடித்திருக்கும். 

வளர்ந்த நாய்கள் மோப்பம் பிடித்த பின்பு தான் உணவை உண்ணும், ஆனால் குட்டிகள் தீராத பசியில உழல்பவை அவை மனிதர்களை நம்பி உணவை வைத்தவுடன் உன்ன தொடங்கிவிடும்  அல்லது விஷம்  சாப்பிட்ட இறந்த எலிகளை  சாப்பிட்டு இறந்துவிடும். வேண்டும் என்றே  சில மனிதர்களின் நாய்களின் மீதான வெறுப்பில் குட்டிகளுக்கு விஷம் வைத்த  உணவை தருவார்கள். பெட்டை  நாய் வருடத்திற்கு இரண்டு முறை  ஆறு அல்லது ஏழு குட்டிகள் ஈனும், அவற்றுள் ஒன்றோ இரண்டு மட்டும் தான் பிழைக்கும்.

ஒருநாள் வீட்டில் இருந்து சுமார் 50 கிம் தொலைவில் உள்ள கேளம்பாக்கத்தில்  உள்ள விட்டுமனையை  சென்றிருந்தேன்.அங்கு இருந்த டீ  கடையில் நானும் மனைவியும் நின்று டி  அருந்தி கொண்டிருக்கும் பொது அங்கு இருந்த நான்கு  நாய்கள் அருகில் வந்து நிற்கவும் ஒன்று இரண்டு வாலை ஆட்டியது.பின்பு பிஸ்கட் வாங்கி எல்லா நாய்களும் சாப்பிட பின்பு தான் சென்றன.தொலைவில் இருக்கும் நாய்களுக்கு எப்படி எங்களை தெரிந்தது என்ற எண்ணியபோது  நாய்கள்  பழகிய மனிதர்களின்  உடலின் வழியாக  தன்னுடைய வாசனை கடத்துகின்றன. அந்த வாசத்தை மனிதர்களால் உணரமுடியாது. அது நாய்களின் மொழி. அதன் மோப்ப சக்தி மிக அதிகமானது.மனித உடலில் புற்று நோய் இருந்தால் அவை வாசம் பிடிக்கும் அப்படி தன்னுடைய சகா மனிதனின் நோயை கண்டுபிடித்து மருத்தவமனைக்கு அழைத்த சென்ற வீடியோ யூடியூபில் பார்க்கலாம்.



    Maxamma  kutigal 

   வட அமெரிக்காவில் நாய்களின் துணையுடன் மட்டும் வாழும் மக்கள் இருக்கின்றனர்,அது எப்படி சாத்தியம் என்ற பல வருடங்களாக எண்ணம் தோன்றி கொண்டே இருக்கும்? அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் தெருக்களில் தனித்து வாழும் மக்களும் நாய்களின் துணையுடன் வாழ்கின்றனர்.உலகில் மனிதர்களுக்கு மனிதர்கள் தான் துணையாக இருக்க  முடியும் என்ற எண்ணம் எவ்வளவு தாழ்வானது, எல்லா இந்து கடவுளுக்கும் துணியாக மிருகங்கள் இருக்கிறது முருகனுக்கு மயிலாகவும் பிள்ளையாருக்கு ஏலியாகவும் அம்மனுக்கு சிவனாகவும்,அய்யப்பனுக்கு புலியாகவும்  பைரவரே கடவுளாகவும் நம் முன்னே இருக்கிறது .இதை இந்து மதம் குறியீடாக தான்  உணர்த்தப்படுகிறது உனக்கு துணை கடவுளும் அவனுடைய  படைப்பில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்.

மனிதர்களின் அடிப்படை தேவை உடலுக்கு உணவு எனில் ஆத்மாவின் தேடல் அன்பு மட்டுமே அந்த அன்பை உன் கண்முன்னே தெருக்களிலும் ஊரேங்கும் திரிந்து கொண்டிருக்கும் அன்பின் அடையாளங்களை உணருவோம் அதன் உடலுக்கு ஒரு துண்டு உணவு கொடுத்து  அதன் ஆன்மாவின் பேரன்பை பெறுவோம்.

 






























Sunday, December 13, 2020

Barbs,Wastelands

           Barbs,wastelands
These fields a cemetery as far as eye can see,there they born,there they died.
Eye's that don't cry can't see the world,and the dead open the eyes of the living.
There is no bad bread with a good hunger,he who eats his fill, soon he will fast.
Memories doesn't wish to be erased is etched into the brain as tatoos.
Some goes up others goes down thus the world moves.
The accused ascends to the high throne,the shepherds descend to the deep valley.
A hundred steps forward, but hundred years back
Our dead our shadows our flowers.


Monday, August 31, 2020

ஆற்றாதார் அழுத கண்ணீர்




                                ஆற்றாதார் அழுத கண்ணீர்


              பஞ்சம்  அவனை நகரம்   நோக்கி விரட்டியது,
              நோய் அவனை ஊர் நோக்கி திருப்பியது            

             அரசு மக்களை கைவிடும்போது அவன் நம்புவது 
             தன் புலன்களையும்,  ஊரையும், உறவையும்.

             கனவை துறந்து பசியை சுமந்து
            அவன் கடந்து சென்றன மலைகளும்,
            வனங்களும் ,பேராறுகளும் 

            தேசிய சாலைவழியாக
           சில சமயம் அவன் மேல் வாகனங்களும்    

           தினம் கூட்டும் கணுக்குகள்  அல்ல உயிர்கள் 
           அந்த எண்ணுக்குள் மறைந்திருப்பவை - 
           தாய்கள்,தந்தைகள் பிள்ளைகள், நண்பர்கள்!  
  
           ஒரு  பிணைப்பு, அவை அறுபடும் பொது 
           ஒரு பூ பூமியில்  எங்கோ பூக்கிறது.

          கண்ணுக்குள் அடங்காத  ஒரு நுண்ணுயிர் 
          மனித குலத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது 
         மனிதனுக்கு துணை பேரன்பும்  மனித நேயமும்.


                                                                ஆனந்த் 



                                                            


                                                                                                  



                                    

       
           

                

Thursday, December 12, 2019

என் தேசம்



                                              என் தேசம் 


              நான் கண்ட தேசம் என் முன்னே உடைகிறது
              என் கனவு என் கண் முன்னே கரைகிறது
              என் வலி என்னோடு வாழ்கிறது.

              நான் கண்ட முவ்வண்ணம் காவியாய் மாறிகிறது
              தரும சக்கரத்தின் முள் முறிந்து காலம் உரைந்து விட்டது
              அசோக சக்கிரத்தின் சிங்கங்கள் ஊளையிட தொடங்கிவிட்டன
              மயில் வண்ண தோகையிழந்து பெருங்கரலில் அலறுகின்றன

              என் வருங்கால சந்ததிக்கு எதை விட்டு செல்வேன் நான்?
              உடைந்த  மனங்களையா  ?
              உறைந்த  நெஞ்சங்களையா ?
              ரத்தித்தினால் கழுவிய சாலைகளையா?
              இல்லை இடிந்த வழிபாட்டு தளங்கலையா ?
     
              கோயில் மணியோசையையும் தொழுகை அழைப்பையும்
              ஒற்றை கணத்தில் கேட்டு துயில் எழுந்த நான்
              அப்படியா தூங்கிவிட்டால்  என்ன?

             இந்துவாக இல்லாமல் போனால்
              இந்தியாவில் வாழ கூடாதா  என்ன!!


                                                                                            ஆனந்த்            



                                      My country
                  The nation I have seen is breaking in front of me
                  My dreams are erasing in front of my eyes
                  My pains are living with me


                 The tri-color is fading into saffron 
                 The Ashok chakra needles broken, and time had frozen
                 Lion emblem is  howling instead of roaring              
                 the peacock lost its multi-color plumage and mourns
                  
                 What I will leave for future generations?
                 broken souls?
                 frozen  hearts?
                 The roads washed up with blood?
                 Demolished worshiping places?

                I have waken up by the the sounds of temple bell and morning worship call
                Instead of  that why I should not sleep permanently?

                If I am not an Hindu  Is I can't live in India?
                                                                                                        Anand