ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமுலம் - கூறுவது என்ன
ஜான் பெர்கின்ஸ் ஆங்கிலத்தில் எழுதிய Confession of an economic hitman என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இந்த புத்தகம் முதலில் திரு ரா முருகுவேல் அவர்களால் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமுலம்" என்ற பெயரில் விடியல் பதிப்பகதால் வெளியிடப்பட்டது, இதன் அடுத்த பதிப்பாக திரு போப்பு அவர்களின் பெயரில் வெளியிட பட்டிருக்கிறது.அமெரிக்க வல்லரசின் ஏகாதிபத்தியத்தை (Imperialism ) அடைய மேற்கொண்ட வழிகளை கூறும் சுயசரிதை நூல்.
230 வருடங்களுக்கு முன் அமெரிக்க குடியரசு உருவாகி அது கடந்து வந்த பாதை, உலக மக்களுக்கு ஜனநாயகத்தின் மிதான நம்பிக்கை உருவாக்கியது. லௌகிகத்தை கடந்து ஆன்ம நெறியை,அறத்தை கோட்பாடாக கொண்டது.அனைவருக்கும் சமநீதி,சமஉரிமை என்பதை அடிப்படையாக கொண்டது.அது ஒரு கற்பனை கனவாக இல்லாமல் சொல், செயல் , பேச்சு , மூச்சு என கொண்டிருந்தது .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என செயல் பட்டது . ஆனால் அது இன்று நிருவனவியல் காரணமாகவும்,நுகர்வு கலாச்சாரத்தாலும் இன்று தன் கோட்பாட்டை விட்டு விலகி வெகு தூரம் சென்று விட்டது.ஜெபர்சன் , தாமஸ் பயனே , மார்டின் லூதர் கிங், ரூசெவேல்ட் போன்ற அமெரிக்க தலைவர்களின் கனவை கானல் நீர்ராக்கியது
முன்பு ஒரு நாடு வளர்ச்சி அடைய இன்னொரு நாட்டின் மிது படை எடுக்க வேண்டிருந்தது.தனக்கு தேவையான உணவு மற்றும் மூலபொருட்கள் பெற, பின்பு தான் தயாரித்த பொருட்களை விற்க, சந்தையை பெருக்க தேவை பட்டது.ஆனால் அமெரிக்க வியட்நாம் போரினால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பண விரயம் காரணத்தால் மாற்று வழியை கண்டு பிடிக்க வேண்டிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது .மீநேமராஹ் -அமெரிக்க உள்துறை அதிகாரியால் உருவாக்க பட்ட திட்டம் தான் உலக வங்கி , USAID (United states AGENCY for International AID ). அது எண்ணெய் மற்றும் இயற்கை வளமுள்ள தென் அமெரிக்க மற்றும் ஆசியா நாடுகளை கண்டெடுத்து, நாட்டில் தன் நிறுவனங்களை பொருளாதார ஆராயிச்சி என்ற பெயரில் அங்கு அனுப்பி மின்சாரம்,சாலை ,நீர் அணை , கட்டி தருவதாக கூறிவது அதனால் நாட்டின் வளரச்சி அடையும் என்று கூறுவது. அதற்காக பொய்யான அறிக்கை தயாரித்து அந்த அரசிடம் தருவது.அதை ஏற்று கொண்டால் அந்த அரசுக்கு உலக வங்கி முலம் அதிக வட்டிக்கு கடன் தருவது, பின்பு அந்த கட்டுமான வேலைக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு கொடுக்க சொல்லி வலியுறுத்துவது.பணத்தை கொடுத்து பின்பு தானே வாங்கிவிடுவது .அந்த அரசு வட்டி கட்டவும், இந்த செலவினால் ஏழை எளிய மக்களின் நல திட்டங்களை நிறுத்துவது.அதனால் அவர்கள் பாதிப்பு அடைவர். அந்த நாடு திவால் ஆகும் நிலைமையில் அந்த நாட்டின் எரிபொருள், இயற்கை வளங்களை சுரையாடுவது.இதை பற்றி எந்த வருத்தமும் இல்லாமல் பொய்யான ரிப்போர்ட் தயாரிப்பதும் ,லஞ்சம் ,கொடுப்பதும், பெண்களை கூட்டி கொடுப்பதும் காரியங்களை செய்வது தான் பொருளாதார அடியால் வேலை.இவர்களுக்கு கை நிறைய சம்பளமும்,உக்க தொகை,பங்குகள் வழங்குவதுடன் அவர்கள் ஆடம்பரமாக வாழ்வதால் சமுதாயத்தால் மதிக்க படுபவர்கள் .இத்தகைய கொள்கைக்கு பலமான காரணங்கள் வேறு அடியாட்கள் கொண்டிருந்தனர். " தகுதியுள்ளதே வாழும்", ஒரு சாரார் கிழ் தரமான வாழ்கை வாழ்வது அவர்கள் வாங்கி வந்த வரம் என நம்பினர்.
இப்படி பொருளாதார அடியாட்களால் ஒப்புக்கொண்ட நாடு தான் சவுதி அரேபியா , அதனால் அந்த நாடு ISIS போன்ற பயங்கர வாத அமைப்புக்கு ஆதரவு தந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பது. அப்படி ஒத்து கொள்ளாமல் எதிர்த்த நாடு தான் இராக்,அது இப்பொழுதய நிலைமை நமக்கு தெரியும்.இதை போல அமெரிக்க எகாதியபத்தியதை எதிர்த்த மக்களால் தேர்ந்தடுக்கபட்ட தென் அமெரிக்க நாடான இக்குவேடோர்(Ecuador ) ஜெயமே ரோல்டோஸ் விமான விபத்தில் சி ஐ ஏ வால் கொல்லப்பட்டார் . ஓமர் டொரிஜோஸ் பனாமா கால்வாய் பனாமா மக்களுக்கே சொந்தம் என்று போராடிய தலைவரும் விமான விபத்தில் கொல்லபட்டார். பனாமா கால்வாயை கை பற்ற அமெரிக்க சுதந்திர நாடு மிது தாக்குதல் நடத்தியது.இத்தகைய உண்மை சம்பவங்கள் ஈரான், கோட்டமாலா(Guatamala ) சிலி (Chile ) ஏன பல நாடுகள் பட்டியல் தொடர்கிறது .
அமெரிக்க வல்லரசாக இருப்பதற்கான முக்கியமான காரணம் உலகின் செலாவணி ஊடகமான டாலர் இருப்பதால் ,அதை அச்சடிக்கும் உரிமை தன் வசம் உள்ளதால் அமெரிக்க ஏகாதிபத்தியமாக நிடித்துகொண்டுள்ளது.உலக செலவாணி இறுக்கும் வரை அதன் நிதிநிலை சரிய வாய்ப்பு இல்லை .2004 கணக்கின் படி 7 ட்ரிலியன் டாலர் அமெரிக்காவுக்கு கடன் உள்ளது அது கிட்டதட்ட 25000 டாலர் ஒரு குடிமகனின் தலையில் விடியும்.டாலர்க்கு மாற்றாக இன்றுவரை எந்த வழியும் இல்லை. இரோவை வளர விடாமல் தடுக்க பல வகை அமெரிக்க கை ஆள்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் குறைக்க எழுத்தாளர் வலியுறுத்தும் வழிகள்
எரிபொருள் தேவையை குறையுங்கள் .சிறிய விட்டில் வாழ கற்றுகொள்ளுங்கள் , உடை , தளவாடங்கள்,அடம்பர தேவைகள் குறையுங்கள், இத்தகைய தேவைகள் தான் ஏழை நாட்டில் நிறுவனங்கள் கொத்தடிமையாக மக்களை நடத்துவதற்கும்,இயற்கை சுரையாடுவதற்கும் வழி செய்கிறது .நிருவனவியதிற்கு எதிராக பேசுங்கள்.இயற்கை மதிக்க கற்று கொள்ளுங்கள்.பொறுப்பு உணர்வுடன் உலக குடிமகனாக இறுங்கள்.
1 comment:
நல்ல பயனுள்ள கட்டுரை ஆனந்த். அதுவும் கடைசியில் மொத்த கருத்தையும் எளிதாக சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
நிறைய எழுதுங்க பாஸ். படிக்க நாங்க இருக்கோம்....
Post a Comment