பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் - யார் காரணம் ?
பாரிஸில் வார விடுமுறை தொடங்கிய நாள் , என்றும் போல மக்கள் மகிழ்ச்சியுடன் நண்பர்களுடனும் குடும்பத்துடன் நேரம் செலவிடர அரம்பித்திருப்பர் .அவர்கள் ஒரு கால்பந்து விளையாட்டை பார்க்கவும், இசையை கேட்கவும் , கடை தெருவில் நடத்து கொண்டிருந்த நடுத்தர மக்கள் .
அவர்களை துப்பாக்கி முனையில் தாக்க வேண்டிய காரணம் என்ன? அந்த அளவுக்கு ஏன் இந்த வெறி? இதை நோக்கி அவர்களை எந்த கொள்கை கொண்டு சென்றது ? ஜிஹாத் என்று முழங்க வேண்டிய அவசியம் ஏன் ?
இறந்த 128 மக்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? ஒவ்வொரு உயிர்க்கும் பதில் சொல்லவேண்டியது யார்? ISIS அமைப்பா ? பிரான்ஸ் அரசாங்கமா ? ஐக்கிய நாடுகள் சபையா? இல்லை இஸ்லாமிய அரசாங்க கூட்டமைப்பா ?
இந்த கேள்விக்கு பதில் தேட வேண்டும் என்றால் 2000 வருட இஸ்மாலிய, கிருஸ்தவ போர் பற்றி தெரிய வேண்டும், .அது மற்றும் இன்றிய ஷியா மற்றும் சுன்னி இஸ்லாமியர்களின் பகைமை பற்றி அறியவேண்டும்.அதை சொல்ல இந்த வலைபதிப்பின் நோக்கம் அல்ல
பாரிஸ் தாக்குதல் பதில் தேட சிரியா பிரச்னைகாண தேடலில் இருந்து தொடங்கலாம் . ISIS சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைபற்றியுள்ளது.பாகத் கட்சி பஷர்-அல் -ஆசாத் இப்பொழுது ஆட்சியில்யுள்ளது .இந்த ஆட்சிக்கு அமெரிக்க ,இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அங்குள்ள மதசார்பற்ற குழுக்களுக்கு சி .இ .எ அமைப்பு அதரவு உள்ளது, இதில் முரண் என்வென்றால் இந்த குழுவில் அல்கைதா அமைப்பு உள்ளது! இந்த குழப்பம் இன்றி ISIS அமைப்புக்கு சவுதிஅரேபியா மற்றும் பிற அரேபியா நாடுகள் ஆதரவு உண்டு,ஆனால் அவர்கள் ஏன் சிரியா அரசாங்கத்திற்கு எதிர்ப்பு எனில் அது ஒரு ஷியா அரசாங்கம். இத்தகைய முன்று குழுகளால் சிரியா பிறித்து ஆளப்படுகிறது .ரஷ்ய மற்றும் ஈரான் சிரியா அரசை ஆதரிக்கின்றன ,ஈரான் ஷியா ஆட்சி என்பதால் ,ரஷ்ய சுமார் 50 வருடங்களாக அரசியல் மற்றும் அமெரிக்க பனி போர் காரணங்களுக்காக. ஒரு நாட்டில் குழப்பம் இருக்கலாம்,ஆனால் நாடே குழப்பத்தில் இருக்ககூடாது.
இதனால் மக்கள் அகதிகளை போல ஐரோப்பா கண்டதை நோக்கி செல்கின்றனர்.இதுவரை 250000 மக்கள் நான்கரை ஆண்டுகளில் இறந்துள்ளனர்,இந்த உயிர் பலிக்கு யார் காரணம்? இது உயிர் இல்லையா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? இதை எந்த ஊடகம் கூறுகிறது . இதை சொல்வதற்கான 128 மக்களின் உயிர் போனால் பரவாயில்லை என்ற எண்ணம் அல்ல , அல்லது கணக்கில் 250000 பெரியது என புள்ளிவிபரம் அல்ல,ஒரு உயிரும் உயிர்த்தானே? நம் குடும்பத்தில் ஒரு உயிர் போனால் அதை புள்ளிவிபரமாக விட்டுவிடுவோமா?
128 உயிர்களின் பலி ஒரு உண்மையான காரணம் ISIS மட்டுமல்ல , பிரெஞ்சு,ரஷ்ய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களும் காரணம் . இதைபோல இன்னொரு உயிர் இழப்பதை தவிர்க்க வழி என்ன? அந்த அந்த நாட்டு பிரச்சனையை அந்த நாட்டு மக்களே திற்க வழிவிட்டு நடுவில் புகுந்து நாட்டாமை செய்வதை தவிர்த்தாலே போதும்.
No comments:
Post a Comment