அமேரிக்கா நாட்டில் ஒரகன் மாநிலத்தில் போர்ட்லென்ட் நகரத்திலிருந்து தெற்கே 235 மைல் தொலைவில் சுமார் 6000 அடி உயரத்தில் மலைகளுக்கு நடுவில் உள்ள மிக அழகான எரி. எங்கள் பயணம் காலை 6.30 மணிக்கே பயணத்தை தொடங்கினோம் என்னால் அதை நம்பவே முடியவில்லை. எல்லோரும் சரியான நேரத்திருக்கு கிளம்பி தயாராக வந்தனர்,பல நேரங்களில் 1/2 முதல் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட வேண்டியிருக்கும் . அன்று நல்ல மழை நான் தான் காரை ஓட்டினேன்,பல நேரங்களில் சாலை மழை திரையினால் ஒரு 10-20 அடிக்கு மேல் பார்க்க முடியவில்லை.முன்னே செல்லும் வண்டியின் டயர் தடயத்தை வழித்தடமாக ஏதோ திருமண தன்று மணமகனை மணப்பெண் கையை பிடித்து பின் செல்வது போல நான் முன் செல்லும் வண்டியை பின் தொடர்ந்து ஒட்டிக்கொண்டு சென்றேன் வரும் பொழுதும் நல்ல மழை ஆனால் எங்கள் புண்ணியம் கெரெட்டர் எரி அருகே மழை இல்லை . அன்று தான் கடைசி வார விடுமுறை தெற்கு சாலை வழியாக ஏரிக்கு செல்லவதற்க்கு அனுமதி அதற்கு பிறகு பனி காலத்திற்காக மூடப்படும் பின்பு மே அல்லது ஜூன் மாதம் தான் திறக்கபடும்.போன முறை ரோஜா மற்றும் பிள்ளைகளுடன் சென்ற பொழுது அந்த வழி முடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருந்த பொழுது ,அங்கு வந்த அமெரிக்க இளம் ஜோடிகள் வடக்கு சாலை வழியாக ஏரிக்கு செல்ல அவர்களை பின் தொடர்ந்து வருமாறு கூறினர். சில முறை நான் எதிர் சாலைக்கு சென்ற என் காரை அவர் பக்கமாக ஒட்டிக்கொண்டு அவர்களை எரி எப்பொழுது வரும் என்று விசாரித்தது ஒரு சினிமா ரேசிங் சீன் போன்ற அனுபவத்தை தந்தது .சுமார் 1 1/2 மணி நேரம் அவர்களை பின் தொடர்ந்து சென்றோம்.வடக்கு வாசல் சில மைல் முன் அவர்கள் உணவு விடுதிக்கு முன் நிறுத்தினர் பின்பு எங்களுக்கு வழி சொல்லிவிட்டு சென்றனர்.மனிதர்கள் மற்றொருவருக்கு என்றும் உதவுவார்கள் என்ற என் நம்பிக்கை எனக்கு திரும்பவும் உணர்த்தியது.
இந்த எரி உருவாக மிக அற்புதமான நாட்டார் கதையை செவ்யிந்தியர்களிடம் இருந்ததுவந்தது .கிழ் உலக தலைவர் ல்லவோ(Llvo ) ஒரு முறை மேல் உலகம் வந்தார் அங்கு அவர் தலைவர் ஸ்கேல்(skell ) அவர்களின் மகளை கண்டு மோகம் கொண்டு அவளை தன்னுடன் வந்து கிழ் உலகத்தில் வாழ வற்புருத்தினார். ஆனால் அவள் செல்ல விரும்பவில்லை.அதனால் கோபம் கொண்டு மேல் பூமி மிது போர் தொடுத்தார்,பூமிக்கு அடியில் இருந்து மலைகளை விசினார்.ஸ்கேல் தன நாட்டு மக்களை காக்க சாஸ்தா மலைமேல் இருந்து எதிர்த்து போராடினர். நெருப்பால் சிவந்த மலைகளையும் எரிந்தனர் , அதனால் நிலநடுக்கம் மற்றும் நிலசரிவு ஏற்பட்டது. இந்த தீவிர போரினால் மக்கள் காலமாத்(kalamath ) ஏரியில் மறைந்து கொண்டனர். மேல் உலக சேர்ந்த இரண்டு பரிசுத்த மனிதர்கள் ல்லவோ மலையில் விழுந்து தங்களை பலி கொடுத்தனர்.இந்த வீர செயலை கண்டு ஸ்கேல் மன்னர் எழுச்சி கொண்டு ல்லவோ மன்னனை போராடி கிழ் உலகத்திற்கு விரட்டினான்.மறுநாள் காலை கதிரவன் உதிக்கும் போது அங்கு மிக பெரிய பள்ளம் உருவாகி இருந்தது .பல நாட்கள் தொடர் மழையினால் பள்ளம் நிரம்பி எரி உருவானது.அதனால் அந்த எரி கில்வாஸ்(gilvaas ) - புனித நிலமாக செவ்யிந்தியர் வணங்கினர்.
ஆடி காற்றில் அம்மியும் நகரும் என கேள்வி பட்டதை இங்கு தான் முதல் தடவை உணர்தேன் . flag tree என்ற இடத்தில் கடல் காற்று மலைகளுக்கு ஊடாக ஏரியின் மேல் ஒரு புனல் வழியாக வருவதால் வேகம் பெற்று ஆளை தூக்கி விச பார்கிறது.நான் காற்றை எதிர்த்து நடக்க முயன்றால் அது என்னை பின் தள்ளி தூக்க அடிக்க பார்கிறது , இன்னும் சற்று வேகமாக விசினால்,அது என்னை அப்படியே சறுகு காற்றில் சுமந்து சென்றுவிடும் என தோன்றியது.மனிதன் இயற்கை முன் மிக சிறியவன் என ஒவ்வொரு முறையும் இதை போன்ற பயணங்கள் எனக்கு உணர்த்துகிறது.
சான்ஃபிரான்சிஸ்கோ கிறிஸ்மஸ் விடுமுறை பயணம் - 24 டிசம்பர் - 27 டிசம்பர் 2015
டிசம்பர் 24 2015
கிறிஸ்மஸ் நான்கு நாட்கள் விடுமுறை முன்னிட்டு சான் ஃபிரான்சிஸ்கோ பயன்பட அறை நண்பர்களுடன் நினைத்தேன், என் பயணத்திர்க்கான முதல் காரணம் நான்கு நாட்கள் தனியாக என்ன செய்வது என்று கேள்வி எங்காவது செல்ல மனம் தேடுகிறது. சம்பத்தின் அறை நண்பர் இந்தியாவிற்கு சென்றுள்ளதால் அங்கு செல்லாம் என்ற திட்டம் போடப்பட்டது.அது மட்டுமல்லாமல் என் அறை நண்பர்கள் அங்கு சென்றதில்லை. சில பேருக்கு அலுவலகம் இருந்ததால் மதியமாக புறப்படலாம் என் முடிவு செய்யப்பட்டது.கிறிஸ்துமஸ் முந்தைய இரவு (christmas eve) மற்றும் கிறிஸ்துமஸ் அன்று கண்டிப்பாக பனிப்பொழிவு இருக்கும் என்று முந்தய வாரமே டயர் செயின் வாங்கி வைத்தோம் . மதியம் 1வீட்டில் உணவு உண்டுவிட்டு 1.30 மணிக்கு புறப்பட்டோம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்க மக்கள் தம் குடும்பத்தினரை சந்திக்கும் நாள்,தம் தாய் தந்தை,அண்ணன் தங்கைகள் மற்றும் உற்றார் உறவினர் சந்திக்க புறப்படும் நாள் வழியேங்கும் கார்கள் , அமெரிக்க கார் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்தால் அமெரிக்க கண்டிப்பாக அமெரிக்காவாக இருந்திருக்க முடியாது, நாங்கள் 4 மணி அளவில் கிராண்ட்ஸ் பாஸ் (Grants pass ) அருகே வந்தப்பொழுது பனிப்பொழிவு முன்னிட்டு கார்கள் நிறுத்தப்பட்டன. கிராண்ட்ஸ் பாஸ் சுமார் 1500 அடியில் I -5 நெடுஞ்சாலை செல்கிறது. சுமார் 3 மணி நேரம் நாங்கள் நிறுத்தப்பட்டோம். அங்கு தாயும் மகளும் பணியை கண்டு அங்கு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு இருக்கும் மகளுடன் உற்சாகமாக பேசவும் வாழ்த்து சொல்லவும் ஆரம்பித்தனர், அவர்களின் warm wishes அந்த குளிரையும் சற்று குறைத்து. அங்கு பனியை சுத்தம்/அகற்றும் செய்யும் வண்டி !! பனி எப்படி அழுக்கு என்று எனக்கு ஏன் தோன்றியது? என்று எனக்கு புரியவில்லை. அங்கு இருக்கும் மக்களுடன் உரையாடியதும் எப்பொழுது சாலை பயணக்க விடுவர் என்ற கேள்வி அடுத்தவரை கேட்பதும் யாருக்கும் தெரியாத பதிலை கேட்பதும் ஒரு சுவாரஸ்யமே. பின்பு கார் புறப்பட்டாலும் முப்பத்தி இந்து மைல் வேகம் தான் செல்லமுடிந்தது. பின்பு அங்கிருந்து இரவு 8 மணி அளவில் புறப்பட்டு மேட்போர்ட் (medford ) சென்றோம். மேட்போர்ட் ஒரேகோன் போர்ட்லன்ட் எல்லை நகரம் , அங்கு உள்ள சிசிகியௌ பாஸ் (sisikiyou pass ) அங்கும் பனி பொழிவு இருந்தததால் கார் சக்கரத்தில் சங்கிலி அனிவித்து செல்லவேண்டும் என்ற விதி . எங்களை காவல்காரர் என்னை இது 2 சக்கர இழுவை அல்லது 4 சக்கர இழுவை வண்டியா என்று கேட்ட பொழுது நான் இது எதோ ஒரு தைரியத்தில் 4 சக்கர இழுவை வண்டி என்று கூரினேன். கார் சாலையில் பிடிமானம் நன்றாக இருந்ததால் அப்படி சொன்னேன் என்று பிறகு தோன்றியது. பின்பு கார் மாடலை கூகிளில் தேடி பார்த்த பொழுது அது 4 சக்கர இழுவை ( 4 Wheel drive ) என்று தெரிந்தது. வாழ்க்கையும் பயணமும் ஒரு குருட்டு நம்பிக்கையில் தான் செல்கிறத். பின்பு இரவு உணவு சுமார் 11 மணிக்கு உண்றுவிட்டு அநூப் நண்பரிடம் கார் ஓட்ட சொலிவிட்டு நான் பின் இருக்கையில் தூங்கிவிட்டேன். சுமார் 1 மணி யாமம் நேரத்தில் நான் கார் ஓட்ட ஆரம்பித்து சுமார் 3 மணி வைகறையில் நண்பர் சன்னிவேல் நகரத்தில் உள்ள நண்பர் சம்பத் அறைக்கு சென்று சேர்ந்தோம்.வாழ்கையில் முதல் தடவை பனிபொழியும் சாலையில் கார் ஒட்டியது மறக்க முடியாத புதிய அனுபவம். சுமார் 700 மைல் இரவில் ஒட்டியது நல்ல அனுபவம்.
டிசம்பர் 25 2015
நேரம் கழித்து வந்ததால் சுமார் 10 மணி அளவில் தான் எஸ்ஃபோவிற்கு புறப்பட்டோம், கிறிஸ்துமஸ் அன்று கடற்கரை நகரில் மிகவும் கூட்டம், இதற்கு முன் பல முறை கோல்டன் கேட் பாலத்திற்கு சென்றுள்ளேன் ஆனால் அவ்வளவு கூட்டத்தை பார்த்ததில்லை. அனூப்,அனில் , அன்கித் அவர்களை இறக்கிவிட்டு நானும் சம்பத்தும் காபி அருந்தலாம் என சென்றுவிட்டோம்.இந்த பாலத்தை நான் பல முறை பார்த்துள்ளேன், முதல் முறை மும்பை தீபாவும் அவள் கணவரும் 2002 என்னை அழைத்து சென்றனர் அப்பொழுது அந்த பாலமும் சுற்றுவட்டாரமும் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. அமெரிக்காவில் பல இடங்கள் மாறினாலும் அந்த இடம் அமெரிக்காவை "டைம் மஷின்" கொண்டு பின்னோக்கி சென்றது போன்று இருந்தது. இந்த முறைதான் தங்க பாலத்தை காணாமல் வந்தது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 78 வருடங்கள் ஆகின்றன இந்த காலத்து போக்குவரத்து பயன் பட கூடிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவிற்கு தங்கம் தேடி வந்ததால் இந்த "இன்டர்நேஷனல் ஆரஞ்சு"( கரும் ஆரஞ்சு) நிற பாலத்திற்கு இந்த பெயர் வந்தது. நான் திரும்பவும் வந்து அவர்களை அழைத்து செல்ல வர சுமார் 1 மணி நேரம் தேவை பட்டது.பிற நாட்களில் அந்த தூரத்தை 10 நிமிடத்தில் கடக்கலாம். அங்கிருந்து நாங்கள் பக்கத்தில் உள்ள குன்றின் மிது இருந்து பாலத்தை கண்டு ரசித்தோம், கூட வந்த இள வயது நண்பர்கள் எந்த அழகையும் கண்களால் ரசிப்பதும் அந்த இடத்தின் சுழலை அவதானிக்காமல் அந்த இடத்தில காமெராவில் படங்கள் எடுக்கும் வேலையே மட்டும் செய்யிதார்கள், பின்பு உலகம் தனித்து போனது போல செல்பி எடுத்து கொண்டார்கள். மனிதன் தனித்து வாழ்தலின் அடையலாம் செல்பி இன்னும் சில வருடங்களில் தனித்தே எல்லாம் செய்ய பழுகுவார்கள். பின்பு மதிய உணவை சுமார் 5 மணிக்கு சல்சிலடோவில் உள்ள ஒரு பஞ்சாபி உணவு விடுதியில்(Sartaj indian cafe ) நல்ல உணவு உண்டோம். பின்பு அங்கிருந்து லாம்பர்ட் தெருவிற்க்கு (Lambard street ) சென்றோம், அந்த தெரு மிக செங்குந்தான தெரு, அதுவும் ஒவ்வொரு தெரு சந்திக்கும் இடங்களில் ஸ்டாப் சையினுக்காக நின்று செல்வது ஒரு சாகச அனுபவம். இரவு தூங்காததாலும் இரவு பயணித்தால் உடல் மிக சோர்வு கொண்டிருந்தது, எனக்கு வெறுப்பாகவும் இருந்தது எதற்காக ஒரு முட்டாளை போல இவர்களுக்கு வண்டி ஒட்டவேண்டும், எல்லோரும் அவர்கள் ஊரை சுற்றி பார்ப்பதில் தான் யோசித்தனர் யாரும் என் நிலைமை யோசிக்கவில்லை, நான் படித்த இலக்கியங்கள் இங்கு என்னை ஒரு சாந்த படுத்த முடியவில்லை. சொர்வினாலும் வெறுப்பினாலும் வ்ரோங் வே வில் ரயில் பேருந்து செல்லும் பாதையில் ஒட்டிசென்றேன்.பின்பு இரவு மனைவியிடம் பேசிய பொழுது நீ ஓடுவதை குறைத்துகொண்டு மற்றவரை ஓட்ட சொள்ளும் படி கூரியது அடுத்த நாள் பயன்பட்டது.

டிசம்பர் 26 2015
அடுத்த நாள் காலை 7.30 மணிக்கல்லாம் புறப்பட்டு முதலில் ட்வின் பிக்ஸ் சென்றோம் அது எஸ்ஃபோ வின் மிக உயரமான இடம். அங்கிருந்து மொத்த நகரத்தையும் காண முடியும். இரு குன்றுகள் உள்ள இடம்.ஒரு பக்கம் முழுக்க கட்டிட காடுகள் மறுபக்கம் கடலும் பூங்காக்களும் உள்ள நகரம், அமெரிக்காவில் எந்த பெரிய நகரங்களும் ஒரு கெரண்ட் பார்க் இருக்கும், எப்படி பெங்களூரில் லால் பார்க் கப்பன் பார்க் போல. சென்னையில் செம்மொழி பூங்கா இன்னும் பெரியதாக போயேஸ் கார்டன் , கோபாலபுரம் வரை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பின்பு அங்கிருந்து பேலஸ் ஒஃப் பைன் ஆர்ட்ஸ் என்ற ஒரு நினைவு இடத்திற்கு சென்றோம். இந்த இடம் நகரம் புகம்பதால் ஏற்பட்டு பிறகு நகரை புதிபிக்கவும் மற்றும் " great depression " அமெரிக்க வெளிவர பனாமா -பசிபிக் பொருட்காட்சி நடத்தப்பட்டது , அதற்காக கட்டப்பட்ட ரோமானிய மற்றும் கிரேக்க கட்டிட கலைவடிவம் கொண்டு கட்டப்பட்டது. மேர்யாந்து மெய்பெர்க் (Bernard maybeck ) அவர்களால் வடிவமைப்பு செய்யப்பட்டது. இத்தகைய கட்டங்களை நான் பாரிஸ் நகரில் பார்த்துள்ளேன்.
பின்பு அங்கிருந்து சுமார் 150 மைல் தொலைவில் உள்ள 17 மைல் என்பது தனியார் குடியிருப்பு. அங்கு குழாங்கல் கடற்கரை (Pebble beach ), ஆடங்கா கடல், தனிமை சைப்ரஸ் மரம் ஆகியவை முக்கியமான ரசிக்க கூடிய இடங்கள் ஆகும்.
வாழ்க்கையில் முதல் முறையாக கதிரவன் அமெரிக்காவில் பசிபிக் கடலில் துயில் கொள்ள செல்லுவதை பார்த்ததை மறக்க முடியாது , அன்று சூரியன் 4.58 மறையும் நேரம், அந்த வினாடி கதிரவன் கடலுக்குள் சென்ற நேரம் மிக வேகமாக சென்றது . ஒரு பந்து விழுவது போல அது கடலில் விழுந்து மறைத்தது. வாழ்க்கையில் ஒரு நாள் சூரியன் மறைவதையும் மறுநாள் விடிவதையும் பார்க்க வேண்டும் , அதற்காகவே தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.
பின்பு வீடு வந்து அறையில் ப்ரேமம் படம் பார்த்தது அந்த நாளை திருப்தியுடன் முடித்தது, காதல் எந்த வயதானாலும் காதல் படம் பார்ப்பது மிக அற்புதமான அனுபவம். ஒரு ஆணின் வெற்றி ஒரு பெண்ணின் மனதை அடைவதில் உள்ளது.
டிசம்பர் 27 2015
இன்று ஊர் திரும்ப வேண்டிய நாள், இன்றும் காலையிலே கிளம்பினோம் , வழியில் அஷ்லாந்து(Ashland ) செல்வது தான் திட்டம், பனிமூடிய நகரை பார்க்க வேண்டும் என்பது தான் முதல் நாள் இரவு பனிப்பொழிவில் கிராண்ட்ஸ் பாஸ் நகரில் சிக்கிய பொழுது முடிவெடுத்தது. காரில் பயணிக்கும் பொழுது ஒரு திருப்பதில் திடிர் என ஓரு மலை வழியில் எட்டி பார்த்தது. அது பனி போர்த்திய சாஸ்தா மலை.
மலை நம்மை ஆச்சிரிய
பட வைக்கிறது,அந்த நொடியில்
அகங்காரத்தை சர்வ சாதாரணமாக
ஒரு உளியை போல
தகர்த்து விடுகிறது.
பின்பு அஷ்லாந்து நகரை அடைந்தோம், சுமார் 3 அடிக்கு மேல் பனிபொழிவு ஏற்பட்டு யாரோ ஊரையே வெளுத்தது போல் இருந்தது. பனி போர்த்திய சாலை பயணித்து மக்கள் பனியில் விளையாடி கொண்டிருந்த இடத்திற்கு சென்றோம்.அங்கு சுமார் 80 வயது உடைய ஒரு குழந்தை ஒரு பிளாஸ்டிக் ஷீட்டுடன் பனி சறுக்கி விளையாடி கொண்டிருந்தது, பக்கத்தில் இன்னொரு 40 வயது குழந்தை பனி சறுக்கும் பலகையுடன் சறுக்கி....
நான் எப்பொழுதும் வீடு வரும் சுமார் 30-40 மைல் மூன் சற்று மெதுவாக கார் ஓட்டுவேன், பல முறை எல்லாரும் கேட்கும் பொழுது பல காரணங்களை சொல்வேன் . அது என் என எனக்கே தெரியாது இந்த முறை தான் வீடுக்கு சென்று சேரும் நேரத்தை நீட்டிக்க என் மனம் எனக்கு உணராமல் நான் செய்யும் காரணம் என்று உணர்ந்தேன். இந்த பயணம் தொடர்ந்து கொண்டிருக்காத என்ற ஆசை என்னை வீடு நெருங்கும் பொழுது எற்படும் எண்ணத்தின் வெளிப்பாடு..
ஏப்ரல் - 3 2016 கடற்கரை நகர பயணம்
வசந்த காலம் தொடங்கி முதல் நாள் வார விடுமுறை கார்மேகங்கள் அற்று சூரியனை பார்க்க அந்த வாரம் தான் முடிந்தது . அது மற்றுமின்றி தெய்வான !(காரின் பெயர்) அழைத்துகொண்டு அருகில் உள்ள கடைகள் தவிர எங்கும் செல்லாததால் ஒரு பயணம் தேவை பட்டது.இகோலா மாநில பூங்கா(Ecola national park ) வில் கடலை ஒட்டி செல்லும் காட்டு வழியில் ஒரு ஹைக்கிங் செல்லலாம் என புறப்பட்டேன்.
காலை 7 மணிக்கு பயணத்தை தொடங்கி U S 26 பிடித்து மேற்கே நோக்கி பயணித்தேன் . US 26 சீசைட்(Seaside ) ஊரின் அருகே US 101 போய் இணையும் , US 101 அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் ஒட்டி லாஸ்ஏஞ்சலஸ் தொடங்கி வாஷிங்டன் மாநில போர்ட் ஏஞ்சலஸ் வரை சுமார் 1550 மைல் நிண்ட சாலை, அது பல கடற்கரை நகரங்களை வழியாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் வழி . காலை உணவுக்காக மற்றும் காருக்கு கேஸ் போடவேண்டியுள்ளத்தால் வழியில் உள்ள பெகர்ஸ்(Backers general store ) பல பொருள் அங்காடியில் நிறுத்தினேன். நான் காலை உணவுக்கு மாமிசம் உண்பதை தவிர்ப்பேன், அதனால் சற்றே சில வினாடிகள் வாங்கலாமா என்று யோசித்த பொழுது அங்கு வேலை செய்யும் அந்த அம்மையார் உடனே நான் உனக்கு மாமிசம் இல்லாமல் புதிதாக செய்துதருகிறேன் நான் எதோ சுத்த சைவ உணவு உண்பவன் என எண்ணி கொண்டு எனக்கு முட்டை மஃபின்ஸ்(Muffins) வெண்ணையுடன் செய்துகொடுத்தார்.அமெரிக்காவின் உள்ள பல நல்ல கலாச்சாரங்களில் இதுவும் ஒன்று. வாடிக்கையாளருக்காக அவர்கள் கரிசனத்துடன் செய்யும் சேவை.அதுவும் அந்த கடை காட்டிற்கு நடுவே சுமார் 30 மைல் வட்டாரத்தில் வேறு உணவு விடுதி கிடையாது.
அங்கிருந்து நான் இகோலா அரசு பூங்கா(Ecola state park ) சேர்ந்த பொழுது காலை 9 மணி இருக்கும் நான் காரை நிறுத்திய பொழுது இரண்டு அல்லது முன்று வண்டிகள் மட்டும் இருந்தது.கடலை ஒட்டி ஒரு பாதை வடக்கே இன்டியன் கடற்கரையை நோக்கி செல்வதாக இருந்தது. அங்கு அறிவிப்பில் இந்த பாதையில் பெரிய காட்டு பூனை (Cougar ) இருக்கலாம் அதனால் தனியாக செல்வதை தவிர்க்கவும் என அறிவிப்பு இருந்தது.நாம யார் பேச்சை கேட்டிருக்கோம் அதனால துணித்தவன் போல எண்ணிக்கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு திரும்பிய பொழுது அங்கே வெள்ளையர் ஜோடி அலை சறுக்கு பலகையுடன் தொடர்ந்து வந்தனர். நான் சற்றே நிம்மதி அடைந்தேன். அவர்களை போக விட்டு நான் பின்தங்கினேன். சுமார் 2 மைல் கடலை ஒட்டிய அந்த பயணத்தில் கண்ட காட்சி மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
குன்றுகளை மோதும் கடல் அலைகள் பல ஆயிரம் ஆண்டுகள் அந்த விளையாட்டை கடலும் குன்றும் சலிக்காமல் விளையாடி கொண்டிருகின்றன. அந்த மோதும் சத்தத்தின் இசை ஒரு இனிய அனுபவம். பனிக்காலத்தின் காரணத்தால் அந்த பாதை பல இடங்கள் மறைந்து விட்டது, நான் தொலைந்து போகும் போதெல்லாம் அந்த அலையின் ஓசையை கொண்டு என் பாதைக்கு திரும்பி கடலை நோக்கி என் பயணத்தை தொடர்ந்தேன்.


கடற்கரையை அடைய சுமார் முக்கால் மணி நேரம் தேவை பட்டது. அங்கு நான்கு பேர் கடல் அலையில் பலகையுடன் சறுக்கி(surfing ) விளையாடி கொண்டிருந்தனர்.இப்பொழுது தான் வெயில் வர ஆரம்பித்துள்ளது நீர் குளிர்ந்து காலை வெய்த்தாலே உடல் நடுங்கும் அந்த நீரில் விளையாடி கொண்டிருந்தனர். ஒருவருடன் பேசிய பொழுது இங்கு கடலின் உள்வாங்கிய அமைப்பால் அலைகள் நன்கு வரும் அதனால் தான் இவ்வளவு தூரம் பலகையை சுமந்து வந்து நீந்துகிறோம்,வெயில் காலம் வந்தால் அருகில் உள்ள இன்னொரு பாதை திறந்துவிடுவர் அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும் என இப்பொழுதே வந்ததாக சொன்னார். நான் அவருடைய பலகையை வாங்கி தூக்கிய பொழுது சுமார் ஐந்து கிலோ இருந்தது,அதை அந்த 2 மைல் சுமந்து வந்து நீரில் விளையாட ஒரு ஆர்வமும் அர்பணிப்பும் தேவை.

நான் பின்பு கடலை ஒட்டி இருந்த ஒரு பாறையில் ஏறி அவர்கள் விளையாடுவதை பார்த்துகொண்டுஇருந்தேன் , அதை தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வாழ்க்கையில் யோசித்து பார்க்கும் பொழுது நீச்சல் கற்று கொள்ளாதது ஒரு வருத்தம். என் பக்கத்தில் சற்றே உயரமான பாறையில் ஒரு ஒற்றை நீர்ப்பறவை (Seagull ) அமர்ந்திருந்தது. மனிதர்களால் தனித்து வாழ்வது சிரமம். ஆனால் எப்படி இந்த பறவைகள் தனித்து வாழ்கின்றன என்ற எண்ணம் மனதில் தோன்றியது.
அவைகளுக்கு மனம் அல்லது எண்ணங்கள் உண்டா? அப்படி இருந்தால் அவை என்ன யோசிக்கும் என்ற எண்ணம் உருவானது.இந்த எண்ணத்திற்கு விடை கிடைக்காது என்று திரும்பலாம் என புறப்பட்டேன்.திரும்பிவந்த பொழுது ஒரு 11 மணியிருக்கும். இதற்கு மேல் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றுலா உணவு மேசை உட்கார்ந்து கையில் கொண்டு சென்ற மார்டின் லூதர் கிங் சுயசரிதை புத்தகம் படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு அரை நிமிடத்திற்கு பிறகு பசிக்க ஆரம்பித்தால் சீசைடு நகரம் புறப்பட்டேன் , அங்கு தெருவில் காரை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன் சு ரா வின் புளியமரத்தின் கதையில் சொல்லியிருப்பது போல "எல்லா தெருக்களும் கடற்கரையில் முடியும்" என அதுபோல நான் குருட்டாம் போக்கில் நடந்த பொழுதுபோக்கு விளையாட்டு தளங்கள் மற்றும் கடைகள் நிறைந்த தெருக்கள் வழியாக கடற்கரையில் முடிந்தது. அங்கு லூவிஸ் அண்ட் கிளார்க் சிலை இருந்தது . அவர்கள் தான் ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சனின் வேண்டுகோளை ஏற்று 1803 ஆம் ஆண்டு கிழக்கில் மிஸ்ஸிப்பி ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ள செயின்ட் லூவிஸ் நகரத்தில் இருந்து மேற்கு நோக்கி ஆற்றில் பசிபிக் கடலை நோக்கி பயணித்தனர், அந்த பயணம் 3700 மைல் சுமார் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது . அவர்கள் தங்கள் பயணத்தை முடித்த இடம் தான் இந்த கடற்கரை. இவர்கள் பயணம் மேற்கில் இருந்து விவசாயம் மற்றும் இதர பொருட்களை பசிபிக் கடல் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி செய்யம் ஆற்றின் பாதையை கண்டுபிடிக்கும் பயணம். அமெரிக்க வரலாற்றின் முக்கியமான தருணம் இந்த பயணம்.

அங்கு சற்று நேரம் அந்த நீண்ட கடற்கரையில் மண்ணில் நடக்க ஆரம்பித்தேன். மதியம் ஆனதால் நல்ல கூட்டம் கடற்கரையில். நான் அமெரிக்காவில் பார்த்த நீண்டகடற்கரையில் இதுவும் ஒன்று,
பின்பு ஒரு பழைய மர சத்திரம் (Bridge tender wooden tavern ) சென்று என்னுடைய பிரியமான நீலநிலவு பீயர் (blue moon ) மற்றும் சிக்கன் விங்ஸ் பாரில் சொல்லிவிட்டு காத்திருந்தேன். குளிர்பெட்டியில் இருந்து முன்னேமே தயாரித்த ஓவனில் சுட வைத்து கொடுத்தார் பணியாளர் . நான் அமெரிக்காவில் சாப்பிட்ட கேவலமான வேகாத கோழி இறைச்சி அதுதான்.அதையும் சாப்பிட்டு காலி செய்தேன்!!!
சீசைடு அழகான கடற்கரை நகரம், வெயில் காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் அப்பொழுது அங்கு செல்வது சிரமாக இருக்கும் என நினைக்கிறேன்.
அப்பொழுது பிற்பகல் நேரம் சுமார் 3 மணி இருக்கும் காருக்கு வந்து அடுத்து எங்கு செல்லலாம் என கூகுள் செய்த பொழுது அஸ்டோரியா நகரில் ஒரு 4 மைல் மேம்பாலம் இருக்கிறது என்று தெரிந்தது. அப்படியே "விடுறா வண்டிய" என திரும்பவும் US 101 வடக்கு நோக்கி செலுத்தினேன் சுமார் 20 மைல் தொலைவில் உள்ள அஸ்டோரியா நகரத்தை அடைந்தேன் இது கொலம்பியா ஆறு பசிபிக் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்த நகரம்.
அந்த நான்கு மைல் பாலம் அஸ்டோரியவை வாஷிண்டன் மாநிலத்தின் மேகளர்(Megler ) என்டற ஊருடன் இணைக்கிறது. வடக்கில் வாஷிண்டன் மற்றும் கிழக்கில் ஒரேகனை பிரிக்கும் எல்லை கொடு இந்த கொலம்பியா ஆறு.அந்த நீண்ட அற்றை கடக்கும் பாலம் இது.
ஆத்துக்கு அந்த பக்கம் நான் குடும்பனாக வாழ்ந்த சியாட்டல்(seattle ) நகர மாநிலம் இந்த பக்கம் "தனி ஒருவன்" ஆக வாழும் ஒரேகோன்.
அந்த பாலம் மிக பழையது என்று நினைக்கிறேன் , எங்கே டோல் கட்ட சொல்வார்களோ என சற்ற வருத்ததுடன் பயணித்தேன் ஏன் எனில் நான் அந்த பக்கம் சென்று உடனே திரும்புவது தான் என் எண்ணம்.
முதலிட்ட பணத்தை விட அதிகம் சம்பாதித்து விட்டார்கள் என நினைகிறேன். கட்டண வசூலிக்கும் அறைகளை பிறித்து வெறும் அந்த உயரமான தூண் மட்டும் இருந்தது
US 101 யில் உள்ள இரண்டு பெரிய பாலங்கள் கோல்டன் கேட் மற்றும் அஸ்டோரியா -மேகளர் பாலத்தையும் பார்த்ததில் ஒரு திருப்தி .
பாலத்தை கடந்தவுடன் மேகளரில் இருந்து வடகிழக்கே செல்லும் லூவிஸ் கிளார்க் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஒய்வு பகுதியில் காரை நிறுத்திவிட்டு சோர்வாக இருந்ததால் கார் சிட்டை சாய்த்து ஜன்னலை இறக்கி விட்டு தூங்கிவிட்டேன். ஆற்றின் கரையில் அமைந்த அந்த ஒய்வு பகுதி ரம்மியமாக இருந்தது.
அரைமணி நேரம் கழித்து எழுந்த பொழுது மணி 4.30 இருக்கும். மாலை கதிரவன் கடலில் மறைவதை பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக எண்ணம் இருந்தது . அன்று சூரியன் மறையும் நேரம் 7.42 மணி.
அதனால் ஒரு இரண்டு மணி நேரம் பொழுது போக்கலாம் என திரும்பவும் பாலத்தை கடந்து அஸ்டோரியா நகரத்திற்குள் வந்தேன். எனக்கு தெரிந்த தனியாக அலைச்சல் இன்றி பொழுதை கழிக்க சிறந்த இடம் 20$ பெரிய நோட்டிற்கு ஒரு கூர்ஸ்லைட்(Coorslight ) பீர் வாங்கி மிச்ச காசிற்கு 1$ நோட்டாக சில்லறை கிடைக்கும் இடத்தில் பொழுதை கரைத்தேன்.
இரண்டு மடக்கு குடித்துவிட்டு குடிக்க விருப்பம் இல்லாமல் பீர்ரை ஓரம் கட்டிவிட்டு குடிநீர் வாங்கி அதைமட்டும் குடித்து கொண்டிருந்தேன். பின்பு ஒற்றை டாலர் காகிதங்களை செலவழித்துவிட்டு புறப்பட்டேன்.
பின்பு அங்கிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு சீசைடு கடற்கரைக்கு செல்லலாம் என புறப்பட்டேன். ஆனால் வழியில் சன்செட் பீச் என்ற அறிவிப்பை பார்த்து தெய்வானையை திருப்பி அந்த ரோடில் செலுத்தினேன். மிக அழகான நீண்ட கடற்கரை , காரை கடலுக்கு பக்கத்தில் செலுத்த கூடிய கடினமான மண் கொண்ட கடற்கரை அதனால் பல பேர் கார்களை கடற்கரைக்கு பக்கத்தில் சென்று கடலை ரசிக்க நிறுத்தியிருந்தனர் . தெய்வான ஃபொர் வீல் டிரைவ் இல்லாததால் பார்கிங் இடத்திலே விட்டுவிட்டு நடந்தே சென்றேன்.
உலகின் ஒவ்வொரு நாளும் சூரியன் எழுவதும் மறைவதும் ஒரு அதிசயம்.
அன்று சற்றே மேகமுட்டதுடன் இருந்ததால் கடலுக்கு மேல ஒரு சிறிய மேக கூட்டத்தில் மறைய தொடங்கியது. அப்பொழுது மறையும் கதிரவன் அடர் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு பந்தை போல அதிர்ந்து கொண்டே மேகத்திற்கு பின் மறைய தொடங்கியது அப்பொழுது அந்த வட்டத்தின் மிது அடர் ஆரஞ்சு நிற பட்டைகள் தோன்றின . முழுவதுமாக மேகத்திற்கு பின்னால் மறைந்தபொழுது ஆரஞ்சு நிற கதிர்கள் சல்லடை கொண்டு வடிகட்டியது போல கடலில் இறங்கி கொண்டிருந்தது.
அடுத்த தடவை மேகங்கள் அற்ற வானில் கடலில் இறங்குவதை நிதானமாக பார்க்கவேண்டும் என எண்ணத்துடன் மிக குளிராக இருந்ததால்(ஜாக்கெட் எடுத்து செல்லவில்லை)காருக்கு திரும்பிவிட்டேன்.
ஒரு நாள் மறைந்த சூரியன் அடுத்த நாள் வரவில்லை என்றால், அது தான் உலகின் கடைசி நாளாக இருக்கும்! அந்த நாள் இன்னும் பல கோடி அண்டுகள் உள்ளது என முழு நம்பிக்கையுடன் ஹில்ஸ்போரோ நோக்கி இருளில் ஒரு இனிய பயணம் முடிந்தது .
ஏப்ரல் 16 2016 வெப்ப நீருற்று ஒருங்கியினைந்த பழங்குடி மக்கள் நில ஒதுக்கிடு (Warm springs confederate tribal reservation )
அன்கிட் இந்தியாவுக்கு விடுமுறை பயணம் செல்வதால் அவனை போர்ட்லன்ட் விமான நிலையத்தில் விடியகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. அவனை அங்கு விட்டுவிட்டு எங்கு செல்லாம் என யோசித்த பொழுது , எப்பொழுதோ இந்திய சூதாட்ட தளம்(Indian casino ) செல்லலாம் என எண்ணம் பல நாள் இருந்தது. ஒரேகோனில் எங்கு இருக்கிறது என்று தேடிய பொழுது வார்ம்ஸ்ப்ரிங்க்ஸ் நகரத்தில் உள்ளது என்று கூகுள் வரைபடம் காட்டியது. அப்பொழுது தான் தெரிந்தது அந்த ஊர் ஒரு பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம்.
பிரபல மவுண்ட் ஹூட் மலை அடிவாரத்தில் இருந்து இருந்து சுமார் 15 மைல் தொலைவில் இந்த பழங்குடி மக்களின் நில எல்லை ஆரம்பிக்கிறது.
அதன் கிழக்கு எல்லையில் மெட்ராஸ் என்கிற பெயரை கொண்ட ஒரு சிறிய நகரம் உள்ளது,
மேற்கே காஸ்கேட் மலைத்தொடர்(cascade mountains ) யில் இருந்து கிழக்கே தேஸ்க்ஷுட்ஸ் நதி(Deschutes river ) வரை சுமார் 2600 சதுர km நிலம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த இடம் அவர்களால் மேலாண்மை செய்ய படுகிறது. இந்த நிலத்தில் முன்று பழங்குடி குழுக்கள் - வாச்கோஸ்(Wascos ) , warm springs குழு , பயுட்ஸ் (Paitues ) மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் இங்கு குறைந்தது 10000 வருடங்களாக ஒரேகோன் என்று 300 ஆண்டுகளுக்கு முன் பெயர் வைக்கப்பட்ட நிலத்தில் 40000 சதுர km வாழ்ந்துவந்தனர். அவர்களின் நிலத்தை எடுத்து அவர்களுடன் 1855 இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.இதன் படி அவர்கள் இந்த இடத்தில மீன் பிடிக்கும் மற்றும் கிழங்கு வேர்கள், தேன் எடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டது. அவர்கள் விட்டு கொடுத்த நிலங்கள் ஈடாக மருத்தவம்,கல்வி, பாதுகாப்பு வழங்குவதாக ஒப்பந்தம் கை எழுத்தானது.
அங்கு உள்ள அருங்காட்சியகம் சென்று பார்த்தபொழுது யாரும் இல்லை என்னை தவிர அங்கு யாரும் வருவதாகவும் தெரியவில்லை.
அங்கு அவர்களுடைய நிலம், அதில் அவர்கள் சாலமன் மீன் பிடித்த தொழில் என அவர்களுடைய எளிமையான வாழ்க்கை காட்சி பொருளாக வைக்க பட்டுயிருந்தது.
(கைவினை பொருட்கள் )
warm springs நகரத்திற்கு சென்ற பொழுது அங்கு விடுகள் எல்லாம் பழையதாகவும் , ஏழ்மையை படம் பிடித்து காட்டியது. ஒரு பலபொருள் அங்காடி வாசலில் ஒரு மதிய வயது பழங்குடி ஆணிடம் பேசிய பொழுது அவர்கள் எதோ ஒரு வயதான மூதாட்டியின் மரணத்திற்கு செல்வதாக கூரினார். அங்கு வந்த யாரோ ஒருவரிடம் செலவுக்கு ஒன்றோ அல்லது இரண்டு டாலர் பணம் பெற்றார் , நான் அவருடன் பேசிவிட்டு வரும் பொழுது நான் ஒரு டாலர் கொடுத்தேன். கறுப்பினதவற்க்கு பேச போராட ஒரு அமைப்பு உள்ளது ஆனால் இவர்கள் நிலையை எடுத்து செல்ல எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை.
அவர்கள் நிலத்தை இழந்து அங்கே ஒரு தனித்து விடப்பட்ட மக்களாகவே வாழ்கின்றனர்,
பின்பு நான் சூதாட்ட விடுதி (Indian head casino ) சென்றேன், ஒரு 20 நிமிடங்கள் சுமார் 5 டாலர் வரை இழந்தேன். நன்கு சூதாட தெரிந்தவருடன் ஒரு முறை செல்லவேண்டும்.
பின்பு அங்கிருந்து உணவு உண்ணலாம் என மெட்ராஸ் நகரம் சென்றேன், சென்னையில் இருந்து மெட்ராஸ் வந்தது ஒரு நல்ல அனுபவம்.
இந்த நகரம் மெட்ராஸில் இருந்து பஞ்சு ஏற்றுமதி செய்த பொழுது இந்த பெயர் வந்திருக்கலாம் என சொல்ல படுகிறது, உலகில் மக்கள் தான் வாழ்ந்த இடத்தை விட்டு இன்னொரு நிலத்திற்கு செல்லும் பொழுது தான் வாழ்ந்த இடத்தின் பெயர் வைக்கும் முறை இருந்துள்ளது.
யாராவது இந்த பழங்குடி மக்களின் நிலைமையை ஆராயிச்சி செய்பவர் இருந்தால் நன்றாக இருக்கும். என்னுடைய கருத்து ஒரு ஒரு பயணியின் அனுபவமே!!
warmsprings செல்வதற்கு முன் trillium ஏரி சென்றிருந்தேன் காலை 8 மணி இருக்கும் என நினைக்கிறன் , அங்கு ஒரு trailer வண்டியை தவிர வேறு எதுவும் இல்லை . ஏரிக்கு சென்ற பொழுது ஒரு ரம்மியமான அனுபவம், யாரும் இல்லாத அந்த அமைதியான நேரத்தில் அங்கு பார்த்த ஏரியின் அழகு அதில் மலையின் பிரிதிபலிப்பு
ஏப்ரில் 17 2016 - குதிரை சேணம் மலை(Saddle mountain ) பயணம்
ஹில்ஸ்போரோவில் இருந்து மேற்கே சுமார் 80 மைல் தொலைவில் உள்ள குதிரை சேணம் மலை உள்ளது.ஹிகிங் செல்ல சிறந்த இடமாக இருக்கும் என முன்பு சிசைடு(Seaside ) செல்லும் பொழுது வழியில் பார்த்தபொழுது தோன்றியது.
மேலே ஏறி இறங்க 5 மணிநேரம் ஆகும் மொத்தம் 5.2 மைல் காட்டு வழி பாதை,
காலை 8 மணி அளவில் புறப்பட்டு சென்றேன். ஜூப்ளி சாலை வழியாக US 26 யில் இருந்து வெளியேறி குதிரை சேணை மலையை நோக்கி திரும்பிய பொழுது அது ஒரு சிறிய சாலை , எதிரில் வண்டி வந்தால் ரோட்டை விட்டு இறங்கி வழிவிட வேண்டியிருக்கும். ஆனால் அந்த காலை வேளையில் யாரும் இல்லை. ரோடு சற்றே மோசமாக குண்டும் குழியுடன் இருந்தது,
ஒரு பள்ளத்தில் சற்றே வேகமாக இறங்கி ஏறிய பொழுது தெய்வான சற்றே தடுமாறி செல்ல தொடங்கினாள் எதோ உராயும் சத்தம் வேறு கேட்டது. காரை நிறுத்திவிட்டு முன்னே சென்று பார்த்த பொழுது டயர் ஓட்டை பஞ்சர் ஆகியிருந்தது. முந்தின நாள் தான் அவசர உதவி சேவையை கார் இன்சூரன்ஸஸில் சேர்த்திருந்தேன். ஆனால் நான் இருபத்தோ காட்டிற்கு நடுவில் அங்கு Tmobile சிக்னல் எடுக்கவில்லை!! அதுவும் இன்றி முன்னே கார் ஸ்டெப்னி டயர் மாற்றியும் பழக்கம் இல்லை எப்படி மாற்றுவது என்ற ஒரு தடவையும் பார்த்தது இல்லை.
ஆனால் ஏன் என்று தெரியவில்லை ஒரு துளியும் பயம் வரவில்லை. சரவணனின் மிது நம்பிக்கை வைத்து கடவுள் முருகன் அல்ல காரை எனக்கு விற்ற நண்பர் மிது அவர் டயர் மாற்ற எல்லா பொருட்களும் வைத்திருப்பார் என நம்பிக்கை வைத்து டரங்கை திறந்து பொழுது ஜாக் மற்றும் கருவிகள் எல்லாம் இருந்தன.
முதலில் ஜாக்கை வைத்து காரை தூக்கினேன் அனால் பிறகு டயர் நட்டை கையட்ட முயன்ற பொழுது கார் ஜாக்கில் இருந்து கிழே இறங்கியது .பிறகு தான் டயர் முதலில் கையட்ட வேண்டும் என்று புரிந்தது .பிறகு நட்டை கழட்டலாம் என முயன்றால் அது துரு பிடித்து மிக இறுக்கமாக இருந்தது. 5 நிமிடங்களாக முயன்றும் ஒன்றும் நகரவில்லை.அப்பொழுது ஒரு வெள்ளை நிற காரில் ஒரு பெண் காரில் இருந்து ஹலோ சொல்லி "Everything Okay " என்று கேட்டு "you are doing good " என்று கடந்து சென்றாள், ஏன் எனில் அந்த குருகிய தெருவில் எல்லா கருவிகளையும் மற்றும் டயரின் கவசத்தையும் ரப்பி வெய்திருந்தேன் . சற்றே மன நிம்மதி அந்த வனாந்தரத்தில் நான் கண்ட முதல் மனித ஜென்மம்.அது வரை மரங்கள் காற்றில் ஆடும் ஓசையை தவிர வேறு எதுவும் இல்லை. பறவைகளின் குரல்களும் இல்லை அவை எங்கோ நல்ல வெயில் காலம் ஆனதால் துணையுடன் எங்கோ சென்றுயிருக்கவேண்டும்.
திரும்பவும் காரில் ஒரு பாட்டலில் பிரேக் ஆயில் இருந்தது அதை எடுத்து நட் களுக்கு கைகளால் உற்று தடவி விட்டேன். இன்னும் இளவேனிற்காலம் மற்றும் மலை அருகில் இருந்ததால் வாடை காற்று விசி உடலை குளிர தொடங்கியது , இன்னும் சற்றே ஆசுவாச படுத்தி கொண்டு முயன்ற பொழுது ஒரு நட் மற்றும் சற்றே நகர்ந்தது. மனம் சற்றே லேசாய் ஆனது, டயரை கிழற்றி விடுவோம் என நம்பிக்கை வந்தது.
பின்பு மலை மேல் இருந்து ஒரு வெள்ளை டரக் வந்து "Do you have everything டு fix tyre" என்று கேட்டு நிறுத்தினார்.மற்றும் உன்னிடம் ஃ போன் உள்ளதா என்று கேட்டார் நான் சிக்னல் இல்லை என்றவுடன் சற்றே வண்டியை விட்டு இறங்கி வந்து பேச தொடங்கினார். ஒரு நட் மட்டும் மிக கடினமாக உள்ளது என்று கூறினேன் அவர் மண் அல்லும் திணி(Shovel ) தந்தார் அதன் கைப்பிடி போட்டு முறுக்கிய பொழுது நட் நகற அரம்பித்தது. எல்லா நாட்களையும் கழட்டிய பொழுது ஜாக் போட்டு காரை தூக்கி டயரை மாற்றினேன். பின்பு நட் இறுக்கி பொழுது பல நாட்கள் உபரி டயர் காற்று இறங்கி இருந்தது அவர் தன்னுடைய
உடனடி துளை அடிப்பான் ஸ்ப்ரே(Spray )கொண்டு வந்து அடித்து கொடுத்தார்.சற்றே டயர் உயர்ந்தது, பின்பு நெடுஞ்சாலையில் சீ சைடு செல்லும் பாதையில் ஒரு கெஸ் நிலையம் உள்ளது அங்கு காற்றை அடித்து கொள்ளவும் என்று சொல்லி சென்றார். அவருக்கு நன்றி தெரிவித்து அவருடன் அப்பொழுது தான் அவர் ஒரேகோன் வன விலங்கு அதிகாரி என்பதை கவனித்தேன் மற்றும் அவர் பெயர் Fedrick.
பின்பு அவர் முன்னே செல்ல நான் என் ஹிகிங் திட்டத்தை கைவிட்டு வீ ட்டுக்கு போனால் போதும் என திரும்பினேன். நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் எனக்காக காத்திருந்து பெட்ரோல் நிலையத்திற்கு வழிகாட்டி முன்னே சென்றார். அங்கு திரும்பவும் நான் நன்றி கூறிய பொழுது இன்னும் 10 மைல் தொலைவில் சீ சைடு நகரில் SCHWABS டயர் நிலையத்தில் சரி செய்து கொண்டு திரும்பி செல்லும் படி எனக்கு அறிவுறுத்தினார்.
நான் காஸ் ஸ்டேஷன் சென்று காற்று அடிக்க வேண்டும் என்று சொன்ன பொழுது கடை அலுவலர் இங்கு மஷின் இல்லை என்று அவர் சொன்னார், என் கார் டயர் துளை ஆனதால் எனக்கு அவசியம் வேண்டும் என்று சொன்ன பொழுது அவர் வெளிய வந்து மஷின் முன் இருந்த பலகைகளை நகற்றி காசு போடும் துளை தெரியும் படி அந்த மிக கனமான பலகைகளை அந்த வயதான அலுவலர் நகற்றி உதவினார். பின்பு உள்ள வந்து நன்றி தெரிவித்து இங்கு அருகில் டயர் சரி செய்யும் இடம் உள்ளதா என்று கேட்ட பொழுது அவரும் சீ சைடு செல்லவேண்டும் என்று சொன்னார்,நான் ஞாயிரு இயங்குமா என்று கேட்ட பொழுது "yellow page" புத்தகத்தை எடுத்து பார்க்க தொடங்கினார். google வந்தவுடன் இந்த புத்தகம் ஒற்று உலகத்தில் உள்ளது ஞாபகம் வந்தது. இங்கும் என் tmobile இயங்கவில்லை.பின்பு அவருடைய verizon iphone கொடுத்து அழைக்க உதவினார். நான் கார்த்திக் அழைத்து நான் இங்கு என் பிரச்சனை கூரி இங்கு டயர் சரி செய்ய கடைகள் விடுமுறை என்பதால் என் உதறி டயருடன் நான் விடு வருகிறேன் எதாவது அவசரம் என்றால் மட்டும் அழைக்கிறேன் என்று சொல்லி விட்டை நோக்கி கிழக்கே மெதுவாக காரை ஒட்டி கொண்டு வழியில் ஓரம் கட்டி எல்லா வாகனங்களுக்கு வழிவிட்டு விடு வந்து சேர்ந்தேன்.
மனிதர்களின் மிது நான் என்றும் வைக்கும் நம்பிக்கை இன்றும் எனக்கு உதவியது. உலகம் எவ்வளவு மாறினாலும் மக்கள் இன்றும் உதவ முன் வருகின்றனர். Frederick மட்டும் இல்லாமல் அந்த காட்டு பாதையில் வந்த மக்கள் எல்லோரும் நின்று விசாரித்து சென்றனர். எதாவது உதவி வேண்டுமா என்றும் கேட்டனர். என் அனுபவத்தில் இயற்கை இடங்களுக்கு வருபவர்கள் எப்பொழுதும் உதவும் தன்மையுடன் உள்ளனர். இதை இதற்கு முன்பு யோஷிமிடே காம்பிங் சென்ற பொழுதும் உணர்ந்தேன்.
இந்த அனுபவம் புதியது என் கார் பின்னாடி நான் ஒட்டியிற்கும் வார்த்தை பொய்யில்லை என்பதை எனக்கு இந்த நாள் உணர்த்தியது.
இந்த அனுபவம் புதியது என் கார் பின்னாடி நான் ஒட்டியிற்கும் கணியன் பூங்குன்றனாரின் காலத்தால் மாறாத என்பதை எனக்கு இந்த நாள் உணர்த்தியது.
கிழக்கு நகர பயணம் (மே 18 - மே 28)
குடும்பத்துடன் பல நகரங்கள் சென்றிருந்தாலும் ரோஜா பல முறை நயாகரா அருவி பார்க்க வேண்டும் என்று அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில் பலமுறை சொல்லி கொண்டிருந்தாள். இந்த முறை லாஸ் வேகஸ்(Las vegas ) செல்லலாம் என நினத்திருந்தேன், ரோஜா இந்த முறை நயாகரா பார்க்கலாம் என்று கூறிய பொழுது செல்வாவும் விட்டிற்கு வரும் படி பல முறை சொல்லியதால் நான் கான்கார்ட்(Concord ) செல்லாம் என முடிவு செய்தேன். 17 இரவு விமானம் ஏறி 18 காலை பாஸ்டன்(Boston ) சென்றோம். நான் அமெரிக்காவில் பார்த்த முதல் பெரிய நகரம். முதல் முதலில் அமெரிக்காவில் 2001 வந்த ஊர் ஹர்ட்பொர்ட்(Hardford ) நகரம், அப்பொழுது செல்வா பார்க்க போகும் பொழுது போஸ்டன் வந்திருக்கிறேன் . இந்தியாவில் சந்தித்த பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து செல்வா மற்றும் அவன் குழந்தைகளை முதல் முறை பார்க்க முடிந்தது.செல்வா தாயாரும் தந்தையாரும் முதல் முறை அமெரிக்காவில் சந்தித்தோம்.
மறுநாள் காலை 6.15 நயாகரா புறப்பட்டோம். அங்கிருந்து சுமார் 500 மைல் தொலைவில் வடமேற்நோக்காக சென்றால் நியூயார்க் மாநிலத்தின் கனடா நாட்டின் எல்லையில் உள்ளது நயாகரா அருவி. இந்த அருவி ஐந்து பெரும் எரி(Great lakes ) களின் இணைக்கும் நயாகரா ஆற்றின் அருவி. இந்த மாதம் இளவேனிர் காலம் ஆகியதால் மற்றும் பயணிகள் குறைவு. நிறைய சீனாவில் இருந்து வந்த சீனர்களும் மற்றும் ஐரோப்பியர்களை மற்றும் இந்தியர்களை பார்க்க முடிந்தது. அமெரிக்கர்கள் அவ்வளவாக இல்லை அப்படி வந்தாலும் இந்த விடுமுறை நாட்களில் வர மாட்டார்களோ என்றே தோன்றியது.
இரண்டு நீர் விழுச்சிகள் அமெரிக்கா நாட்டிலும் முக்கியமான பெரிய குதிரை குளம்பு நீர் விழுச்சி(Horse shoe falls ) கால் பாகம் அமெரிக்காவிலும் முக்கால் பாகம் கனடாவிலும் உள்ளது,சிறு நீர் விழ்ச்சியை படியில் இறங்கி பார்க்க முடிந்தது.
இளவேனிற் காலம் மற்றும் பனிபாறை உருகி வருவதால் நீர் மிக குளிராக இருந்தது, இருதயன் எதோ பனி கரடி போல நீரில் சென்று விளையாட ஆரம்பித்துவிட்டான். அந்த நீர் விழுச்சியின் பேரொலி மனிதனின் குரலை மழுங்கடித்தன. ஆயிரக்கணக்கான நீர் பறவைகள் மலை அடிவாரங்களிலும் நீரில் இருந்து இரண்டு கால் கொண்டு பறக்க முடியாத ஜீவராசிகளை பார்த்து கொண்டு இரைந்து கொண்டிருந்தன.
பின்பு maid of the mist படகில் பெரிய நீர்விழுச்சிக்கு சென்றோம். அருகில் செல்ல செல்ல எதோ ஒரு பெரும் அதிசயத்தை காணும் மன எழுச்சியில் இருந்தேன், அமெரிக்காவின் எல்லையில் இருந்து அதன் பிரமாண்டத்தை உணர முடியாது. கனடாவிற்கு சென்று மருகரையில் இருந்து அந்த பேர்விழுச்சியை ரசிக்கமுடியும் அனால் அதற்கு தடையாக அரசாங்கம் உருவாக்கிய VISA பிரச்சனைகள் . அதை சற்றே மறந்து அருவியை பார்க்க தொடங்கிய பொழுது எல்லாம் மறந்து அதன் பேர்ருவம் உள்ளத்தில் புகுந்தது. நீரின் விழ்ச்சியின் வேகத்தில் தண்ணிர் சிதறி பனி திரை உருவாகி அருவியை மறைத்து அதுவே அந்த அருவிக்கு திரையாய் அமைந்தது.
அருவியின் வேகமும் நீரின் கொள்ளவும் அந்த மகத்தான இயற்கை காட்சியை உருவாக்கியது.நயாகரா பெரிய விழுச்சியின் அருகில் படகில் சென்ற பொழுது அதன் இயற்கையான பிரமாண்டம் நம்மை கண்கள் காதுகள் வழியாக நம் மனம் முழுவதும் அதன் பேரழகு வியாபித்து.உலகிற்கு அமெரிக்காவின் இயற்கை அழகிற்கு ஒரு எடுத்துகாட்டு.
வெளிநாடு சுற்றுலா பயணிகள் நிறைய வருவதால் மிக வணிக மயம் ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் நீர்விழுச்சியை சுற்றி செயற்கை படிக்கட்டுகள் அமைத்து அருகில் அழைத்து செல்ல அதிக கட்டணம் வசூலித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். இயற்கை ரசிக்க செல்வதை விட எதோ ஒரு வணிக இடத்திற்கு சென்ற எண்ணம் தான் மனதில் உருவாகியது.
இரவு மதிய உணவுக்காக ஊரில் உள்ள உள்ளூர் பிட்சா உணவு விடுதியை தேடிய காரில் சுற்றிய பொழுது நயாகர நகரம் சற்றே ஏழ்மை தன்மை கொண்டிருந்தது போலிருந்தது. சில பழைய பாழடைந்த விடுகள் ஏழை கறுப்பின மக்களை பார்க்கமுடிந்தது. அங்கு வாழும் மக்களுக்கு அந்த நீர் விழுச்சி பெரிய பயன் இல்லையோ என்ற எண்ணமே தோன்றியது. அந்த இயற்கை பயனை வணிக ஹோட்டல்களும் மற்றும் உணவு விடுதிகள் பயன் பெறுபவையாக உள்ளன.
இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் நண்பன் விட்டிற்கு புறப்பட்ட பொழுது வழியங்கும் ரோஜா வாந்தி பாவம் சுமார் 10 மணி நேரம் கொஞ்சம் நீர் குடித்தாலும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டாள். அனால் எந்த அவசரமாக மருத்துவமனை செல்லும் நிலைமைக்கு அவள் இட்டுசெல்லவில்லை .பார்க்க மிக ஒல்லியாக சாதாரண பெண் போல இருந்தாலும் அவள் மன வலிமை மிக பெரியது.
12 வருடங்களாக பார்க்க நினைத்த இடத்தை பார்த்த மன திருப்தி!!
மற்ற இரண்டு நாட்கள்(21 மற்றும் 22) உடலை தேர்த்தி கொண்டு நியூயார்க் செல்ல திட்டம். இந்த முறை செல்வா மனைவி குடும்பத்துடன் செல்லலாம் என கேட்டார்கள். அதனால் செல்வா அவர் மனைவி கௌசல்யா குழந்தைகள் கிருஷ்ணா, சிட்டுக்குருவி என்னும் இரண்டு வயது சுருதி.செல்வாவின் தாய் மற்றும் தந்தை.
எங்கள் பயணத்திற்கும் அவர்கள் பயணத்திற்கும் நிறைய வேறுபாடுகள்.நாங்கள் காலை 6 மணிக்கெல்லாம் புறப்படுவோம் உணவு வழியில் எங்காவது அல்லது இரவே ஒரு வெளிக்கு உணவு தயாரித்து கொண்டு புறப்டுவோம். அவர்கள் உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் மின்சார அரசி குக்கர் கொண்டு புறப்பட 9.30 யானது. இரண்டு கார்களில் புறப்பட்டு தொடங்கி மதிய உணவிற்கு பின் நியூ ஜெர்சி ஹோட்டல் சென்று சேர 4.30 மணி. நான் என் காரில் ரோஜா, கௌசல்யா ஷ்ருதி யோகித் பயணித்தோம். ஷ்ருதி காரில் seat belt அணியமாட்டேன் என்று அந்த மினி வேனில் விளையாடி கொண்டே பயணித்தாள். காரை வேகமாக ஓட்ட முடியவில்லை . அவள் பெல்ட் போடாதால் அவள் தாயாரும் பெல்ட் போடாமல் பயணிக்க வேண்டியிருந்தது.
பின்பு இரவு ஆறு மணியளவில் நியூ ஜெர்சி journal square ரயில் நிலையத்தில் இருந்து times square சென்றோம். அங்கு சென்று சேர்ந்த பொழுது 8 மணி மேல் இருக்கும். வண்ண ஒளிகளால் நிறைந்த மக்கள் வெள்ளம் சுழுந்த தெரு. நியூயார்க் என்றாலே அதன் அடையாளம் Times square. இரவு முழுவதும் மக்கள் இலக்கின்றி திரியும் வீதி. செல்வா தாய் தந்தையர் சோர்வுற்றதால் நாங்கள் மட்டும் ஒரு அரை மணி நேரம் திரிந்துவிட்டு ஹோட்டல் திரும்ப முடிவு செய்தோம் . அபோழுதே மணிஇரவு 12.00 இருக்கும். நான் இரண்டு மெட்ரோ மாற கடினம் என துறைமுக பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் சென்று விடலாம் என கூறினேன். ஆனால் அங்கு சென்ற பின்பு இரவு ஆனதால் சுமார் 1 மணி நேரம் கழித்து தான் பேருந்து இருந்தது. அங்கு காத்திருந்த பொழுது ஒரு applied scholastics வேலை செய்யும் இளைஞரை சந்தித்தேன். அந்த இரவிலும் அங்கு முந்திய பேருந்து எர செல்லும் மக்களுக்கு உற்சாகமாக குட் நைட் சொல்லி கதவை திறந்து விட்டு கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு கால்களும் உபயோகிக்க முடியாமல் உணமுள்ள சக்கர வண்டியில் பயணிக்கும் மனிதர். அவர் மக்கள் என் புத்தகம் படிக்க முடியாமல் கடினமாக எண்ணுகிறார்கள் என்று எனக்கு ஒரு புரியவைத்தார். ஒரு வரியில் ஒரு சொல் புரியாமல் போனால் நாம் படிக்கும் பொழுது நம் மனதில் ஏற்படும் கற்பனை உலக பிம்பம் கலைந்து விடுகிறது அதனால் ஒவ்வொரு சொல்லின் அர்த்தம் உணர்த்து படித்தால் சுவாரசியம் குறையாமல் படிக்க சொன்னார். இந்த கருத்து நான் அறிய பல வருடங்கள் தேவை பட்டது புத்தகம் படிக்கும் பொழுது சொல்லின் அர்த்தத்தை தேடி அப்பொழுது தான் ஆரம்பித்திருந்தேன். அவருடைய தொழிலே எப்படி படிப்பது என்று மக்களுக்கு சொல்லித்தருவது அவருடைய மாணவர்கள் 5- 65 வயது வரை.எந்த துறை புத்தகங்களையும் படிக்க சொல்லித்தருவது அவர் தொழில். அவருடைய பெயர் மற்றும் மின்னஞ்சல் கொடுத்தார் அத ஒழுங்காக படம் எடுக்காமல் அந்த காகிதத்தை விட்டுவிட்டேன். அதுவும் ரோஜா வேண்டுமா என்று கேட்ட பொழுது எடுத்து வை என்று சொல்லாத ஒரு முட்டாள்.அன்று பேருந்தில் காத்திருக்க வைத்ததே இவரை சந்திக்க தானோ !!.
அதுவும் இன்றி அன்று பேருந்து நிலையத்தில் செல்வா தான் ஒரு அமெரிக்கன் என்று தேவையில்லாமல் ஒரு கறுப்பின அமெரிக்கனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். நான் தலையிடாமல் இரண்டு அமெரிக்க குடிமகன்கள் விடயத்தில் நாம் என் நுழைய வேண்டும் என்று ஒதுங்கியிர்ந்தேன். அனால் அங்கு இருந்த வயதான அந்த உயிர்ப்புள்ள முதிர்ந்த வயதான அம்மையார் என்னை அழைத்து "in newyork it does'nt works " செல்வாவை அழைத்து வா என்று அறிவுறுத்தினார். நான் அழைத்தும் வராமல் இன்னும் வாக்குவாதம் தொடர்ந்த பொழுது நானும் கோப பட்டுவிட்டேன், "உன் கையில் குழந்தை உள்ளது" அவன் கையில் ஒன்றும் இல்லை அதனால் "மூடிக்கிட்டு வா" என்று கோபமாக பேசிவிட்டேன். இந்த இரண்டு சம்பவங்களும் Newyork முதல் நாள் பயணத்தின் மறக்க முடியாத அனுபவம் ஆகும்.
மறுநாள் புறப்பட 10.30 மணி ஆகிவிட்டது என்னில் உணவு மற்றும் நேரம் கழித்து எழுந்ததனால். இந்த முறை ஹோட்டல் பேருந்து பிடித்து நியூயார்க் சென்றோம் பஸ் time square அருகே நிருத்தியது. அங்கிருந்து மெட்ரோ பிடித்து battery park செல்லவேண்டும். மெட்ரோவில் செல்லும் பொழுது இருதயன் ஓடி வந்து இடம் பிடித்தான் அங்கு வந்த ஓரூ கறுப்பின அமெரிக்கர் அவனக்கு பக்கத்தில் இடம் கொடுத்தார் ஆனால் அவன் செல்வாவின் தாய் தந்தையாரை அழைத்து வந்து இடம் கொடுதான், அதை அந்த அமெரிக்கர் ரோஜாவிடம் மிகவும் பாராட்டி பேசினார்.இத்தகைய குணங்கள் இந்தியாவில் இருந்தால் தானாக வரும், நாங்கள் இதை அவனுக்கு சொல்லிதரவில்லை. ஒருவர் தன மகனை பாராட்டுவதை கேட்பது நம்மை பாராட்டுவதை விட மிக மகிழ்ச்சியான தருணம்.

பின்பு பாட்டரி பூங்கா சென்று அங்கிருந்து படகில் எல்விஸ் தீவு (Ellis island ) சென்று சேர்ந்த பொழுது மணி மதியம் இரண்டு இருக்கும். உணவு உண்டுவிட்டு நடந்து சுற்றி பார்த்தோம் . சிலையின் மேலே செல்ல அனுமதி பெறவில்லை அது ஒரு மாதம் முன்பே பதிவு செய்யவெண்டியிருந்தது. சுதந்திர தேவதை ஒரு கையில் அமெரிக்காவின் சுதந்திர நாள்(ஜூலை 4 1776) தேதியுடன் குரிப்பிட சுதந்திர அறிவிப்பு புத்தகத்துடன் மற்றும் மறு கையில் சுதந்திர சுடருடன் வெண்கல சிலை. இது தான் அமெரிக்காவிற்கு முன்பு கடல் வழி புலம் பெயர்ந்த மக்களுக்கு அடையாள சின்னம்.
திருமணம் ஆனா புதிதில் அமெரிக்க வந்த பொழுது முன்பனிகாலத்தில் ரோஜாவுடன் இதே செல்வா தான் அழைத்துவந்தான். அப்பொழுது ரோஜா குளிரை தாங்க முடியாமல் என்னை தழுவி கொண்டு படகில் பயணித்தது இப்பொழுது ஞாபகம் வருகிறது.
பின்பு அங்கிருந்து திரும்பி One world tower வந்தோம், இது தான் 9/11 அன்று இடிக்கப்பட்டு twin tower இருந்த இடம். இன்று இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில ஒரு நினைவு இடமும் சுற்றி இந்து WTC கட்டிடங்கள் உள்ளன. அங்கு அந்த நினைவகத்தில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்க பட்டிருந்திருந்தது. இந்தியர்களின் பெயர்கள் இல்லை அல்லது மிக குறைவாக பொறிக்க பட்டிருந்ததோ என்ற சந்தேகம் வந்தது. யாரோ சிலருடைய பேராசையோ அல்லது வன்மையோ இங்கு ஒன்றும் அறியாத குடும்பத்திற்காக திங்கள் காலை ரயிலிலும், படகிலும் காரிலும் வந்த ஒரு சராசரி மனிதனின் நினைவுகள் அட்லாண்டிக் கடலின் காற்றினுடே உலாவி கொண்டுள்ளது. உலகம் உள்ளவரை இந்த அழிவுக்கு உண்மையான காரணம் அங்கு உள்ள இரண்டு குழிகளில் அடியில் புதைக்க பட்டிருக்கிறது
மறுநாள் காலை நாங்கள் மட்டும் செல்வாவின் காரில்
வாஷிங்டன் D .C நகரம் சென்றோம் அவர்கள் நியூயார்கில் இருந்து வீடு திரும்புவதாக திட்டம். நாங்கள் காலை 7 மணி அளவில் வாஷிங்டன் நகரை நோக்கி பயணத்தை தொடங்கினோம். வழியில் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட நகரம், அமெரிக்க சுதந்திரத்தை அறிவித்த நகரமான ஃபிலி என்று சுருக்கமாக அழைக்கபட்ட நகரம் பிலடெல்பியா(Philadelphia ). அங்கு விடுதலை மண்டபம் - இங்கு தான் அமெரிக்க சட்டம் ஏற்றப்பட்டது மற்றும் அமெரிக்க சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட சுதந்திர மணி வைக்கப்பட்டுள்ளது.நிறைய சின பயணிகள் ஆர்வத்துடன் சுயம்பி(Selfi ) எடுத்து கொண்டிருந்தனர். உலகின் சுதந்திரம் அறியாத மக்கள் சற்று ஆற்வத்துடன் பார்த்தனர். அமெரிக்க பள்ளிக்கூட சிறுவர் சிறுமியர் நிறைய பார்க்க முடிந்தது. ஆசிரியர்கள் தம் பிள்ளைகளுக்கு சுதந்திரதை மிக பொறுமையாக விளக்கிகொண்டிருந்தனர். உலகின் முதல் சுதந்திர பிரகடனம் செய்த நாடு , சுதந்திரத்தை அரசியல் பிரகடனம் செய்த முதல் நாடு.

பின்பு வழியில் உணவு சாப்பிட சென்றோம், அமெரிக்காவின் கிழக்கு மற்றும் கடற்கரை மாநிலங்களுக்கும் மேற்கு வித்தியாசங்களை உணர முடிகிறது. உணவு விடுதிகளில் , ஹோட்டல் வெள்ளை இன மக்கள் சேவை செய்வதை பார்க்க முடிகிறது. மேற்கு வேலையை மெக்சிகன் இன மக்கள் தான் அதிகம் உள்ளனர்.அதிவேக சாலைகளில் மிக தொலைவில் சுமார் 20-30 மெயிலில் தான் இணையும் சாலைகள் வருகின்றன. மிக அதிகமாக சாலை வரி வசூலிக்க படுகிறது. அவ்வளவாக வளர்ச்சி இல்லாமல் உள்ள மாநிலங்களாக தான் நியூ இங்கிலாந்த்(CT ,NH ..) என அழைக்க படும் மாநிலங்களின் நிலை. இளைய தலைமுறை மக்கள் ஒரேகோன், கொலராடோ வளரும் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். அதனால் அமெரிக்காவில் Mall காலியாக உள்ளதை கான்கார்ட் நகரில் பார்த்தேன். பல கடைகள் மூடப்பட்டு யாரும் இல்லாத வணிக வளாகங்களை பார்க்க முடிந்தது. நியூயார்க் மாநிலத்தில் ட்ராய்(Troy ) சிறு ஊரில் ஒரு Dunkin donuts உணவு உன்ன சென்ற பொழுது ஒரு வயதான தம்பதியர் தன்னுடைய பிள்ளை இங்கு உள்ள வீட்டை விற்றுவிட்டு ஒரேகோன் சென்று விட்டதாக அவர்கள் கூரினர். போர்ட்லன்ட் நகரம் வேகமாக வளரும் நகரங்களில் ஒன்று.
பின்பு சுமார் 6 மணி அளவில் தான் வாஷிங்க்டன் ஒரு தலைநகர பிராந்தியம் என்பதால் அதன் பக்கத்தில் உள்ள விர்ஜினியா மாநிலத்தில் அலெக்ஸாண்ட்ரியா நகரில்(Alexandria - VA ) ஹோட்டல் சென்று சேர்ந்தோம். பின்பு இரவு 8 மணி அளவில் வாஷிங்டன் நினைவகம் மற்றும் லின்கன் நினைவகம் சென்று சேர்ந்தோம். எனக்கு கார் ஓட்டியதால் மற்றும் இரவு ரோஜா மற்றும் குழந்தைகள் ஊருக்கு திரும்ப டிக்கெட் போடவேண்டியுள்ளதால் இரவில் விப்ரோ விமான பயண டிக்கெட் அவர்கலுடன் பேசி டிக்கெட் வாங்கவது மிக பெரிய சவாலாக இருந்தது.இத்தகைய மிக முறைமை இல்லாத அலுவகத்தில் நாம் வேலை செய்கிறோமே என்ற எண்ணம் வரவைத்துவிட்டார்கள்.
அமெரிக்காவின் இரு பெரும் தலைவர்கள் , இன்றைய ஒருங்கிணைந்த அமெரிக்காவை உருவாக்கிய ஜனாதிபதிகள்.
முதலில் ஆப்ரஹாம் லின்கன் நினைவக மண்டபத்திற்கு சென்றோம் .தெற்கு நாடுகள் பிரிந்து செல்வதை போர் மூலம் தடுத்தவர். அமெரிக்க கறுப்பின மக்களின் அடிமை தனத்தை முதல் முதலாக அகற்ற முயன்ற தலைவர். அவருக்கு மிக பெரிய பளிங்கு சிலையுடன் மண்டபம். அவருடைய கம்பிரத்தை அந்த சிலையில் நானும் மனைவியும் உணர்ந்தோம். அவர் ஜனாதிபதி உரையை சுவர்களில் செதுக்கிஇருந்தனர். இருதயன் அதை பொறுமையாக வாசித்தது வியப்பளித்தது.
லின்கன் மண்டபம் அவருடைய நினைவகம் மற்றும் அல்ல அமெரிக்காவின் கறுப்பின போராட்டத்தின் அடையாளமும் இந்த இடம் தான். இங்கு தான் கறுப்பின நிகரில்லா தலைவர் மார்ட்டின் லூதர் கிங் தம்முடைய புகழ்பெற்ற "I have a dream " என்று முழங்கிய இடம். இன்று அமெரிக்காவின் மதம்,மொழி இனம் நிற வேறுபாடுகள் அற்ற ஒரு சமூகமாக மாற்றிய ஒரு விடிவெள்ளி.
பின்பு அங்கிருந்து யோகித்தை தோளில் தூக்கி கொண்டு ஜார்ஜ் வாஷிங்டன் சதுக்கம் சென்றோம் . சுமார் 1 மைல் செயற்கை குளம் கரையோரமாக நடந்தோம். அவரின் புகழின் உயரத்தை சொல்லும் 554 அடி உயர நினைவுச்சின்னம் குளத்தில் பிரிதிபலிப்பது போன்று அமைக்க பட்டுள்ளது.
இரவு 11 மணி ஆனதால் நானும் பிள்ளைகளும் சோர்வு அடைந்துவிட்டோம். மனைவி வெயில் இல்லாத இரவு உற்சாகமாக இருந்தாள் ,அவளுக்கு இன்னும் பார்க்க வேண்டும் என்று ஆசை.
நினைவகத்தில் இருந்து அமெரிக்கா பாராளுமன்றம் கோபுரம் ஒரு வெள்ளை வெண்ணிலா இஸ்க்ரீம் போன்று இரவில் ஒளி வீசி கொண்டிருந்தது.அதை காண வேண்டும் என்ற எண்ணம் அவள் கொண்டிருந்தாள். பின்பு கார் எடுத்துக்கொண்டு அருகே வரை சென்றோம் ஆனால் இரவு என்பதால் வழிகள் அடைக்க பட்டிருந்தன.
பின்பு வழியில் மெக்டொனால்ட்ஸ் உணவு உண்டுவிட்டு இரவு அறைக்கு சென்றோம். அடுத்த நாள் காலை capitol hill மற்றும் வெள்ளை மாளிகை பார்த்துவிட்டு concord திரும்புவதாக திட்டம் .

எனக்கு அமெரிக்காவில் அதிகார இடங்களுக்கு செல்வது என்றாலே வெறுப்பு.எங்கும் ஒரு அதிகார தோரணை வெள்ளை இன மக்கள் இல்லாதவர்களை அதிகாரிகள் கண்களில் ஒரு சந்தேக ஊடுருவும் பார்வை. ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு செல்லாமல் இருக்க மனம் இல்லை. முதலில் வெளிய இருந்து பார்த்தோம் பிறகு பார்வையாளர் பகுதிக்கு சென்றோம். secret service பாதுகாப்பு பலமாக இருந்தது உள்ள நீர்,உணவு எதுவும் எடுத்து போக அனுமதி இல்லை. அதனால் வாங்கிய அனைத்தையும் குப்பையில் கொட்டவேண்டி வந்தது. ரோஜாவிற்கு இரும்பல் ஆரம்பித்து விட்டுருந்தது அவள் அந்த அவசரத்தில் வாயை மூடாமல் இரும்பிவிட்டாள் பரிசோதனை அருகே , அங்கு காவலுக்கு இருந்த கருப்பு இன பெண் "MAM WHY CAN'T you close your mouth " என்று கண்ணை சுருட்டி ஒரு அதிகார தோரணையில் கூறிய ரோஜாவுக்கு மன வருத்தம். உள்ளே எங்கும் அதிகாரம் ஊடுருவும் பார்வைகள் , அங்கே இரண்டு படம் எடுத்துவிட்டு திரும்பி விடலாம் என தான் என்னினேன்,ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்ப மனம் வரவில்லை.பின்பு வரிசையில் Capitol சுற்றி பார்க்க சென்றோம்,அமெரிக்காவின் சுதந்திரம், சட்டம் இயற்றும் முறை எப்படி அது மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயன்படுகிறது என்று குறும்படம் காட்டப்பட்டது. உலகத்தில் அமெரிக்காவின் சுதந்திர விளம்பர படுத்துவதை உணரமுடிகிறது. அதுவும் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வழிகாட்டி அமைத்து அமெரிக்கா வரலாறையும் அந்த மாளிகையின் விளக்கங்களையும் சொல்லுவதற்க்காக அதுவும் இலவசமாக. எங்கு senate சபையுள்ளது எங்கு house of representatives உள்ளது போன்ற தகவல்கள். பின்பு குவிமாடம் அழைத்து சென்றனர் அங்கு உள்ள சிலைகளும் அதன் வரலாறும் , கூரையில் உள்ள வண்ண ஓவியங்களின் குறிப்புகள். செப்பனிடும் வேலை நடந்து கொண்டிருந்தமையால் நிறைய படங்கள் எடுக்க முடியவில்லை.

பின்பு அங்கு உணவு உண்டுவிட்டு புறப்பட்டோம், உலகிலேயே அழைக்காமல் எல்லோரும் செல்லக்கூடிய வீடு(வாசல் வரை) வெள்ளை மாளிகை. அப்படி ஒன்றும் கட்டிட கலையோ அல்லது பிருமாண்டமானதோ இல்லை ஆனால் உலக ஜனாதிபதி என்று விளம்பரம் படுத்த நிழல் யுத்தம்(cold war ) காலத்தில் பயன் படுத்தப்பட்ட யுத்தி.
பின்பு அங்கிருந்து புறப்பட 4 மணி ஆகிவிட்டது , வழியில் திரும்பவும் நியூயோர்க் நகர empire state கட்டிடத்தை பிள்ளைகளுக்கு காட்ட வேண்டும் என்று மனைவிக்கு விருப்பம் , நான் களைத்திருந்ததால்
விட்டுவிட்டு நேராக வீட்டுக்கு செல்லலாம் என நினைத்தேன், பின்பு எப்பொழுது வருவோம் என அங்கிருந்து புறப்பட்டு நியூயோர்க் வந்து போழுது இரவு 12.30 இருக்கும் ஆனால் அப்பொழுதும் மக்கள் ஜெ ஜெ என எங்கும் மக்கள் கூட்டம். நியூயோர்க் வாஷிங்டன் நகரங்களில் காரை பார்க்கிங் செய்யவே சொத்தை அழிந்துவிடும் 20$ ஒன்றரை மணி நேரத்துக்கொடுத்தேன் அதுவும் இரவு 1 மணியளவில். பின்பு இரவில் empire state கட்டிடம் சென்றோம். பிள்ளைகள் One world tower சென்று வந்தாலும் எல்லோரும் சேர்ந்து சென்று பார்க்க திட்டம்மிட்டோம், இங்கு கண்ணாடி அறையில் இருந்து பார்க்காமல் வெளியே பால்கனியில் இருந்து அந்த காற்றுடன் இரவின் அழகையும் விளக்குகளின் ஒளியும் நிறைந்த ஒரு பரபரப்பான நகரத்தின் அமைதியை உணரலாம் , 87 மாடி உயரத்தில் இருந்து பார்க்கும் பொழுது கார் நிதானமாக ஊர்ந்து செல்வது போன்றும் மக்களின் கூச்சல்கள் பரபரப்புகள் அற்ற ஒரு பேர் அமைதியை உணரலாம்.வாழ்க்கையை பிரச்னைகளை சற்று உயரத்தில் இருந்து பார்த்தால் அது கொந்தளிக்கும் கடல் அல்லாமல் ஒரு நீர் நிறைந்த குளம் போல காட்சிப்படும்.

பின்பு இருதயன் உதவியுடன் நகர தெருக்களை கடந்து US 90 வடக்கை பிடித்து concord திரும்பினோம்.எல்லோரும் தூங்கும் பொழுது தனியே நானும் காரும் அந்த சாலை.காரை விரட்ட உலகம் பின் நோக்கி ஓடும்.சற்றே தூக்கம் வந்ததால் வைகரை 3 மணி அளவில் சாலையோர தங்கும் இடத்தில் பார்க் செய்து விட்டு என்னை அறியாமல் சுமார் ஒன்றை முக்கால் மணி நேரம் தூங்கிவிட்டேன். பின்பு முகம் கழுவி காரை துவக்கிய பொழுது கதிரவன் எழ ஒரு பயணம் முடிந்தது.
25th
ஜூன் 2016
இன்று அதிகாலை 4 1/2
மணிக்கு
புறப்பட்டு டைகார்ட் உள்ள குக் பூங்காவில்
பல்லூன் விழாவுக்கு சென்றோம்,
நான் கார்த்திக்,
அன்கிட்,
அனில் அவன் அறை நண்பன். விடியல் காலை பயணங்கள் என்றும் இனியவை. அவர்கள் 15-20
நிமிடங்கள் தாமதமாக வந்ததால் சற்றே பதற்றம்.
அந்த பனி விழுந்த இனிய காலை வேளையில் கிழக்கே கதிரவன் வர தொடங்கினான. நான்
என்னுடைய செருப்பு மற்றும்
T .shirt
அணிந்து சென்றதால் காலை பனி பாதங்களை ஈர படுத்தி உடலை குளிர
செய்தது,
குக் பூங்காவில் காரை நிறுத்திவிட்டு உள்ளே நடந்து
சென்றோம். அந்த காலை வேலையில் பல அமெரிக்க குடும்பங்கள் வந்து கொண்டிருந்தனர். புல் மெத்தையில் பிளாஸ்டிக் பாய் விரித்து அதன் மேல் பலூன் பரப்பி வைத்திருந்தனர். பின்பு எரிவாயு அடுப்பு கொண்டு காற்றை எரித்து மின்விசிறி கொண்டு பலூனை ஊதினார். பலூன் பெரிதாக ஆக ஏதோ ஒரு குழந்தையின் உற்சாகம்
மனதில் பரவ ஆரம்பித்தது. பின்பு
அமெரிக்க தேசிய கிதம் ஒலிக்க ஒவ்வொரு வண்ண பலூன் பயணத்தை தொடங்கியது.
ஒவ்வொரு பலூன் பல வண்ணங்கள் , ஒன்று வானவில் வண்ணம், மஞ்சள் நிறைந்த பந்தில்
சிவப்பு பட்டையுடன் ஒன்று.பச்சையும் கருப்பும் அணில் உடலின் கோடுகள் போடுது போல ஒன்று. அந்த மேகங்கள் அற்ற நீல வானில் வண்ண கோலங்கள் வரைய ஆரம்பித்தன. ஏதோ வண்ண ஸ்டிக்கர் ஒட்டியது போல பயணித்தது..நானும் கார்த்திக்கும் தவிர மற்றவர்கள் படம் எடுக்க சென்றுவிட்டனர். பூங்காவின்
ஓரத்தில் மக்கள் வரிசையில் நிற்பதை பார்த்துவிட்டு நாங்களும் சென்று
நின்றோம்.அங்கு வரிசையில் நிற்பதை பற்றி விசாரித்த பொழுது அது பலுனில் சுமார்
ஐம்பது அடி வரை இலவசமாக அழைத்து செல்வர் என்று கூரினர், ஆனால் சுமார் 250-300
மக்களுக்கு தான் தருவர் என அறிந்ததால்
கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்துடன் வரிசையில் நின்றோம்.நமக்கு கிடைப்பதே
சந்தேகம் என்ற பொழுது மற்றவர்களை அழைத்தால் அவர்களும் வெட்டியாக நேரம் வினாகும்
நாங்கள் மட்டும் காத்திருந்தோம். நாங்கள் அருகில் சென்ற பொழுது அங்கிட் மற்றும் அநில் நாங்களும்
நிற்கலாமா என வந்தனர், ஆனால் எங்களுக்கு பின்னால் பலர் காத்திருந்தனர் அதுவும் ஒரு பெண்மணி போன தடவை அருகில் சென்று இழந்து
விட்டோம் என வருத்தப்பட்டனர், இவர்கள் அருகில் வந்த பொழுது பெருமுச்சு
விட்டார். ஒரு தாளில் பொறுப்பு துறப்பு பெற்று கொண்டு எங்களுக்கு டிக்கெட் மற்றும் கையில் அச்சிட்டு அனுப்பினர். நாங்கள் பிறகு பலூனில் பறக்க வரிசையில் நின்று ஒரு
சிறு உயர பயணத்தை தொடங்கினோம்.ஒருவர் இறங்க ஒருவர் ஏற என எடையை சமன் செய்தனர். ஈர காற்றும் வெம்மையான காற்றும் உடலை வருடியது.
அந்த உயரத்தில் இருந்து பார்ப்பது ஒரு இனிய அனுபவம்.இந்த படம் எடுக்கும் காரணத்தால் அங்கிட் மற்றவர்கள் வாய்ப்பை இழந்தனர். பின்பு
அங்கிருந்து புறப்பட்டு HMART சென்று
ஆயிலை மீன் வாங்கி சென்று கார்த்திக் விட்டில் குழம்பு சமைத்து மதிய உணவு உண்டோம்.
26 ஜூன் 2016
முல்டனோமஹா நீர்விழுச்சி பெருநடை(Multnomah falls -Nesika lodge hiking )
இது meetup வழியாக சென்ற முதல் பெருநடை, முல்டனோமஹா நீர்விழுச்சி அடிவாரத்தில் தொடங்கி சுமார் 5 மைல் தொலைவில் மௌன்ட் ஹூட் மலை தொடரில் ஒரு மலையுச்சியில் ஆற்றின் பள்ளத்தாக்கை நோக்கியுள்ளது நேசிக்கா தங்கும் விடுதி. நானும் அன்கிட் சேர்ந்து meetup குழுவினரை சந்தித்தோம். சில நிமிடங்கள் குழு அறிமுகத்திற்கு பிறகு நாங்கள் 9 மணி அளவில் பயணத்தை தொடங்கினோம். அந்த வழி நீர்விழுச்சியின் உச்சிக்கு சென்று அங்கு இரு வழியாக பிரிந்து நீரின்விழுச்சியின் உச்சிக்கு மற்றொன்று பிரிந்து நேசிக்கா தங்கும் விடுதி நோக்கி சென்றது. வழி நீரோடையின் அருகிலே சென்றதால் நீரின் ஓசையும் மரங்கள் காற்றை வருடும் ஓசையும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. செல்லும் வழியில் சிறு அருவிகள் நம்மை வரவேற்றன. சுமார் 2 1/2 மணி நேரம் நடந்த உணவு அருந்தும் வேளையில் பிறகு நெசிக்கா அடைந்தோம். அந்த தங்கும் விடுதியில் இருந்து கொலும்பியா அருவி பள்ளத்தாக்கை பார்க்க முடிந்தது. பச்சை தலையில் வெள்ளை கோடுகள் போட்டது போல ஆறு நின்றது. ஆம் மலையில் இருந்து பார்த்த பொழுது அந்த ஆறு நீண்ட ஏரியை போல தோன்றியது. சில வினாடிகள் அதை ரசித்துவிட்டு உள்ளே சென்றோம் .


அங்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது clam chowder சூப் மற்றும் பரீட் தரப்பட்டது .அந்த இடம் மலை உச்சியில் அமைந்த ஒரு குடில். கொலும்பியா சாலை அமைக்கும் போழுது என்ஜினீயர்கள் சேர்ந்து சுமார் 6000$ சேர்த்து மலையை வெடி வெய்த்து தகர்த்தப்பட்டு அமைக்கப்பட்ட விடுதி.இப்பொழுது அதை பழைய விடுதியை புனரமைப்பு மக்களின் சேவையுடன் செயிகின்றனர். அங்கு அவர்கள் கொடுத்த சூப்புடன் நாங்கள் கொண்டு சென்ற உணவு உண்டபின் திரும்பினோம்.
திரும்பி வரும் போழுது விக்கி என்ற பெண்மணியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சுமார் 44 நாடுகள் பயணம் செய்ததை பற்றி குறிப்பிட்டார். ,இப்பொழுதும் நேபால் செல்வதாக சொன்னார். அவர் ஒரு பள்ளிக்கூட ஆலோசகராக வேலை செயகிறார்.2008 யில் பிறந்த குழந்தைகள் சற்றே அதிகமாக பிரச்சனைகள் உண்டாவதாக கூறினார். அந்த வருடம் அமெரிக்காவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. பொருளாதார விடயங்கள் குழந்தைகளை பாதிப்பது ஒரு புதிய தகவல்.உலகின் பல நாடுகள் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அமெரிக்கா மற்றும் மற்ற கலாச்சார வித்யாசங்களை பற்றி சொல்ல சொன்னார் , என்னால் உடனே அதை பற்றி பேசமுடியவில்லை , சில கருத்துகள் சொன்னேன் முக்கியமாக நன்றி சொல்லும் குணங்கள் , தனிமை விரும்பும் கலாச்சாரம் , வித்தியாசம் இன்றி பழகும் குணங்கள் மற்றவருக்கு தொழிலில் உதவும் பண்பு ஆகிவற்றை குறிப்பிட்டேன்.ஆனால் அதை பற்றி ஒரு தனியாக தகவல் சேர்த்து ஒரு blog எழுதலாம். பின்பு அவரிடம் விடை பெற்று கொண்டு நானும் அன்கிட் வீட்டிற்கு வந்தோம். முதல் தடவையாக ஒரு அமெரிக்கா விருந்தாளி உபசரிப்பை நேசிக்கா தங்கும் விடுதி தந்த அனுபத்தை சுமந்து அறை திரும்பினோம்.
ஜூலை 3 2016
ஹெர்மன் கிரீக் பெருநடை(Hermann creek )
அமெரிக்கா சுதந்திர வார விடுமுறை பயணம் , இந்த விடுமுறை நாளில் sfo செல்வதாக தான் திட்டம் ஆனால் கடைசி நேரத்தில் கார்த்திக் project தேடும் கவலையில் வரவில்லை என்று சொல்லிவிட்டார் . அதனால் கடைசி நேரத்தில் இந்த பெருநடை திட்டத்தில் போகலாம் என முடிவெடுத்தேன். இது ஒரு பெரும் குழு மற்றும் தேர்ந்த hiking குழு என்பதால் பெருநடை போக பல பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. அதனால் நான் சனிக்கிழமை வாங்கி கொண்டு தயார் ஆனேன்.காலை 7 மணிக்கு புறப்பட்டு gateway park & ride ஒரு Trimet மெட்ரோ ரயில் நிலைய கார் நிறுத்தும் இடம் அங்கு சென்று குழுவை சந்திதேன். அங்கு மேரி வொகெல் என்ற குழு தலைவி சந்தித்தோம் அங்கு அவர் பொறுப்பு துறப்பு காகிதத்தில் கையெழுத்து பெற்று கொண்டு இரண்டு கார்களில் புறப்பட்டோம். நான் Don மற்றும் மார்ட்டின் மட்டும் லைலா என்ற ஜெர்மனியில் இருந்து வந்த ஒரு சீன பெண்ணுடன் மார்டினியுடைய sebaru outlander பயணித்தோம், ஹெர்மன் சிற்றோடை cascade locks என்ற சிறு ஊர் பக்கத்தில் உள்ள பல மலைப்பாதைகள் கொண்ட சிறு நகரம். இந்த நகரத்தில் தான் bridge of gods என்கின்ற பாலம் வாஷிங்டன் மாநிலத்தை ஒரேகோன் மாநிலத்துடன் கொலம்பியா ஆற்றை கடந்து இணைக்கிறது. இந்த நகரம் மற்றும் இந்த பாலம் pacific crust trail பெரும்நடை பாதையில் முக்கியமான இடம், PCT சுமார் 2650 மைல் தொலைவு கொண்ட மெக்ஸிகோவில் இருந்து கனடா வரை செல்லும் ஒரு காண் வழி பாதை. இந்த பயணத்தை சில இயற்கை ஆர்வலர்கள் மேற்கொள்வர் இந்த பயணத்தை பற்றி தெரிந்து கொள்ள Resse witherspoon நடித்த The wild என்ற படத்தை பார்க்கலாம்.cascade locks போர்ட்லாண்டில் இருந்து கிழக்கே உள்ளது. கார் பயணத்தில் பேசி கொண்டு பயணம் தொடர்ந்தது. பல உலக நடப்புகளும் முக்கியமாக Euroexit பற்றி பேச முடிந்தது. ஒரு நாள் உலகம் ஒரு நாடாக மாறும் என்ற நம்பிக்கை கொடுத்த EU குழு. அதில் இருந்து பிரித்தானிய பிரிவது அந்த கனவை கலைக்கும் ஒரு அடையாளமாக உள்ளது என குறிப்பிட்டேன்.
பின்பு பெருநடையின் தொடங்கும் இடத்திற்கு வந்தோம், எங்கள் குழு தலைவி.மேரி வொகெல் ஒரு சுற்றுச்சுழல் ஆய்வாளர் அதனால் நாங்கள் மேற்கொள்ளும் ஒரு நல்ல சுற்றுசூழல் உகந்த செயலை ஒவ்வொருவரும் சொல்ல சொன்னார் , நான் இந்தியாவில் கார் பயன் படுத்தாதை குறிப்பிட்டேன் மற்றும் பிளாஸ்டிக் பை முடிந்த அளவு குறைக்கும் என் செயலை சொன்னேன். பின்பு பாதைக்கு செல்லும் முன் ஒரு சப்பாத்தில் (shoes ) ஒட்டியிருக்கும் பிற விதைகளை துடைத்துவிட்டு காட்டிற்கு உள்ளே சென்றோம். இது காடு பிற தாவரங்களால் மாசு படுவதை தடுக்கும். பின்பு மெதுவாக பயணம் தொடர்ந்தது காட்டில் உள்ள மரங்கள்,செடிகள் ,பூக்கள் அதன் பெயர்கள், விளக்கி சொல்லிக்கொண்டு பயணம் தொடர்ந்தது
தடியான பட்டைகள் கொண்ட douglas fur மரம் ,Hemlock மரம் , spruce corn அணில்கள் விரும்பியுண்ணும் கூம்பு காய்கள். மற்றும் எந்த பழங்களை காடுகளில் உண்ணலாம் அவை விஷம் என்று சொன்னார் மிக சிவந்த பளபளப்பாக உள்ள சிவப்பு பழங்கள் உண்ண கூடாது என்று சொன்னார். பின்பு ஊதா வண்ண oregon grapes என்று அழைக்கப்படும் பெர்ரி பழங்கள் என்று ஒரு அமெரிக்கா காடுகளின் பற்றிய சில விடயங்கள் தெரிந்தது . பின்பு காளான்கள் எப்படி விழுந்த மரங்களை அரித்து அவைகளை மக்க செய்து மண்ணுக்கு உரமாகின்றன என்று விவரித்தார்.



பின்பு உணவு இடைவேளையில் நான் வெளிய சாப்பிடுவோம் என்று சொல்லியிருந்தால் உணவு எடுத்து செல்லவில்லை. கொண்டு சென்றிருந்த பாதாம் மற்றும் பழத்தை சாப்பிடும் போழுது மேரி அவர்கள் அவர் கொண்டு வந்த கிரீக் உணவு(பட்டாணி கேரட்,இலையில் சுற்றப்பட்ட உணவு) பகிர்ந்து கொண்டார் எனக்கு பசி எடுத்ததால் வாங்கி சாப்பிட்டேன், மற்றவர் யாரும் எடுக்கவில்லை. அமெரிக்கா கலாச்சாரத்தில் அடுத்தவர் உணவை உண்ணும் பழக்கம் இல்லை போல. பின்பு உணவுக்கு பின் பயணம் தொடர்ந்து ஹெர்மன் அருவியை அடைந்தோம் . சென்ற பொழுது நிதானமாக சென்றதால் குழுவில் இருந்த மற்றவர்கள் முன்னே செல்ல ஆரம்பித்து விட்டனர்.அதனால் திரும்புவது 2 1/2 மணி நேரத்தில் முடிந்தது.பிறகு மலை உணவை அங்கு "bridge of gods" பார்க்கும்படி உள்ள bridge view உணவகத்தில் நான் ஒரு Hood ஆற்று நீரில் தயாரிக்க பட்ட உள்ளூர் பீர் மற்றும் ஒரு கோழி பர்கர் சாப்பிட்டேன். பின்பு நாங்கள் ஊர் திரும்பினோம்.
ஜூலை 4 2016
இறைவன் இடம் மலை பெருநடை(Neahkainie mountain )
நீயாகைநீ மலை seaside அருகே பசிபிக் பெருங்கடலை நோக்கி யுள்ள
ஒரு மலை. இந்திய பழங்குடியினர் மொழியில் இந்த மலையின் பெயர் இறைவன் தங்கும் இடம். நான் ஒரு பெருநடை சென்றேன் என்றவுடன் கோகுல்ராஜ் நாமும் செல்லலாமா என்று கேட்ட பொழுது நான் செரி சென்றேன் முன்பே இந்த இடத்தை பற்றி கோகுல்ராஜ் சொன்னதால் நாங்கள் காலை எட்டேமுக்கால் கிளம்பினோம் .
குழுவில் கார்த்திக் கோகுல்ராஜ், மற்றும் கார்த்திக் அறை நண்பர்.
பின்பு வழியில் கார்த்திக் காருக்கு காஸ் போடவேண்டும் என்பதால் seaside நான் சென்றால் போடும் ஒரு உள்ளூர் கடையில் போட்டுவிட்டு அங்கு இலவசமாக காபி தந்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.
அந்த மலைக்கு தெற்கு பகுதியில் ஒன்றும் வடக்கு பகுதியில் ஒன்றும் உள்ளது. முதலில் தெற்கு பகுதியில் US 101 நெடுஞ்சாலை இருந்து புறப்படும் ஒரு சிறு பாதையில் பயணத்தை தொடங்கினோம். பனிக்காலங்களில் செடிகள் வளர்ந்ததால் வழியை அப்பொழுது தான் திருத்திக்கொண்டிருந்தனர். செடிகள் வெட்டிய வாசம் அப்பொழுதும் இருந்தது. நாங்கள் பொறுமையாக என்ற வழியில் என் கண்ணில் சிறிய கருப்பு நிற பாம்பை கண்டேன். பின்பு வழியில் தொடர்ந்தால் இன்னொன்று பிறகு சிறு அடிகள் எடுத்து வைத்து சென்றால் கார்த்திக் மற்றும் கோகுல் பாம்புகளை பார்த்தனர், இதற்கு மேல் செல்வது சரியில்லை என திரும்பிவிட்டோம். பின்பு வடக்கு வழியாக செல்லலாம் என சென்று அங்கு உள்ளே கார் நிறுத்த மற்றும் செல்ல பாதை அமைத்திருந்தனர். பின்பு அங்கிருந்து திரும்பவும் பயணத்தை தொடங்கினோம். நம் மக்களுடன் செல்வது ஒரு வகை மகிழ்ச்சி , அரட்டை மற்றும் கேலி செய்து கொண்டு பயணம். தனியாக பயணிக்கும் எனக்கு எது ஒரு நல்ல அனுபவம். நான் இவர்கள் நடப்பார்களா என்று பயந்தேன் ஆனால் மொத்த தூரம் 8 மைல் எல்லோரும் சற்றே எளிமையாக கடந்தனர். பின்பு மலையுச்சிக்கு சென்று அங்கிருந்து கடலை காண்பது மிக இனிமையாக இருந்தது. நீல ஆழி(கடலுக்கு மட்டும் தமிழில் உள்ள சொற்கள் 60) ஒரு பேர் அமைதியுடன் இருந்தது அதன் எல்லைகள் கண்கள் தேடியவரை காணவில்லை.

அரை மணி நேரம் மலையுச்சியில் இருந்து இயற்கை ரசித்துவிட்டு திரும்பினோம். எனக்கு மாலை பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தரவேண்டியிருந்ததால் அங்கேயே உணவு உண்ணாமல் hillsboro பக்கத்தில் உள்ள விவசாய ஊர் north plains வந்து ஒரு Rogue pub கிராமப்புற மக்கள் கூடும்/குடிக்கும் இடம். கோகுல் பள்ளிக்கூட விடுமுறை விட்ட பிள்ளை போல வீட்டைவிட்டு வருவதில் அவ்வளவு மகிழ்ச்சி. நாங்கள் பீர் மற்றும் உணவு உண்டுவிட்டு அன்று விடு திரும்பினோம்.
ஜூலை 10 2016 வறண்ட
சிற்றோடை அருவி பெருநடை
காலை 10 மணிக்கு ஒரு பெருநடை
புறப்பட gateway park and ride சென்று காரை நிறுத்துவிட்டு அவசரமாக சிறுநீர்கழிக்க வேண்டியிருந்ததால் எதிரில் உள்ள Fredmayer சென்று கழித்துவிட்டு ஸ்டார்பக்ஸ்யில் ஒரு காபி வாங்கி கொண்டு திரும்பி வந்த பொழுது
அங்கு mazama ஹிகிங்குழு குழிமியிருந்தனர். சுமார் பனிரெண்டு பேர் முன்று காரில் புறப்பட்டோம். கார் பயணத்தில் கார்லா
என்கின்ற பெண்மணியுடன் பேசியப்பொழுது அவர் பத்திரிகையாளராக வேலை செய்து ஒய்வு
பெற்றவர். போர்ட்லன்ட் நகரின் தெருவில் homeless மக்கள் தங்குவதால் ஏற்படும் சீர்கேடுகள்
விவரித்தார். தெருக்கள் குப்பைகளாக இருக்கும் பரிச்சனைகளை விவரித்தார். போர்ட்லன்ட் நகரில் விடு இல்லாதவர்கள் கூடாரம் அடித்து தங்க
மேயர் அனுமதித்துள்ளார்,அதனால் பல பூங்காக்களில், பாலம் அடியில் போர்ட்லன்ட்
நகரில் கூடாரங்களை காணலாம்.பின்பு பேச்சு இப்பொழுது புதிய ஸ்மார்ட்போன் கலாச்சாரம் உறவுகள் இருக்கும்பொழுது ஃபோன் திரையை முறைக்கும் பழக்கத்தை சாடினார்.
இந்த பிரச்சனையை நான் சந்திக்கும் பலர் வருத்தப்பட்டு தெரிவித்தனர். பிறகு அவர்கள் முன்று பெரும் ஆங்கிலத்தில் கதைத்தது புரியவில்லை.அவர்கள் பேசிய
விடயத்தின் சாராம்சம் புரிந்தது ஆனால் முற்றும் புரியவில்லை. அவர்கள் காரை
ஒட்டிக்கொண்டு பேசியதால் வாகனத்தின் சத்தமும் அவர்களின் ஒலியும் குறைவாக
இருந்ததும் மற்றும் ஆங்கிலம் எனக்கு தெரியாததும் காரணமாக இருக்கலாம்.
குழு
தலைவர் ஜிம் ஷெல்பி இருபது வருட அனுபவம் கொண்டவர் ,வயதானவர் ஆதலால் பயணம்
சற்று மெதுவாக தொடங்கியது. என்னுடைய பயணத்தின் நோக்கம் மக்களுடன் பேசுவது. அதனால்
என்னுடன் வந்த டாம் என்பவருடன் பேசிக்கொண்டு வந்தேன் அவரு வேலை செய்யும் இடம் இந்த மலை பாதையில் முன்பு வந்ததுண்டா என்ற சாதாரண பேச்சுகள். எங்கள்
குழுவில் எல்லாரும் நடுத்தர வயதானவர்கள். ஒரு பெண் தவிர அவள் பெயர் Love (ஆமாம்
பெயரே காதல் தான்!). இப்பொழுது தான் கல்லூரி முடித்துவிட்டு போர்ட்லன்ட் நகர்ப்புற திட்டமிடும் அலுவலகத்தில் வேலை சேர்ந்ததாக சொன்னாள். நான்
வந்த கார் ஒட்டிக்கொண்டு வந்த நபர் இருவர் பேசிகொண்டிருந்தால் அவர் உள்ளே நுழைந்து பேச்சை மாற்றிவிடுவார்.
அதனால் பேச முடியவில்லை. பின்பு அமைதியாக இயற்கையை ரசித்து கொண்டு நடந்தேன்.
மற்றபடி சம்பராயிதமான பேச்சுகளுடன் அருவியை அடைந்தோம். இந்த மலை பாதை
அமெரிக்காவின் மிக நீண்ட pacific crest trail காட்டுப்பாதை
ஒரு சிறு பகுதி இந்த அருவிக்கு செல்லும் பாதை. அந்த
பாதையை கண்டது ஒரு மகிழ்ச்சி.
நான்
பிரட் ஆம்லெட் எடுத்து சென்றிருந்ததை உண்டேன், அருவியின்
அருகில் உணவு உண்டது ஒரு புது அனுபவம். உணவை பங்கிட்டு உண்ணும் கலாச்சாரம் இல்லாததால் தனியே உண்ண வேண்டிய நிலைமை .அந்த நீரோடையின் ஒலியும் நடந்து வந்த
களைப்பும்அந்த சாதாரண உணவை தேவாமரதம் என ருசித்தது.. லவ் அந்த பெண் சிறு வயதிற்கே உரிய ஒரு துணிச்சலும் ஆர்வமும் பல சிறு பாறைகளையும்
மரங்களில் ஏறி அருவியை ரசித்தாள். அவள் இயற்கை அழகை ரசிப்பதை நாம் பார்த்து ரசிப்பதும் ஒரு நல்ல அனுபவம்.
அருவி அருகில் காத்திருந்த பொழுது இரண்டு இந்திய
மாணவர்கள்(பாகிஸ்தான் அல்லது அரபு தேசமாகவும் ) இரு வெள்ளை கல்லூரி பெண்களுடன்
வந்திருந்தனர். சற்றே அழுக்காறு (பொறாமை)மற்றும் ஏக்கம் மனதில் தோன்றியது. ஒழுங்கா கல்லூரி
படித்துவிட்டு M.S படித்திருக்கலாம் என மனசு நினைத்தது.
பின்பு
அங்கிருந்து புறப்பட்டோம் அப்பொழுது குழுவில் வந்த பெண்மணி பார்த்தேன் அவருடைய உடை tshirt மற்றும்
பருத்தி tracks pant ஓட்டைகள் மற்றும் பல வருடங்கள்
பயன்படுத்தியமையால் அவை நிறம் குறைந்து அமெரிக்க
தனத்திற்கு ஒவ்வாத இருந்தார். அவர் நிறைய பேசமாட்டார் என்று தான் நான் என்னினேன்
ஆனால் என்னை பாதித்த மக்களில் அவர் ஒருவர். முதல் ஆச்சிரியம் அவர் ஒரு மேல்நிலை
பள்ளி சமூக அறிவியல் ( grade 8- 12) அவர் பெயர் Heather . நான் பல பள்ளிகளில் ஆசிரியர் பணி செய்ததாக
சொன்னார் நான் ஏன்? என்ற பொழுது அவர் அமெரிக்காவில் ஆவணமற்ற
சிறுவர்கள்(சட்டவிரோத குடியேறிகளின் குழந்தைகள்) பள்ளிக்கு அமெரிக்க அரசு சில வருடங்கள் நிதிஉதவி
செய்யும் பின்பு நிறுத்திவிடும் அதனால் வேலை விட்டு வேறு பள்ளிகூடம் செல்வது ஒரு
காரணமாக சொன்னார். நான் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என கேட்ட
பொழுது ஒரு 5 வருட ஆசிரயருக்கு40,000$ வரை ஒரேகான் மாநிலத்தில்
கிடைக்கும் Texas
போன்ற மாநிலங்களில் 35000$ வரை தான் கிடைக்கும்
என்றார். இங்கு H1B வேலை செய்ய வரும் சாதாரண பொறியாளருக்கு 75000$ தரப்படுகிறது. அதுவே
பத்தவில்லை என்று இந்தியாவில் வந்த சம்பாதிக்கும் மக்கள் புலம்புவது எவ்வளவு முட்டாள்தனமானது,
சரி வேலை எளிமை என்றால் இல்லவே இல்லை என்றார் .ஒரு ஆசிரியர்
விடுமுறை என்ற பேச்சுக்கு இடமில்லை பாடம் நடத்துவதை தவிர பிள்ளைகள் பேப்பர்
திருத்துவது சுமார் முன்னுறு பக்கம் பேப்பர் திருத்த வேண்டியிருக்கும் .
எப்பொழுதும் ஒரு ஆசிரியர் பிள்ளைகள் மற்றும் அவர்களின் எண்ணங்களுடன் தான் வாழ வேண்டியுள்ளது(அவர் கைகளால் தலையை சுழல்வது போல்
காட்டினார்). பிள்ளைகள் ஆசிரியரை மதிக்கும்
பழக்கமும் இல்லை, நூறு வருடங்கள் முன் வேண்டும் என்றால்
ஆசிரியர் அடிக்க முடியும். இப்பொழுது தவறு செய்யும் சிறுவர்களை வகுப்பறையை விட்டு
போக சொல்ல முடியாது. மாணவர் ஆசிரியரை தன தந்தை சம்பளத்திற்கு வேலை வைத்திற்கும்
ஒரு தொழிலாளர் என்ற எண்ணம் தான் சிறுவர்களிடம் உள்ளதாக
சொன்னார்.மற்றும் ஒரு கறுப்பின/ஹிஸ்பானிய மாணவனை அனுப்பினால் ஆசிரியர்கள் மனதில்
நிறவெறி தான் காரணமாக கூட இருக்கலாம், இதே
தண்டனை வெள்ளை இன மாணவர்களுக்கு அவர் தராமல் தவிர்க்கலாம் என ஒரேகான் கல்வித்துறை பிள்ளைகளை தண்டிக்க தடை
விதித்திருக்கிறது. இதனால் ஒரு மாணவன் தவறு செய்தால் மற்ற பிள்ளைகளின் படிப்பு
பாதிக்கும்.
அமரிக்க 35 % விழுக்காடு மாணவர்/மாணவிகள்
தான் உயர்கல்விக்கு செல்கின்றனர்.
நான்
கூகிள் செய்த பொழுது 65% காட்டியது.35% விழுக்காடு
என்பது பொறியியல்/மருத்துவம்/சட்டம் போன்ற
தொழில்முறை கல்வியாக இருக்கலாம். இத்தகைய
மேல் படிப்பு இல்லாத காரணங்களால் தான் நாம் இங்கு வந்து வேலை செய்ய
முடிகிறது.
அவரிடம்
தனியார் பள்ளிகளில் வேலைக்கு செல்லலாம் என்ற பொழுது
பணக்கார பிள்ளைகளை சொல்லிக்கொடுக்க பல பேர்
உள்ளனர் நானும் அதை செய்ய விரும்பவில்லை என்றார். ஒரு
முதலளித்ததுவ நாட்டில் ஒரு சோசியலிச எண்ணங்கள் .அமெரிக்காவிலும் சோசியலிச எண்ணங்களுக்கு இடம் உள்ளது என
உணர்த்தியது. சில வருடங்களுக்கு பிறகு சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஆசிரியராக செல்ல விரும்பவதாக சொன்னார்.
அமெரிக்காவின்
ஏழைகள் சிறு வயதில் இறப்பதும் , பலர்சிறையில் தான் இருக்கிறார்கள் என்றார். உலகில் ஜனத்தொகை விழுக்காட்டின் படிஅதிகமாக மக்கள் சிறையில் இருக்கும்
நாடு அமெரிக்கா.Ivy
league போன்ற
பெரும் பல்கலைகழகங்களில் ஏழை மாணவர்கள் சேரும் அளவு 1% தான் இருக்கும்.அமெரிக்காவில் இடஒதுக்கிடு
கிடையாது ஆனால் கருப்பு மற்றும் மெக்சிகன் இன மக்களுக்கு
புள்ளிகள் வழங்கப்படும் ஆனால் அவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதால்
அவர்களால் சேரமுடியவில்லை என்றார். ivy league கல்லூரிகளில்
சேர வேண்டும் என்றால் பணக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது விளையாட்டில் மிக
சிறந்து இருக்கவேண்டும் எனறு நாங்கள் பேசுவதை கேட்டுவிட்டு மற்றொரு பெண்மணி
கருத்து சொன்னார். ஆனால் அமெரிக்க கற்பனை வளம் அதிகமாக இருப்பதன்பின்னணி பற்றி
கேட்ட பொழுது அமெரிக்கா ஒரு புதிய நாடு(350 வருடங்கள்) தான் உள்ளது இதை
இப்படித்தான் செய வேண்டும் என்ற ஒரு வரைமுறை கிடையாது அதனால் அந்த சுதந்திர தன்மை
அவர்களுக்கு அந்த கற்பனை திறமையை வளர்க்க உதவுகிறது.இந்திய போன்ற நாடுகள் பல ஆண்டுகள் ஒரு
வழிமுறையை உருவாக்கி விட்டது அதனால் நாம் குழுவாக ஒரே எண்ணத்துடன் வாழ பழகிவிட்டோம் (Thinking inside the box).
அமெரிக்காவில் எதையும் விளையாட்டு(casual ) தனமாக கொள்ளும் காரணம், வெள்ளையர்கள் அமெரிக்காவில் குடியேறிய பொழுது கேட்பவர்களுக்கு எல்லாம் வளமையான நிலங்கள் 50 -100 ஏக்கர் என்று கொடுத்ததால் மக்கள் வாழ்க்கையை சாதாரணமாக போராட்டங்கள் அற்றதாக உள்ளது ,அந்த கலாச்சாரம் தான் இதற்கு முல காரணமே என்றார்.
இந்த
வாரத்தில் தான் அமெரிக்காவில் மிசிகன் மற்றும் லூசியானாவில் இரண்டு கறுப்பின
மக்கள் போலீஸ்சாரால் சுடப்பட்டனர் அதற்கு பதிலடியாக டல்லாசில் (Dallas ) ஒரு கறுப்பின முன்னால் ராணுவத்தில் சேவை செய்த அவர் sniper துப்பாக்கி
கொண்டு “black lives matter ” என்ற அமைதி போரட்டத்திற்கு பாதுகாப்பு
கொடுத்த 5 வெள்ளை இன காவலாளிகளை சுட்டு கொன்றான்.
அவராக
அதை குறுப்பிட்டு அமெரிக்காவின் முதன்மை பரிசினை அதன் நிறவெறி. அமெரிக்கர்கள்
ஒவ்வொரு முறை நிற பரிசினை வரும் பொழுதும் இந்த மக்கள் பிரிந்து சென்றனர். 1965 வரை அமெரிக்காவில் புறநகர்
கிடையாது, 1960 கருப்பினதவற்கு வெள்ளையர்களுக்கு இணையாக வாக்கு உரிமை மற்றும் கறுப்பின மற்றும் வெள்ளை இன தனி
பள்ளிக்கூடங்கள் இணைக்க முயன்ற பொழுது வெள்ளை இன மக்கள் நகரங்களை விட்டு கோடக்கணக்கில் பணம் செலவு செய்து புறநகர்களை உருவாகினார்கள்.என்
எனில் கறுப்பின மக்களுடன் தம் மக்கள் சேரகூடாது என்பதற்காக. இந்த புறநகர்
காலச்சாரம் தான் கார் சார்ந்த வாழ்க்கைக்கு அடிகொலியது.இன்றும் அத்தகைய பாகுபாடு
காக்கபடுகிறது பள்ளிக்கூட மாவட்டங்கள் முலமாக.ஒரு குடியிருப்பில் உள்ளவர் அடுத்த
குடியிருப்பில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு செல்லமுடியாது.இதன்வெள்ளையர்கள் வாழும் பள்ளியில் கறுப்பர்கள் சேர்வது மிக சொற்பம்.
இன
மற்றும் பிரச்சனைகள் அமெரிக்காவிற்கு புதிது அல்ல, முதலில் இங்கிலாந்தில் இருந்து வெள்ளையர்கள் கிழக்கு மாநிலங்களில்
குடியேறினர்(நியூயார்க்,விற்ஜினியா )
பின்பு
ஜெர்மானியர்கள் மற்றும் இதர ஏழை ஐரோப்பியர்கள் வந்த பொழுது. இங்கிலாந்து
வெள்ளையர்கள் இதர ஐரோப்பிய மக்களை இன வெறி காட்டிய பொழுது அவர்கள் மேற்கு நோக்கி
பயணித்தனர் அப்படிதான் ஒரேகான், வாஷிங்டன். கலிபோர்னியா ஆகிய மேற்கு மாநிலங்கள் உருவாகின’. ஒவ்வொரு முறை இன மற்றும் நிற பிரிச்சனை வரும் பொழுது
மக்கள்
பிரிந்து சென்றனர், அமெரிக்க மிக பெரிய நிலம் ஆனதால் அது சாத்தியமானது.அதனால் அவர்கள் ஒன்று
சேரவேண்டிய வாயிப்பு ஏற்படவில்லை , எல்லோரும் ஒரு நாட்டில்
தனி குழுவாக வாழ்கின்றனர், அதனால் தான் கறுப்பின, மெக்சிக்கன் மக்கள் தனி குடியிருப்புகளில் வெள்ளையர் தனி குடியிருப்புகளில்
வாழ்கின்றனர்.
இந்தியாவில்
இன பரிசினை,ஜாதி மத கலவரங்கள் ஏற்பட்டாலும் ஒன்றி வாழவேண்டியுள்ளது. வெட்டி கொண்டும்
ஒட்டிக்கொண்டும் இந்துகளும் முஸ்லிம்களும் ஒன்றி
வாழ்கின்றனர்அவர்களால் வேறு இடத்திற்கு செல்ல இடமில்லை . அதனால் தான் இந்திய பல பிரிவினைகள் இருந்தாலும் ஓடி செல்ல முடியாத
காரணத்தால் நாம் ஒன்றி வாழ்கிறோம் அதுவும் நம்முடைய ஒற்றுமை உணர்வுக்கு
காரணம் என்று தான்தோன்றுகிறது.
அமெரிக்காவின்
வளர்ச்சிக்கு காரணம் எதுவென்று கேட்ட பொழுது அதன் உள்கட்டமைப்பு
மற்றும் பாதுகாப்பு முதல் காரணம், பின்பு பல கலாச்சாரங்கள்
ஒன்று இணைந்து செயல்படுதல்(வாழ்தல் அல்ல) அதன் முன்னேற்றம் காரணம். அதன்
உள்கட்டமைப்பு உலகின் உள்ள சிறந்த அறிவாளிகளை தன
வசம் வசியசெய்கிறது.என்று
அந்த உள்கட்டமைப்பு இல்லாமல் போக வாய்ப்பு ஏற்பட்டால் அது அமெரிக்காவின்
விழ்ச்சிக்கு காரணம் ஆகலாம் என சொன்னார்.
இதை பேச்சு சுமார் 2 மணி நேரம் இருக்கும் இறங்கி வந்த பாதை, வந்த வழி எதுவும் மனதில் இல்லை, பேசிய பேச்சுகள் தான் மனதில் நிறைந்து இருந்தது.
வாஷிங்டன் கவுண்டி பொருட்காட்சி/சந்தை 30 சனி ஜூலை 2016
கார்த்திக்கை விமானநிலையத்தில் விட்டுவிட்டு அறைக்கு வந்து ஒய்வு எடுத்தபின் மாலை 6 மணிக்கு fair complex வாஷிங்டன் வருட வருடம் நடக்கும் சந்தைக்கு சென்றேன். மக்கள் திரள்திரளாக குருடியிருந்தனர். ஊர் சில நாட்களாக திருவிழா கோலம் பூண்டிருந்தது. cornell சாலை நெருக்கடி அடைந்து போக்குவரத்து பாதித்திருந்தது அதனால் நான் நடந்தே சென்றேன். அங்கு இருந்த கடைகளையும் உணவு விடுதியையும் பார்த்துக்கொண்டு நடந்தேன்.
தனியே ஒரு இடத்தில் இசையரங்கு நிகழ்ச்சி நடந்தது விலை 25$ என்பதால் செல்லாமல் சுற்றி வரும்பொழுது அங்கு மாலை சூரியன் மறையும் வேளையில் ஒரு இளம் பெண் ஒரு கன்றுடன் நடந்துவந்தாள், அமெரிக்கா மாடு மேய்க்கும் பெண்மணி.நில நிற ஜீன்ஸ் கன்ணனின் நில வண்ண டாப்ஸ் அணிந்து கரும் கன்றை நடை கொண்டுவந்தாள், அவள் மாட்டின் மீது கொண்டிருந்த அன்பு அவள் கண்களிலும் உணர முடிந்தது.
அந்த நினைவுடன் மாடுகள் கட்டிவைக்க பட்ட தொழுவத்தில் சிறுமி சந்திட்டேன் , அந்த கிராமத்து அப்பாவித்தனமும் அன்பும் கனிவும் நிறைந்த சிறுமியை சந்திதேன் அவள் மாடுகளை தன் சகோதரர்கள் என்று அறிமுகம் செய்து வைத்தாள்.காலையில் பள்ளிக்கூடம் சென்று மாலையில் மாடுகளை பார்த்துக்கொள்கிறாள். ஆவலுடன் பேசும் பொழுது அவளை ஆர தழுவி அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று மனசு துடித்தது. அமெரிக்கா ஒரு நாடு என்பதற்கு இது ஒரு உதாரணம் இன்னும் கள்ளங்கபடம் அற்ற மக்களை சந்திக்கலாம்.
பின்பு பன்னிகள் ஏலம் விடும் இடத்தையும் ஆடுகள் தர ஆய்வு செய்யும் இடங்களை கண்டேன்.
கிராமத்து மக்கள் RV களிலும் டிரக் வந்து இங்கு மூன்று நாள் தங்கி இந்த சந்தையை நடத்துகின்றனர்.மிருகங்களுடன் வாழ்வதும் அதன் அன்பில் திளைப்பதும் ஒரு வரம் அதை நகர மக்கள் நாம் இழக்கிறோம்.
31 ஞாயிறு ஜூலை 2016 - சொர்க்கபூங்கா (paradise park)
இது கார்த்திக்கு அட்லாண்டா சென்ற பின் அடுத்த நாள் சென்ற பெரு நடை. இது ஹூட் மலை கிரிவலம் சுமார் 12 மைல் சுற்று பாதை. M வடிவம் போன்று மலை ஏற்றமும் இரக்கமும் உள்ள சற்றே கடுமையான பயணம். டிரிலியம் விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றது.அங்கு மைகேல் ஏன்ற சுமார் 60 வயது இருக்கும்(2005 ஒய்வு பெற்றவர்) வாலிபரை சந்தித்தேன். அந்த வயதில் அவருடைய உடல் தாங்கும் உறுதி பிரமிக்க வைத்தது. வழியெங்கும் சிற்றோடைகளும், காட்டுப்புக்கள் நிறைந்த பாதைகள். செவ்விதழ் பூக்களும்(Indian paint brush ) மஞ்சள் மொட்டுக்கள் விரித்த மலர்கள் கண்களுக்கு விருந்துபடைத்தன.ஹூட் மலையின் பல கோணங்களில் இருந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

புல்வெளியின் வழியாக மலைகளை பார்த்ததும். நடுவில் ஓடும் ஒரு சிற்றோடையை சப்பாத்துகளை கழட்டிவிட்டு வெறும் காலில் அந்த குளிர் நீர் ஓடையை கடந்தேன்.பின்பு இரண்டு மணிநேரம் பிறகு ஒரு மலைமேல் உள்ள ஒரு சமவெளி பாதையை அடைந்தோம்.அங்கு தர்பூசணியை பிளந்தது போல ஒரு பெரும் பாறை அருகில் அமர்ந்து மதிய உணவு உண்டோம்.நான் அந்த ஒற்றை பாதை அருகில் இருந்த ஒரு வெள்ளை ஓக் மர நிழலில் கொண்டு சென்ற மதிய உணவு பிரட் மற்றும் ஓம்லெட் சாப்பிட்டேன். பின்பு மற்றொரு பாதை வழியாக எங்கள் பயணம் தொடர்ந்தது. அங்கு பாட்ரிசியா என்ற பெண்மணி விடாது எல்லோர் இடமும் பேசிக்கொண்டு வந்தார்.அவர் ஒரு சிறு ஊரில் இருந்து போர்ட்லேண்ட் நகரம் வந்து தங்கியுள்ளார்.என்னால் என் சிறு ஊரை விட்டு இங்கு வந்தது ஒரு பெரும்மாற்றம் உன்னால் எப்படி இந்தியாவில் மற்றும் அமெரிக்காவில் மாற்றி மாற்றி வாழ முடிகிறது என்று கேட்டார்.ஒரு தடவை மாறினால் தான் பிரச்சனை பல முறை நான் வந்ததால் என்னால் பழகிவிட்டேன் என்று சொன்னேன். சிறு ஊர் மக்கள் மேற்படிப்பு படிப்பது ஒரு வீண் செலவு என்று அவர் ஊரில் எண்ணங்களை சொன்னார். சிறு ஊரில் ஒவ்வொருவரை பற்றியும் ஒரு அபிப்ராயம் வைத்திருப்பர் அது ஒரு வகையில் பயன் தரும் ஒரு வகையில் ஒருவரை எளிதாக இவர் அப்படிதான் என்ற அபிப்ராயம் உருவாகும் என்றார்.
இந்த பயணம் ஒரு பெரும் தூரம் என்பதால் என்னால் அவ்வளவாக பேச முடியவில்லை. திரும்பும் பொழுது சோர்வு கொண்டதால் நடப்பதை பற்றியே மனம் எண்ணிக்கொண்டு வந்தது.
காலை 8 மணிக்கு தொடங்கிய பயணம் மலை 6.30 மணிக்கு நிறைவுற்றது.
ஆகஸ்ட் 13 கேப் ஹார்ன் மலைப்பயணம் (cape horn mountain )
கொலம்பியா ஆறு தான் வடக்கில் ஒரேகோன் மற்றும் வாஷிங்கடன் மாநிலங்களின் எல்லை.ஆற்றின் தென் பகுதி ஓரிகன் வடக்கு பகுதி வாசிங்டன்.அடுக்கு மலை(cascade mountain ) யின் பள்ளத்தாக்குக்கு ஊடாக கொலம்பியா ஆறு மேற்கு நோக்கி சென்று அஸ்டோரியா அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும்.
இரு கரைகளிலும் இயற்கையின் பச்சை வண்ணங்கள் போர்த்திய மலைகளும் , ஊசியிலை மரங்கள் நிறைந்த வனம். வாஷிங்டன் மாநிலத்தின் பக்கமுள்ள மலைதான் cape horn மலை. இதுவரை நான் சென்ற மலையேற்றங்கள் ஒரேகோன் மாநிலத்தில் , இதுவே முதல் முறை அடுத்த மாநிலத்திற்கு சென்று மலையேறியது. 11 பேர் கொண்ட சிறு குழு . பல கோணங்களில் கொலம்பியா ஆற்றை மலையில்இருந்து அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியது.
ஒரு பெண்மணி மிக பெரிய பையில் சுமார் 20 பவுண்ட் கொண்டு மலையேறினார் அவர் தம் உடலை 4 நாட்கள் மலைப்பயணித்திற்கு தயார் படுத்தினார். அவருக்கு சுமார் 60 வயதிருக்கும்.மலையேறும் மக்கள் 60-70 வயதினர் நிறைய பார்க்கமுடிகிறது.
அந்த மலையேற்றத்தில் சிண்டி என்கின்ற பெண்மணி UCSIS சுமார 500k டாலர் அமெரிக்காவின் தொழிலுக்கு முதலீடு செய்தால் green card ஆறு வருடங்களில்(எந்த நாட்டை பொறுத்தவர் ) கிடைக்கும் மற்றும் பணம் திரும்ப பெறலாம். அமெரிக்காவின் தொழிற்வளர்ச்சிக்கு முக்கியமாக கட்டுமான முதலீட்டுக்கு பயன் படுத்த படுகிறது. இவர் அந்த முதலீடு ஆலோசனை வழங்கும் அலுவலகத்தில் வேலை செயகிறார். மற்றும் அவர் 12 வருடம் ஜப்பானில் வாழ்ந்ததை குறிப்பிட்டார். நானும் 1 வருடம் வழிந்ததால் நாங்கள் சற்று நேரம் ஜப்பானின் வாழ்வியலை பேசிக்கொண்டோம்.
அது மற்றும் இன்றி ஒரு பத்திரிகையாளர், intel வேலை செய்யும் அலுவலரை சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது.
உணவை முடித்துக்கொண்டு திரும்பும் பொழுது ஒரு வயல்வெளி வெளியின் அருகே குதிரை ஒன்று உணவுக்காக காத்திருப்பதாகவும் உங்களிடம் ஆப்பிள் இருந்தால் கொடுங்கள் என்று ஒரு எதிரில் வந்த வழிப்போக்கர் சொன்னார், நாங்கள் எங்களிடம் இல்லையே என்று நினைத்து இருக்கும் உணவை எதை கொடுக்கலாம் என்று பேசிக்கொண்டு வரும்பொழுது அங்கு ஒரு பெரிய ஆப்பிள் மரத்தியிலிருந்து ஆப்பிள் கீழே விழுந்து வாசம் பரப்பிக்கொண்டிருந்தது. பின்பு தான் உணர்ந்தோம் வெளியுள்ளதால் குதிரை அந்த வாசத்திற்கு அங்கு வந்து வழிப்போக்கர்களை எடுத்து கொடுக்க காத்திருக்கிறது,
இன்னும் மனிதர்களை விலங்குகள் நம்புகின்றன , இயற்கை மனிதனை ஆறாம் அறிவுடன் படைத்தது பிற உயிரினங்களை காக்கும் பொறுப்புடன் படைத்திருக்கிறான் , நான் அந்த உயிர்னங்களின் நம்பிக்கையை காப்போம்.
மொத்தம் சுமார் 8 மைல் மலை பயணம் முடித்துக்கொண்டு திரும்பிய பொழுது மலை 3 மணியிருக்கும் . அன்று நல்ல வெயில் அதனால் உடல் சோர்வுயுற்று இருந்தது.
சேணம் மலை பயணம் அக்டோபர் 1
பல வாரங்களாக ஹிக்கிங் செல்லாமல் விப்ரோ ஓட்டம் பயிற்சியில் இருந்ததால் இந்த வாரம் செல்ல திட்டம் இருந்தது. meetup தேடியபொழுது சேணம் மலை - Saddle mountain செல்லும் புது குழு "Endomorphin Drip hiking and cycling club " இருந்து அழைப்பு வந்தது . போன முறை தனியே சென்ற சென்றபொழுது பொழுது டயர் ஓட்டை ஆனதால் உயரே மாற்றி திரும்பி வந்த அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது . இந்த முறை குழுவுடன் செல்லலாம் நல்லது என நினைத்து பதிவு செய்திருந்தேன். மேற்கு பக்கம் ஹில்ஸ்பரோ வழியாக செல்வதால் sunset transit center வருவதாக அவர்கள் குறிப்பிட்டுருந்ததால் அங்கு காத்திருந்தேன். ஆனால் யாரும் வராததால் நாம் தனியாகவே அங்கு செல்லலாம். அவர்கள் அங்கு வந்தால் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என புறப்பட்டேன். அன்று நல்ல மழை வழியெங்கும் மழையுடன் தான் பயணம். முதுவேனிற்காலம் ஆரம்பித்தால் புரட்டாசி -ஐப்பசி மாதம் மழை பெய்ய ஆர்மபித்துவிட்டது. வழியெங்கும் நீரின் ஈரத்துடன் பச்சை புல் வெளிகள் , எங்கும் வெயில் தளிர்த்து காற்றில் ஈரம். வழியில் எப்பொழுதும் இறங்கி உணவு அலல்து காபி வாங்கும் bakers கடையில் நிறுத்தி நீரும் வாழைப்பழமும் வாங்கி கொண்டு புறப்பட்டேன். US 26 இருந்து சேணம் மலை செல்லும் 7 மைல் பாதையில் திரும்பினேன். போன முறை இங்கு பஞ்சர் ஆனதால் மெதுவாக காரை மலைப்பாதையில் செலுத்தினேன். அத அமைதியுடன் காற்று மரத்தின் ஊடாக ஓசை எழுப்பி கொண்டிருந்தது. மெதுவாக பயணித்து ஹிக்கிங் தொடங்கும் இடத்திற்கு வந்த பொழுது. குழுவின் தலைவரும் இரு பெண்மணிகள் வந்திருந்தனர். அவர்களும் அந்த குழு தான் என தெரிந்த பொழுது ஒரு ஆச்சிரியம். குழு தலைவர் Severt பேசிய சில வினாடிகளில் தெரிந்து இது ஒரு வித்தியாசமான குழு என்று, எந்த ஒரு விதியை சொல்லவில்லை உடைகள் சரியாக உள்ளதா என்றும் விசாரிக்கவில்லை. அவர்கள் பேச்சும் குதூகலமும் ஒரு பயணிக்கும் மக்களின் குதூகலத்துடன் இருந்தனர்.சிறுது நேர காத்திருக்க பிறகு இன்னும் இருவர் வந்து சேர்ந்து கொண்டனர்.
அப்பொழுதும் குளிரும் தூறலும் இருந்தது. மலை ஏறும் பயணம் ஆரம்பித்தது. வழியெங்கும் பாதைகள் கற்களால் நிறைந்து. மற்றும் மழையால் மலைப்பாதை எங்கும் ஈரம். 1300 அடி உயரத்தில் இருந்து
3300 அடி செல்வதால் பயணம் சற்று கடினம். மலை எற எற குளிர் குறைந்தது, அதனால் மழை ஜாக்கெட் கழட்டிவிட்டு பயணம் தொடர்ந்தது. மலை ஏறும் பொழுது diana மற்றும் அவர் நண்பர் இருவரும் பிரியாமல் வந்தனர். ஒரு துள்ளலுடன் whitney என்கின்ற பெண்மணி வந்திருந்தார் , அவர் Arizona இருந்து Intel வந்திருந்ததாக சொன்னார்.மலை பாதை எங்கும் அவர் குதூகலத்துடன் எல்லோரும் இடமும் நன்றாக பேசிக்கொண்டு படங்கள் எடுத்து கொண்டு வந்தார். எந்த காட்சியிலும் , பூக்கள், பைன் மர காய்கள் என எல்லாவற்றையும் சேர்த்து கொண்டு வந்தார். மழைக்கு ஒரு சாதாரண பிளாஸ்டிக் உரை கொண்டு வந்து அணிந்து அது கிழிந்ததை பற்றி கவலையின்றி பயணித்தார்.

ஓர் இடத்தில மணல் சரிவாக இருந்தது அங்கு diana மற்றும் அவர் நண்பர் இறங்க கை கோடுத்த பொழுது அவர் "Your hands are strong " என்று சொன்னார்கள், மனதில் ஒரு மகிழ்ச்சி , சிறு வயதில் செய்த தோட்ட வேலைகளையும் , இப்பொழுது உழைக்கும் மற்றும் workout தந்த வலிமை கிடைத்த பாராட்டுக்கள். பின்பு பயணம் மலையை ஏற்றத்துடன் மேகங்களுக்கு நடுவில் நடந்தது. எங்கும் பனி போர்வை , 100 அடிக்கு மேல் எதுவும் தெரியவில்லை. அப்படையே தொடர்ந்து பயணம். மலை உச்சியில் முடிந்தது. எல்லோரும் களைப்பும் குளிரும் வாட்டியது. பசியில் எல்லோரும் அவர்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட ஆரம்பித்தோம்.


ஆனால் அப்பொழுது whitney தன்னுடன் கொண்டு வந்த energy bar சாப்பிட்டு கொண்டிருந்தார். எல்லோரையும் நோக்கி "I wish i have cooked food " என்ற பொழுது நான் என்னிடம் இருந்த omlet கொடுந்தேன். அவள் நன்றி சொல்லி ஒரு வாய் கடித்து பிறகு திரும்ப தந்தாள். அமெரிக்காவில் ஒருவர் உணவை நம்மிடம் கேட்பது மற்றும் கடித்த உணவை திரும்பி தருவது எல்லாம் புதுசு. நான் நினைத்து பார்த்த அமெரிக்கா வாழ்க்கை முறையம் இந்த அனுபவம் நமக்கு ஒரு புதிய பார்வை. whitney வழியேங்கும் நன்றி சொல்லிகொண்டு வந்தார். பின்பு பயணம் முடிந்து பார்க்கிங் இடத்திற்கு வந்த பொழுது நேரம் மூன்று இருக்கும். உணவு உண்டுவிட்டு செல்லலாம் என குழு தலைவர் Severt சொன்னபொழுது முதலில் வேண்டாம் என்றேன் , பிறகு எல்லோரும் செல்வதால் சாப்பிடலாம் என்று நானும் சென்றேன். வழியில் Mile18
என்ற உணவகம் சென்றோம். பழையகாலத்து தங்கும் விடுதி, நல்ல உபசரிப்புக்கு புகழ் பெற்ற உணவு விடுதி. diana மற்றும் அவர் நண்பர் இருவரும் ஒன்றாக சேர்ந்து Chilli soup வாங்கி அதை பங்கிட்டு சாப்பிட்டனர். அமெரிக்காவில் உணவை ஒரே தட்டில் சாப்பிடுவார்கள் என்பதே ஆச்சிரியம்! நான் அவர்களிடம் விசாரித்த பொழுது தாங்கள் நினைவு தெரிந்த நாட்கள் முதல் நண்பர்கள், இதுவும் karol அமெரிக்கா நண்பர் அமெரிக்கா படையில் 8 வருடங்கள் வேலை செய்து வந்த பின்பும் தொடரும் நட்பு. இருவருக்கும் திருமணம் முடிந்து இந்த நட்பு தொடர்கிறது. அமெரிக்காவிலும் தொடர் நட்புக்கு சாத்தியம், இங்கும் நட்பும் பாராட்ட படுகிறது , மதிக்க படுகிறது என்பது புரிந்தது.உலகம் முழுக்க அன்பின் தடம் என்றும் இருக்கிறது , நாம் பார்க்கும் முறையில் தான் வாழ்க்கை பிரிதிபலிக்கிறது. நான் என்னுடைய சிக்கன் பர்கர் சாப்பிட்டேன் , அங்கு Ernie ஃபிரிஸ் தந்து உபசரித்தார்.
Whitney desert சொல்லலாமா என்று கேட்டு சொல்லி அதற்கு தான் பணம் கட்டுவதாக சொன்னார், நான் ஒரு சிறிய முட்டை ஆம்லெட் தந்தற்கு அது அதிகம் , அதுவும் இன்றி அதை ஒரு தட்டில் நாங்கள் இருவரும் ஒரு spoon கொண்டு சாப்பிட வலியுறுத்தினார்.நான் காட்டும் ஒரு சின்ன அன்பின் வெளிப்பாடு ஒரு பெருபி அன்பாக வந்தது. அதுவும் ஒரு அழகிய பெண் திருமணம் ஆனவள் , அவளின் அந்த பசிக்கு உணவை பகிர்ந்ததற்கு அவள் திரும்பி செய்த செயல் ஒரு வரம். உலகில் அன்பின் வெளிப்பாடு ஒரு அனுபவம் இந்த நிகழ்ச்சி வாழ்வில் என்று நினைத்தாலும் இனிக்கும்.


ஒரு வரமாக மனதில் அந்த நினைவு ஓடிக்கொண்டே இருந்தது , அதன் வெளிப்பாடு தான் மேலே உள்ள வாக்கியம். என் மனதின் ஓரத்தில் நானும் ஒரு பிள்ளையாக அவளுக்கு என்னுடைய மாரு ஜென்மத்தில் பிறந்தால் அவளுக்கு பிள்ளையாக அமெரிக்காவில் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதை சொல்லாமல் இருப்பது தான் அந்த எண்ணத்தின் பலம் எந நான் சொல்லவில்லை.உலகில் தன்னை முன்பின் தெரியத்தவனுடன் உணவை ஒரு தட்டில் பங்கிட்டுக்கொள்ள ஓர் பேரன்பும் , உலகத்தை நட்புணர்வுடன் காணும் மெய்யறிவு வேண்டும். அந்த உணர்வு அவ்வளவு எளிதில் வராது அது Whitney வளர்த்த அவர் தந்தையும் தாயின் வளர்ப்பின் பெருமை குறிக்கும். உலகில் அன்பை தவிர சிறந்த உறவு கொள்ளும் வழி எதுவும் இல்லை. இந்த எண்ணங்களை என் பிள்ளைகளுக்கு நான் சொல்லி கொடுத்துவிட்டால் நான் என் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை முடிந்துவிடும்.
காடு பூங்கா நடைபயணம் - அக்டோபர் 8
போர்ட்லேண்ட் நகரில் உள்ள மிக பெரிய காடு Forest park என்ற காட்டுப்பகுதி, இங்கு ஒரு முறை அன்கிட் மற்றும் சுதாகர் அழைத்து சென்றுள்ளேன் , அதன் பிறகு ஒரு முழு பெருநடை செல்லும் வாய்ப்பு இப்பொழுது கிடைத்தது. இந்த முறை 8.7 மைல் தொலைவு பயணம். இந்த முறை தான் முதன்முதலில் 25 பேர் வரை கலந்து கொண்ட பயணம். போன முறை சேணம் மலை பயணத்தில் சந்தித்த Ernie என்ற உயர்ந்த மற்றும் கிண்டலாக பேசிக்கொண்டு வந்தவர். நிறைய பேர் இருந்தாலும் யாருடன் பேசுவது என்ற எண்ணமும்,
அவ்வளவாக பேசாமல் தான் பயணம் தொடர்ந்தது. Ernie யுடன் பேசும் பொழுது தான் தெரிந்தது அவர் ஒரு Body works செய்பவர் என்று - கார் உடைந்த வெளி பாகங்களை திருத்தி புதியகாராக மாற்றுபவர். சொந்தமாக workshop நடத்திவந்தவர், தான் போதை பழக்கத்தால் எல்லாம் இழந்துவிட்டு இப்பொழுது Dicks bodyworks வேலைக்கு செல்வதாக சொன்னார். போதை தவிர்ப்பது நல்லது என்று சொன்னார் , அதில் இருந்து வெளிவந்து இன்று இருப்பதே ஒரு பெரிய சாதனை. பின்பு பயணம் தொடர்ந்தது காலையில் ஒரு pepsi பாட்டில் திறக்க பலர் முயன்றனர்,"You look strong " என்று சொல்லி என்னிடம் கொடுத்தனர். பல நேரம் முயன்றும் திறக்க முடியவில்லை , அனால் பிறகு ஒரு பெண் மணியும் ஒரு மிக வலுவான தலையில் கொண்டை போட்டு கொண்டு ஒரு மல்யுத்த வீரன் போல இருந்த ஒருவர் திறந்து கொடுத்தார்.


அவர் தான் வழியில் இடைவெளியில் நான் அவரை பார்த்தபொழுது ஆப்பிள் துண்டு வெட்டி கொடுத்தார் , நான் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டேன். Ernie ஒரு துண்டு கொடுத்தார். முதலில் உணவு விடயங்களில் இருந்த தயக்கங்கள் இப்பொழுது நீங்கிவிட்டது. பின்பு பயணம் முடிந்து திரும்பும் பொழுது காலையில் US30 யில் இருந்து நடந்து வந்த இரு பெண்மணிகளுக்கு பூங்காவின் வாசலில் இருந்து அவர்கள் காரை நிறுத்திவைத்து இடத்தில் இரக்கிவிட்டு அறைக்கு திரும்பினேன்.
ஃபோரெஸ்ட் பூங்கா விற்கு ஹில்லசுபரோ வில் இருந்து செல்லும் சாலை German town என்ற ஊரின் வழியாக செல்லும். இது ஒரு மலைப்பாதை மற்றும் அழகிய வயல்களும் , காடுகளும் நிறைந்த சாலை பயணம். அறையை விட்டு ஒரு 15 நிமிடங்களில் ஒரு கிராம பாதைப்பயணம் போர்ட்லேண்ட் நகர வாழ்க்கையின் ஒரு சில சிறப்பு அம்சங்கள்.
15 அக்டோபர் 2016 - மொட்டைக்குன்று இரவு பெருநடை(Powelle Butte )
இன்று பவுர்ணமி தினம், அன்று நிலவை பார்க்கவும் , சூரியனின் அஸ்தமனத்தை ரசிக்கவும் போடப்பட்ட பயணம், ஆனால் இந்த வாரம் பெரும் புயல் ஒரேகன் கரையை கடக்கிறது. அதனால் எங்கும் புயல் எச்சரிக்கை வெளிய செல்லாமல் இருக்க தான் எல்லோரும் அறிவுறுத்தினர். அனால் என் மனம் செல்லத்தான் துடித்தது ஆனாலும் உள்மனம் உன்னிடம் நல்ல சப்பாத்து இல்லை , டார்ச் இல்லை என சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால் பயணத்தை தவிற்க திட்டம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அதுவும் இன்றி புயல் கடலை கடக்கும் அழகை அந்த 45 மைல் வேக காற்றின் பொழுது பசிபிக் பெருங்கடலின் அர்ப்பரிப்பை ரசிக்க மனம் ஏங்கியது. என் பயண தோழி தெய்வானை திறமை வாய்ந்தவள், பல பிரிதசங்களை சாதாரணமாக ஓடி கடந்தவள், அனால் தனியே புயலில் அவளை அழைத்து செல்ல தயக்கம். பின்பு பெருநடை செல்ல முடிவு எடுத்தேன். Dicks sporting goods கடையில் வாங்கிக்கொண்டு பிறகு புறப்பட்டேன். சுமார் 1 மணி நேர பயணம் போர்ட்லேண்ட் நகரில் அமைந்த ஒரு குறுங்காடு. புயல் எச்சரிக்கையை முன்னிட்டு அங்கு மூன்று பேர்கள் தான் இருந்தனர் தலைவர் தம்முடைய குதிரை வால் குடிமியுடன் வெள்ளை ஷார்ட்ஸ் உள்ள கருப்பு பேண்டுடன் நின்றுயிருந்தார். மனிதன் பயம் அறியாதவர் , எவ்வளவு பெயர் பயந்து குழுவில் கருத்துகள் போட்டிருந்தும் அங்கு வந்து இருந்தார்.
பின்பு சில நேரம் காத்திருந்தோம் whitney வருவாள் என்று அனால் வேறு ஒரு பெண்மணி வந்து சேர்ந்தார்.
புயல் எதுவும் இல்லை காற்றும் தணிந்து இருந்தது , அதனால் சிறு ஏமாற்றத்துடன் பயணம் தொடர்ந்தது. உள்ளே செல்ல செல்ல காடு எங்களை உள்வாங்கி கொள்ள கொள்ள அதன் காற்றின் மரத்தில் உரசும் ஒலியும் சிறு சாரலும் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சிவப்பு ஜாக்கெட் உடன் கண்களிலும் உடலிலும் ஒரு பேர் அமைதி கொண்ட பெண்மணி. எந்த ஒரு பரபரப்பா அல்லது படபடப்போ இன்றி மிக நளினமாக வந்து கொண்டிருந்தார்.
இது தான் என் இரண்டாவது hike என்றும் இதற்கு முன் ஒரு முறை இதே நிலவு நடைக்கு 7 மாதங்கள் முன் வந்தார். I like hiking ? என்று அவர் சொன்னார். நான் திமிருடன் பிடிக்கும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ஏன் இரண்டு பெருநடைக்கும் நடுவில் என் இந்த பெரும் இடைவெளி என்று சற்று கிண்டலுடன் கேட்டேன். அவள் வெகு பொறுமையுடன் குரலில் ஒரு கர்வம் இன்றி அந்த ஈகோ இல்லாமல் எந்த ஒரு குரலில் மாற்றம் இன்றி நான் நான்கு மதம் PCT சென்றிருந்தேன் என்றார். கடவுளே நான் என தவறு செய்தென் நான் எவ்வளவு முறை மன்னிப்பு கேட்டேன் என்பது எனக்கே தெரியாது , அங்கே அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது. அவள் பெயர் Angela!! அவர் 1200 மைல் தென் கலிஃபோர்னியாவில் இருந்து ஓரிகன் டிம்பேர் லாட்ஜ் வரை தனியாக பாலைவனங்களும், மலைகளும் , பள்ளத்தாக்குகளும் கடந்து வந்திருக்கிறார். தான் சந்தித்த மனிதர்களும் , கரடியின் வருகையும் . ஒவ்வொரு நாளும் எழுந்து காலை பயணத்தை தொடர்வதும் ஒரு பெரும் போராட்டமாக இருந்ததஇ விவரித்தார். அவளுடைய குரல் நான் இதுவரை கேட்காத இனிமை யானா குரல் , எதோ ஒரு பாடகி பேசுவது போன்ற ஒரு நளினம். அந்த குரலுக்காக வே அவளிடம் கேள்விகள் கேட்க தோன்றியது. வித விதமான மனிதர்களை சந்திப்பது வாழ்வு நமக்கு வழங்கும் ஒரு பெரிய வரம்.

மனிதர்கள் இன்றி வழியில் மழை ஓய்ந்து அந்த குளிர் இரவில் , காட்டின் பயணத்தில் ஒரு ஆந்தை துனை தேடி அழைக்கும் ஓலம் கேட்டது. அந்த ஒலியின் குரல் அந்த இரவின் ரமியத்தை கூட்டியது.
அந்த இரவெல்லாம் நடந்த நடைப்பயணத்தில் பௌர்ணமி நிலவை காண முடியவில்லை , மேற்கில் சூரியன் மறைவின் பொது மேகங்களில் அந்த ஆரஞ்சு நிறத்தின் ஒளி மறைந்தது நிலவின் வெண்ணிற ஒளி கரும் மேகங்களில் பரவியது. நிலவையும் சூரியன் அஸ்தமனதையும் , ஒன்று இரண்டு நட்சத்திரங்களுடன் அந்த பயணம் நிறைவு பெற்றது.. அனால் மனதில் ஒரு புதிய வாழ்க்கையின் பார்வை பெற்றது. பின்பு காய் நடுக்கத்துடன் காரை எடுத்து வழியில் குளிரால் விரைந்த கைகளுடன் , கல் வழியும் உடல் சோர்வும் மெதுவாக சாலையில் பயணிக்கையில் ஜன்னல் ஓரத்தில் வழியாக மெகா கூட்டத்தின் சிறு துளையின் வழியாக நிலவு மங்கை தன முழு முகம் காட்டி என்னை எட்டிப்பார்த்து புன்னகை புரிந்தாள்.
மவுண்ட் டபோர் பெருநடை பயணம்(Mount Tabor ) அக்டோபர் 30 2016
போர்ட்லேண்ட் நகர மையத்தில் அமைந்த பூங்கா மவுண்ட் தபோர். இது என்னுடைய கடைசி பெருநடை பயணம். மிக சாதாரண நடை கொண்ட பயணம். எண்ணங்கள் யாவும் அங்கு இன்றி மனம் திரும்ப திரும்ப ஸஹார் எங்கோ அழைத்து செல்வதில் மனம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கு கிழக்கு கடற்கரையில் இருந்து வந்த ஒரு வாலிபன் உடன் பேசும் வாய்ப்பு இருந்தது அவன் ஒரு மழைக்கு அணியும் உரை உடை அணிந்து ஒரு மன்னனை போல வந்தான்.
அவன் ஒரு பெண்னின் துணைக்காக அங்கிருந்து காரில் நண்பருடன் பயணித்து வந்ததாக சொன்னான். உலகில் பெண்கள் ஆண்களை எங்கும் வர செய்யும் வலிமை உள்ளது. பெண்ணுக்காக தான் ஆண் வாழ்கிறான். நான் அவ்வளவாக யாருடனும் பேசவில்லை அது ஒரு மழை நாள் என்பதால் ஆட்களும் குறைவு. பயணத்தை முடித்துக்கொண்டு நான் திரும்ப வந்தேன்.